என் மலர்tooltip icon

    சேலம்

    • வாழப்பாடியை தலைமையிடமாக கொண்டு, 2005-ம் ஆண்டு செப்டம்பர் 24–-ந்தேதி, தனி காவல் உட்கோட்டம் அமைக்கப்பட்டது.
    • காவலர்களின் பணிச்சுமையும், வழக்குகளின் கோப்புகள் தேக்கமும் ஏற்படுகிறது.

    வாழப்பாடி:

    சட்டம்-ஒழுங்கை காக்கவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன்னால் நிறுத்தவும் காவல்துறை தீவிர பணியாற்றி வருகிறது.

    சேலம் மாவட்டம் வாழப்பாடியை தலைமை யிடமாக கொண்டு, 2005-ம் ஆண்டு செப்டம்பர் 24–-ந்தேதி, தனி காவல் உட்கோட்டம் அமைக்கப்பட்டது. வாழப்பாடி, காரிப்பட்டி, ஏத்தாப்பூர் கருமந்துறை மற்றும் கரியக்கோயில் ஆகிய 5 காவல் நிலையங்களும், வாழப்பாடியில் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்பட மொத்தம் 6 காவல்நிலையங்கள் இந்த உட்கோட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

    உட்கோட்ட தலைமையிடமான வாழப்பாடி காவல் நிலையத்திற்கு 30 ஆண்டுக்கு முந்தைய கணக்குப்படி இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏட்டுகள், காவ லர்கள் உள்ளிட்ட 38 பணியி டங்களும், காரிப்பட்டி காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 31 போலீசாரும், ஏத்தாப்பூர் மற்றும் கல்வராயன்மலை கருமந்துறை காவல் நிலை யத்திற்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் உள்பட தலா 30 பணியிடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    கல்வராயன் மலை கருமந்துறை இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டில் உள்ள கரியக்கோயில் காவல் நிலையத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் தலைமை யில் 28 போலீஸ் பணியி டங்களும், வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பெண் காவலர்கள் உள்பட 17 பணியிடங்களும் ஏற்படுத்தப்பட்டன. 30 ஆண்டுகளில் மக்கள் தொகை 2 மடங்காக உயர்ந்துள்ள நிலையில், இதற்கேற்ப காவலர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.

    இதுமட்டுமின்றி, ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்களிலும் 10 சதவீதற்கு மேல் காலியாக உள்ள நிலையில், நீதிமன்ற அலுவல், வாகன ஓட்டுநர், காவல் நிலைய சென்ட்ரி, பாரா, எழுத்தர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணிகளுக்கு ஒதுக்கப்பட்வர்கள் தவிர்த்து, தினந்தோறும் பாதிக்கு குறைவான அளவிலேயே காவலர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் ரோந்து பணிகளை மேற்கொள்ள முடிகிறது.

    இதனால், காவலர்களின் பணிச்சுமையும், வழக்குகளின் கோப்புகள் தேக்கமும் ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி, அந்தந்த காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் இரவு நேர ரோந்து பணிகள் மேற்கொள்வது, வாகன தணிக்கை , சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்படுகிறது.

    எனவே, வாழப்பாடி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட6 காவல் நிலை யங்களிகளிலும், காலியாக உள்ள அனைத்து பணியி டங்களையும் நிரப்பவும், அதிகரித்து வரும் புதிய குடியிருப்பு பகுதிகள், தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் மற்றும் மக்கள் தொகைக்கேற்ப, கூடுதல் பணியிடங்களை உருவாக்கி போதிய போலீசார் நிய மிக்கவும், சேலம் மாவட்ட காவல்துறையும் மற்றும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுகுறித்து ஓய்வு பெற்ற காவலர்கள் கூறுகையில், 'வாழப்பாடி காவல் உட்கோட்டத்தில் மட்டுமின்றி மாவட்டம் முழுவதுமே 30 ஆண்டு

    களுக்கு முன் ஒதுக்கப்பட்ட பணியி டங்களிலேயே இன்றும் உள்ளது. பணி யிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. இதிலும் பல பணியிடங்கள் காலியாக உள்ளது. டிஎஸ்பி அலுவலகத்திற்கென தனியாக பணியாளர்கள் நியமிக்கப்படுவதில்லை. இதனால், காவல் நிலை

    யங்களுக்கு நிய மிக்கப்பட்டுள்ள போலீசாரே அங்கும் பணிபுரிகின்றனர்.

