என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farm Machinery Training"

    • அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பண்ணை எந்திரம் ஆக்குதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
    • இந்த பயிற்சி முகாமுக்கு கொளத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜகோபால் தலைமை வகித்தார். உதவி தோட்டக்கலை அலுவலர் உதயகுமார் முன்னிலை வகித்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்த தின்னப்–பட்டியில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பண்ணை எந்திரம் ஆக்குதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சி முகாமுக்கு கொளத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜகோபால் தலைமை வகித்தார். உதவி தோட்டக்கலை அலுவலர் உதயகுமார் முன்னிலை வகித்தார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் இந்துமதி, உதவி வேளாண் அலுவலர் சங்கீதா ஆகியோர் வேளாண்மை துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து பேசினர். இதில் 50 விவசாயிகள் பங்கேற்றனர்.

    விவசாயத்தில் பண்ணை எந்திரங்கள் பயன்பாடுகள், வேளாண்மை துறை திட்டங்கள், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் சொட்டுநீர் பாசனத்தின் முக்கியத்துவம் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    ×