என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில்அம்மனுக்கு 18 ஆயிரம் வளையல்கள் சாத்துப்படி
- அருள்பா–லிக்கும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு வருடபிறப்பு, ஆடி வெள்ளி, சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி, தை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
- நாளை (10-ந் தேதி) தை கடைசி வெள்ளிக்கிழ–மையை முன்னிட்டு, சுகவனேஸ்வரர் கோவில் சொர்ணாம்பிகை அம்ம–னுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாரதனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
சேலம்:
சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் 2000 ஆண்டு பழமையானது.
இக்கோவிலில் அருள்பா–லிக்கும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு வருடபிறப்பு, ஆடி வெள்ளி, சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி, தை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
சொர்ணாம்பிகை அம்மனை வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம், குழந்தை பேறு, வம்பு வழக்குகளில் இருந்து விடுதலை, நோய் நீக்குதல் என பல்வேறு நன்மைகளும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தை மாத வெள்ளிக்கிழமைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபடுவார்கள்.
நாளை (10-ந் தேதி) தை கடைசி வெள்ளிக்கிழ–மையை முன்னிட்டு, சுகவனேஸ்வரர் கோவில் சொர்ணாம்பிகை அம்ம–னுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாரதனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 6:30 மணிக்கு சொர்ணாம்பிகை அம்ம–னுக்கு தை கடைசி வெள்ளி உற்சவம் நடைபெற உள்ளது. இதில் 18 ஆயிரம் வளையல்கள் அம்மனுக்கு சாத்துப்படி செய்யப்படுகிறது.
இரவு 7 மணிக்கு மேல் அம்மனுக்கு சாத்துப்படி செய்யப்பட்ட 18 ஆயிரம் வளையல்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
விழாவையொட்டி வடக்கு நுழைவு வாயில் பக்தர்கள் நடந்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வாகனங்களில் வரும் பக்தர்கள் நந்தவனம் வாயில் வழியாக வந்து சுப்ராயன் சாலை வழியாக வெளியே செல்ல தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.