    இந்நிலையில் தற்போது, குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மக்கள் தொகை யும் இரு மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் போலீசாருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதோடு, கோப்புகளும் தேக்கமடை யும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே, காலி பணியிடங்களை நிரப்பவும், மக்கள் தொகைக்கேற்ப கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்தவும், உயரதிகாரிகள் புள்ளி விபரங்களோடு பட்டியலிட்டு அரசுக்கு அறிக்கை சமர்பித்தால், எதிர்வரும் காலங்களில் காவலர்களின் பணிச்சுமை குறைவதோடு, சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு பணிகளையும் சுணக்கமின்றி நிறைவேற்ற முடியும்' என்றனர். 

    • மாநில பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வு-2023 (சி.யு.இ.டி) அறிவிப்பு தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
    • இணையவழி விண்ணப்பப்பதிவு நேற்று இரவு முதல் தொடங்கியுள்ளது.

    சேலம்:

    மத்திய பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு மாநில பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வு-2023 (சி.யு.இ.டி) அறிவிப்பு தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதற்கான இணையவழி விண்ணப்பப்பதிவு நேற்று இரவு முதல் தொடங்கியுள்ளது. வருகிற மார்ச் மாதம் 12-ந்தேதி வரை இணையதள வழியில் விண்ணப்பிக்கலாம்.

    தேர்வு வருகிற மே மாதம் 21-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது. விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு செய்யப்படும் பாடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் 3 ஷிப்டுகளாக தேர்வு நடத்தப்படும்.

    சேலம், நாமக்கல்

    தேர்வு நடைபெறும் நகரங்கள் மற்றும் மையங்கள் குறித்த விபரம் ஏப்ரல் மாதம் 30-ந்தேதி அறிவிக்கப்படும். தேர்வறை நுழைவுச்சீட்டை (ஹால்டிக்கெட்) மே மாதம் 2-வது வாரத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    யு.ஜி.சி. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தன் அடிப்படையில் கடந்த ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிகளில் சேர சி.யு.இ.டி. நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது . கடந்த ஆண்டு இந்த தேர்வை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த பிளஸ்-2 மாணவ- மாணவிகள் ஏராளமானோர் எழுதினர் . இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. 

    • அறிவுசார் குறையுடையோர் இல்லம் அமைக்க சேலம் மாவட்டத்திற்கு ரூ.12.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் அறிவுசார் குறையுடையோர் இல்லம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    2022 – 2023-ம்

    நிதியாண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மானியக் கோரிக்கையின் போது சேலம் மாவட்டத்தில் ரூ.12.50 லட்சம் செலவில் அறிவுசார் குறையுடையோர் இல்லம் அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி அறிவுசார் குறையுடையோர் இல்லம் அமைக்க சேலம் மாவட்டத்திற்கு ரூ.12.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் அறிவுசார் குறையுடை யோர் இல்லம் அமைக்க 40 நபர்கள் தங்கும் வசதியுடன் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாற்றுத்தி றனாளிகள் நலச்சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வருகிற 14-ந்தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அவர் மீது வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் குரங்குச்சாவடி அம்மன் பேக்கரி முன்பு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்து அவர் பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் பற்றி

    விசாரணை நடத்தி வரு கிறார்கள். இறந்த முதியவர் பெயர் மற்றும் ஊர் முகவரி தெரியவில்லை. இதனால் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க முடியவில்லை. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 1930–ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சேலம்- – விருத்தாசலம் ரெயில்பாதை அமைக்கப்பட்டது.
    • குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராமல் பழுத டைந்து கிடக்கின்றன. இரவு நேரத்தில் மின்விளக்குகளும் முறை யாக எரிவதில்லை.

    வாழப்பாடி:

    சேலம், விழுப்புரம், கடலூர் மாவட்ட கிராமப்புற மக்களின் போக்குவரத்தை கருத்தில் கொண்டு, 1930–ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சேலம்- – விருத்தாசலம் ரெயில்பாதை அமைக்கப்பட்டது. 90 ஆண்டுகள் பழமையான இந்த குறுகிய ரெயில்பாதை, 2007-ம் ஆண்டு அகல ரெயில் பாதையாக தரம் உயர்த்தப்பட்டது.

