என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    15, 16-ந் தேதிகளில் 4 மாவட்ட வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்யும் முதலமைச்சர்
    X

    15, 16-ந் தேதிகளில் 4 மாவட்ட வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்யும் முதலமைச்சர்

    • வேலூர் மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
    • 4 மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

    சேலம்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று, அனைத்து துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய, 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.

    சமீபத்தில் வேலூர் மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் தொடர்ச்சியாக, சேலம் மண்டலத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறும் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வருகிறார்.

    சேலம் மாவட்டத்தில் நடக்கும் இக்கூட்டத்தில், 4 மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார். இதனையடுத்து, இக்கூட்டத்தில் விவாதிக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த 2021-22-ம் ஆண்டு மற்றும் நடப்பு 2022-23-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், நிதி ஒதுக்கீடு குறித்து விவரங்கள் அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இவற்றை ஒவ்வொரு ஒன்றியம் மற்றும் தாலுகா வாரியாக, அனுப்பும்படி முதலமைச்சரின் தனிச்செயலாளர் உதயசந்திரன், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×