என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guard murder? காவலாளி கொலை?"

    • சேலம் லீ பஜார் அருகே உள்ள மணிபுரம் பகுதியில் மாரி என்பவருக்கு சொந்தமான ஒரு பருப்பு மில்லில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • நேற்று இரவு வழக்கம்போல் வேலைக்கு வந்த தங்கையன் மில்லில் இரவு காவல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    சேலம்:

    சேலம் கொண்ட–லாம்பட்டி அருகே உள்ள அமானி கொண்டலாம்பட்டி, சித்தன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கையன் (வயது 58). இவர் சேலம் லீ பஜார் அருகே உள்ள மணிபுரம் பகுதியில் மாரி என்பவருக்கு சொந்தமான ஒரு பருப்பு மில்லில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம்போல் வேலைக்கு வந்த தங்கையன் மில்லில் இரவு காவல் பணியில் ஈடுபட்டு இருந்தார். இன்று காலை மில்லின் உரிமையாளர் மாரி, வந்து பார்த்தபோது, தங்கையன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தங்கையனின் குடும்பத்தினர், உடல்நிலை சரியில்லாமல் அவர் இறந்திருக்கலாம் என்று கருதி, தங்கையனின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது, தங்கையன் தலையில் காயம் இருப்பதும், கழுத்தில் துண்டால் இறுக்கிய தழும்பும் இருப்பதும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தங்கையனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தங்கையனின் கழுத்தில் காயம் இருப்பதால், மில்லுக்குள் புகுந்த மர்ம நபர்கள் தங்கையனை கொலை செய்து விட்டு தப்பி சென்றனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தங்கையன் எவ்வாறு இறந்தார் என்பது தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பருப்பு மில்லில் இரவு நேர காவலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×