    137 கி.மீ., நீளமுள்ள சேலம்-–விருத்தாசலம் ரெயில்பாதையை மின் மையமாக்கும் திட்டத்திற்கு 2019–ல் மத்திய அரசு அனுமதி அளித்தது. 2 ஆண்டுகளாக நடைபெற்ற மின் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததால், கடந்த ஓராண்டாக இந்த வழித்தடத்தில் சேலம்- விருத்தாசலம், சேலம்-–சென்னை-எழும்பூர்- பெங்களூர்-காரைக்கால் மின்சார ரெயில்களும், சிறப்பு மற்றும் சரக்கு ரெயில்களும் இயக்கப்படுகிறது.

    சேலம் சந்திப்பு

    விருத்தாசலம் ரெயில் வழித்தடத்தில், சேலத்தில் இருந்து 30 வது கி.மீ., தூரத்திலுள்ள வாழப்பாடி முக்கிய ரெயில் நிறுத்தமாக விளங்கியது. 15 ஆண்டுகளுக்கு முன், வாழப்பாடியின் தென் கிழக்கு பகுதியில், புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே, பயணிகள் தங்குமிடம், பயணச்சீட்ட முன்பதிவு மையம், பணியாளர்கள் குடியிருப்பு, நடைமேடை, கூடுதல் ரெயில் பாதைகள், சரக்கு வைப்பகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் ரெயில் நிலையம் இயங்கி வந்தது.

    மீட்டர் கேஜ் பாதை அகல ரெயில்பாதையாக மாற்றப்படுவதற்கு முன், ரெயில் நிலையம் மூடப்பட்டதோடு பாழடைந்த கிடந்த கட்டிடங்களும் 10 ஆண்டுக்கு முன்பே இடிக்கப்பட்டது. இதனையடுத்து, அகல ரெயில்பாதை அமைக்கப்பட்ட பிறகு வாழப்பாடியின் மையப்ப குதியான தம்மம்பட்டி சாலை ரெயில்வே கேட் பகுதியிலேயே 'எப்' வகுப்பு ரெயில் நிறுத்தம் அமைக்கப்பட்டது.

    பயணச்சீட்டு வழங்கும் அறையை தவிர, பொருள் பாதுகாப்பு மற்றும்

    பயணிகள் காத்திருப்பு

    அறைகள் அமைக்கப்பட வில்லை. ஏறக்குறைய ஒரு கி.மீ., தூரமுள்ள நடை

    மேடையில், 3 இடங்களில்

    மட்டும் சிறிய அளவில்

    நிழற்குடை அமைக்கப்பட்டு ள்ளது. பயணிகளுக்கான கட்டப்பட்டுள்ள கழிப்பி டங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கிறது.

    குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராமல் பழுத டைந்து கிடக்கின்றன. இரவு நேரத்தில் மின்விளக்குகளும் முறை யாக எரிவதில்லை. தனியார் முகவரால் பயணச்

    சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. முன்பதிவு வசதிகள் ஏற்படுத்தவில்லை. இதனால், வாழப்பாடி ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இருப்பினும், சேலம் –விருத்தாலம் வழித்தடத்தில் கணிசமான வருவாய் ஈட்டிக்கொடுக்கும் ரெயில் நிறுத்தங்களில் ஒன்றாக வாழப்பாடி விளங்கி வருகிறது.

    எனவே, பயணிகள் நலன் கருதி, பயணிகள் பொருள் பாதுகாப்பு அறை, நடைமேடை முழுவதும் பயணிகள் நிழற்குடை, நவீன கழிப்பிடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பயணச்சீட்டு முன்ப திவு மையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, வாழப்பாடி ரெயில் நிறுத்தத்தை தரம் உயர்த்திட சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

    • கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது.
    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.79 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 69.84 டி. எம்.சி. ஆகவும் உள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருவதால், அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,454 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று அணைக்கு வரும் நீரின் அளவு 1,466 கன அடியாக இருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 1,454 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 103.79 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 69.84 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.

