search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலா வேன் சுவற்றில் மோதி விபத்து

    • ஏற்காட்டில் படகு இல்லம், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்த அவர்கள், இரவு 7 மணி அளவில் ஊர் திரும்பினர்.
    • வேனில் பிரேக் பிடிக்காததால், கட்டுப்பாட்டை இழந்து ஓடி மலைப்பாதையில் உள்ள சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.

    ஏற்காடு:

    தர்மபுரி மாவட்டம் அரூர் மருதிப்பட்டி பகுதியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் ஆதிதிராவிட அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் பிளஸ்-2 படிக்கும் 75 மாணவ, மாணவிகள், 9 ஆசிரியர்கள் நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டை சுற்றிப் பார்க்க 3 வேன்களில் வந்துள்ளனர்.

    ஏற்காட்டில் படகு இல்லம், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்த அவர்கள், இரவு 7 மணி அளவில் ஊர் திரும்பினர். இந்த நிலையில் ஏற்காடு, கொட்டச்சேடு அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு வேனில் பிரேக் பிடிக்காததால், கட்டுப்பாட்டை இழந்து ஓடி மலைப்பாதையில் உள்ள சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஆசிரியர் தண்டபாணி (வயது45) கால், தோள்பட்டை மற்றும் தலையில் பலத்த காயங்களுடன், நாகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

    விபத்துக்குள்ளான வேனில் மாணவிகள் மட்டுமே பயணித்தனர். இதில் பிளஸ்-2 மாணவி சவுபுராணி (வயது 17) மற்றும் ஓட்டுனர் சசிகுமார் உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் மாணவிகள் யாழினி, பரிமளா, ஸ்ரீநிதி, உத்ரா, தர்ஷினி ஆகியோர் லேசான காயங்களுடன் முதலுதவி செய்யப்பட்ட வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தகவல் அறிந்த ஏற்காடு போலீசார் சம்பவ இடம் விசாரித்து போக்குவரத்தை சரி செய்தனர்.

    Next Story
    ×