    • சேலம் வின்சென்ட் குமாரசாமிபட்டியில் தற்போது 2-ம் நிலை காவலர் தேர்வு நடைபெற்று வருகிறது.
    • காலை 8 மணி அளவில் வாலிபர் ஒருவர் ஆயுதப்படை மைதானத்தில் நின்றிருந்த போலீஸ் ஜீப்பில் அமர்ந்து கொண்டு, ஜீப்பின் பாகங்களை கழட்டிக் கொண்டிருந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட காவல்துறையின் ஆயுதப்படை மைதானம் சேலம் வின்சென்ட் குமாரசாமிபட்டியில் உள்ளது. இங்கு தற்போது 2-ம் நிலை காவலர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் வாலிபர் ஒருவர் ஆயுதப்படை மைதானத்தில் நின்றிருந்த போலீஸ் ஜீப்பில் அமர்ந்து கொண்டு, ஜீப்பின் பாகங்களை கழட்டிக் கொண்டி–ருந்தார்.

    இதைக் கண்ட போலீஸ்காரர் ஒருவர், அந்த நபரிடம் விசாரித்த–போது, அந்த வாலிபர் தான் அரசு அதிகாரி என்றும், வாகனத்தை சோதனையிட வந்ததாகவும் முன்னுக்கு பின் முரணாக தெரிவித்தார்.

    ஆனால் அவர் அந்த வாகனத்தை திருடி செல்வதற்காக சாவி போடும் பகுதியை கழற்ற முயற்சித்து உள்ளதையும், அவர் போலி அதிகாரி என்பதையும் போலீஸ்காரர் கண்டுபிடித்தார்.

    இதையடுத்து சந்தேகமடைந்த போலீசார், வேறு ஏதும் வாகனங்கள் திருடப்பட்டு உள்ளனவா என மைதானத்தில் நிறுத்தியிருந்த வாகனங்களை சரிபார்த்த போது, ஜீப் ஒன்று ஏற்கனவே காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து உடனடியாக அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள குறுக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் மதன் (வயது 36) என்பதும், அவர் அந்த மாயமான ஜீப்பை திருடி, சூரமங்கலம் ரெயில் நிலையத்தில் உள்ள கார் பார்க்கிங்கில் நிறுத்தி இருப்பதும் தெரியவந்தது.

    போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஜீப்பை மீட்டு அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து 2-வது முறையாக ஜீப்பை திருட முயன்றபோது பிடிபட்டுள்ளார். இவர் அரசு துறை துணை இயக்குநர் எனக்கூறி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    போலீசார் வாகனங்களை குறி வைத்து திருடி வந்ததும் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து மதனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சேலம் லீ பஜார் அருகே உள்ள மணிபுரம் பகுதியில் மாரி என்பவருக்கு சொந்தமான ஒரு பருப்பு மில்லில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • நேற்று இரவு வழக்கம்போல் வேலைக்கு வந்த தங்கையன் மில்லில் இரவு காவல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    சேலம்:

    சேலம் கொண்ட–லாம்பட்டி அருகே உள்ள அமானி கொண்டலாம்பட்டி, சித்தன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கையன் (வயது 58). இவர் சேலம் லீ பஜார் அருகே உள்ள மணிபுரம் பகுதியில் மாரி என்பவருக்கு சொந்தமான ஒரு பருப்பு மில்லில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம்போல் வேலைக்கு வந்த தங்கையன் மில்லில் இரவு காவல் பணியில் ஈடுபட்டு இருந்தார். இன்று காலை மில்லின் உரிமையாளர் மாரி, வந்து பார்த்தபோது, தங்கையன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தங்கையனின் குடும்பத்தினர், உடல்நிலை சரியில்லாமல் அவர் இறந்திருக்கலாம் என்று கருதி, தங்கையனின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது, தங்கையன் தலையில் காயம் இருப்பதும், கழுத்தில் துண்டால் இறுக்கிய தழும்பும் இருப்பதும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தங்கையனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தங்கையனின் கழுத்தில் காயம் இருப்பதால், மில்லுக்குள் புகுந்த மர்ம நபர்கள் தங்கையனை கொலை செய்து விட்டு தப்பி சென்றனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தங்கையன் எவ்வாறு இறந்தார் என்பது தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பருப்பு மில்லில் இரவு நேர காவலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேங்காய் நார் குடோனில் நேற்று இரவு திடீரென தீ பற்றியது.
    • காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பற்றி எரிந்தது.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம், கே ஆர் தோப்பூர் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (45).

    இவருக்கு சொந்தமாக தேங்காய் நார் குடோன் உள்ளது.

    இந்த தேங்காய் நார் குடோனில் நேற்று இரவு திடீரென தீ பற்றியது. காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதனால் அக்கம்பக்கம் உள்ளவர்கள் தீயை அணைக்க முயன்றனர். எனினும் தீ வேகமாக பரவி எரிந்ததால் அணைக்க முடியவில்லை. தொடர்ந்து

    தீ கட்டுக்குள் வராததால் ஓமலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அனைத்தனர். வெகுநேர போராட்டத்திற்கு பின்பு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.

    இந்த தீ விபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள நார் முற்றிலும் எரிந்தது.

    இதுதொடர்பாக தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அருள்பா–லிக்கும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு வருடபிறப்பு, ஆடி வெள்ளி, சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி, தை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
    • நாளை (10-ந் தேதி) தை கடைசி வெள்ளிக்கிழ–மையை முன்னிட்டு, சுகவனேஸ்வரர் கோவில் சொர்ணாம்பிகை அம்ம–னுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாரதனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    சேலம்:

    சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் 2000 ஆண்டு பழமையானது.

    இக்கோவிலில் அருள்பா–லிக்கும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு வருடபிறப்பு, ஆடி வெள்ளி, சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி, தை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

    சொர்ணாம்பிகை அம்மனை வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம், குழந்தை பேறு, வம்பு வழக்குகளில் இருந்து விடுதலை, நோய் நீக்குதல் என பல்வேறு நன்மைகளும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தை மாத வெள்ளிக்கிழமைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபடுவார்கள்.

    நாளை (10-ந் தேதி) தை கடைசி வெள்ளிக்கிழ–மையை முன்னிட்டு, சுகவனேஸ்வரர் கோவில் சொர்ணாம்பிகை அம்ம–னுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாரதனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 6:30 மணிக்கு சொர்ணாம்பிகை அம்ம–னுக்கு தை கடைசி வெள்ளி உற்சவம் நடைபெற உள்ளது. இதில் 18 ஆயிரம் வளையல்கள் அம்மனுக்கு சாத்துப்படி செய்யப்படுகிறது.

    இரவு 7 மணிக்கு மேல் அம்மனுக்கு சாத்துப்படி செய்யப்பட்ட 18 ஆயிரம் வளையல்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    விழாவையொட்டி வடக்கு நுழைவு வாயில் பக்தர்கள் நடந்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வாகனங்களில் வரும் பக்தர்கள் நந்தவனம் வாயில் வழியாக வந்து சுப்ராயன் சாலை வழியாக வெளியே செல்ல தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    • தாய் தேன்மொழி வசந்தின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட–போது அவர் அழைப்பை எடுக்க வில்லை.
    • செல்லாங்காடு என்ற இடத்தில் உள்ள ஒரு பாறையின் மீது செல்போன் இருந்ததாகவும், அதற்கு அருகில் டூவீலர் இருப்பதாகவும், 2 செருப்புகள் அங்குள்ள ஒரு குட்டையில் மிதப்பதாகவும் கூறியுள்ளார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகா சாணார்பட்டி அருகே கோரணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி மகன் வசந்த் (வயது 23), வில்வித்தை வீரரான இவர், மாநில அளவில் சாம்பியன் பட்டம் பெற்று முன்னாள் தமிழக முதல்-அமைச்சரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார்.

    மெடிக்கல் கடை

    இவர், எடப்பாடி அருகே, வெள்ளாண்டிவலசு என்ற இடத்தில் விஜய் பார்மசி என்ற பெயரில் மெடிக்கல் கடை நடத்தி வந்தார். வழக்கமாக காலை 8 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு இரவு 10 மணிக்கு வீடு திரும்பி விடுவார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கடைக்கு சென்ற வசந்த், அன்று இரவு 10 மணிக்கு மேல் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் தாய் தேன்மொழி வசந்தின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட–போது அவர் அழைப்பை எடுக்க வில்லை.

    இதனால் பயந்துபோன தேன்மொழி, தனது இளைய மகன் விஜய் ஆனந்துடன் மெடிக்கல் கடைக்கு சென்று பார்த்தபோது கடை பூட்டி இருந்தது. இதையடுத்து இருவரும் பல இடங்களில் வசந்தை தேடினர். இரவு நேரம் என்பதால் எப்படியும் தனது மகன் வீட்டிற்கு வந்து விடுவார் என நினைத்து தேன்மொழியும், விஜய் ஆனந்தும் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

    இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணிக்கு, வசந்தின் மெடிக்கல் அருகே அரிசி கடை வைத்துள்ள செந்தில்குமார் என்பவரிடம், தனது மகன் கடைக்கு வந்த விபரம் குறித்து தேன்மொழி கேட்டுள்ளார். அப்போது அவர், தான் இரவு 8:45 மணிக்கு அரிசி கடையை மூடும்போது, வசந்தை மெடிக்கலில் பார்த்ததாக கூறியுள்ளார்.

    குட்டையில் உடல் மீட்பு

    இதையடுத்து தேன்மொழி, மகன் மாயமான தகவலை ஹைதராபாத்திற்கு லாரி வேலைக்கு சென்று இருந்த கணவர் ஆசைத்தம்பியிடம் கூறியுள்ளார். உடனே ஆசைதம்பி, வசந்த் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, அதனை எடுத்து பேசிய நபர், சங்ககிரி அருகே தேவண்ணக்கவுண்டனுார் கிராமம், செல்லாங்காடு என்ற இடத்தில் உள்ள ஒரு பாறையின் மீது செல்போன் இருந்ததாகவும், அதற்கு அருகில் டூவீலர் இருப்பதாகவும், 2 செருப்புகள் அங்குள்ள ஒரு குட்டையில் மிதப்பதாகவும் கூறியுள்ளார். உடனே ஆசைத்தம்பி, தேன்மொழிக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தேன்மொழி, அங்குள்ள குட்டையில் இறந்த நிலையில் இருந்த மகனின் உடலை பார்த்து கதறித் துடித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, வசந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்னர்.

    இந்நிலையில், வசந்தின் தலை, கண்கள், காது, உதடு மற்றும் உடலின் பல பகுதிகளில் ரத்த காயங்கள் இருந்ததாகவும், இதனால் வசந்தை யாரோ வலுக்கட்டாயமாக காட்டிற்கு அழைத்துச் சென்று அடித்து கொன்று குட்டையில் போட்டுள்ளதாக தேன்மொழி கூறினார்.

    மேலும் தனது மகன் வில்வித்தை போட்டியில் மாநில அளவில் சாம்பியன் பட்டம் பெற்று, முன்னாள் தமிழக முதல்-அமைச்சரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார். இதனால் சில நபர்களுக்கு என் மகன் மீது போட்டி, பொறாமை உண்டு. அவர்களால் தான் எனது மகன் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கும். எனவே மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் தேன்மொழி நேற்று புகார் அளித்துள்ளார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப் பதிவு செய்துள்ளார். இது குறித்து டி.எஸ்.பி. ஆரோக்யராஜ் கூறுகையில், வில்வித்தை வீரர் வசந்த் உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்தால் தான் கொலையா? தற்கொலையா? என தெரியவரும். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்.

    • நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ஏற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அப்போது பெரியேரிக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயியான சுந்தரராஜன் என்பவரது தோட்டத்தில் சோதனை செய்தனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே பெரியேரிக்காடு பகுதியில் நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ஏற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.எஸ்.பி தையல் நாயகி தலைமையிலான போலீசார், ஏற்காடு பெரியேரிக்காடு கிராமத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது பெரியேரிக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயியான சுந்தரராஜன் என்பவரது தோட்டத்தில் சோதனை செய்தனர். இதில், 2 நாட்டு துப்பாக்கி மற்றும் 2 கிலோ வெடிமருந்து, 3 கிலோ ஈயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விவசாயி சுந்தரராஜன், காட்டுப்பன்றி மற்றும் முயல் ஆகியவற்றை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஏற்காடு போலீசார், நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடிமருந்தை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுந்தரராஜனை தேடி வருகின்றனர்.

    ×