என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழப்பாடி ரெயில் நிலையம் தரம் உயர்த்தப்படுமா?

    • 1930–ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சேலம்- – விருத்தாசலம் ரெயில்பாதை அமைக்கப்பட்டது.
    • குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராமல் பழுத டைந்து கிடக்கின்றன. இரவு நேரத்தில் மின்விளக்குகளும் முறை யாக எரிவதில்லை.

    வாழப்பாடி:

    சேலம், விழுப்புரம், கடலூர் மாவட்ட கிராமப்புற மக்களின் போக்குவரத்தை கருத்தில் கொண்டு, 1930–ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சேலம்- – விருத்தாசலம் ரெயில்பாதை அமைக்கப்பட்டது. 90 ஆண்டுகள் பழமையான இந்த குறுகிய ரெயில்பாதை, 2007-ம் ஆண்டு அகல ரெயில் பாதையாக தரம் உயர்த்தப்பட்டது.

    137 கி.மீ., நீளமுள்ள சேலம்-–விருத்தாசலம் ரெயில்பாதையை மின் மையமாக்கும் திட்டத்திற்கு 2019–ல் மத்திய அரசு அனுமதி அளித்தது. 2 ஆண்டுகளாக நடைபெற்ற மின் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததால், கடந்த ஓராண்டாக இந்த வழித்தடத்தில் சேலம்- விருத்தாசலம், சேலம்-–சென்னை-எழும்பூர்- பெங்களூர்-காரைக்கால் மின்சார ரெயில்களும், சிறப்பு மற்றும் சரக்கு ரெயில்களும் இயக்கப்படுகிறது.

    சேலம் சந்திப்பு

    விருத்தாசலம் ரெயில் வழித்தடத்தில், சேலத்தில் இருந்து 30 வது கி.மீ., தூரத்திலுள்ள வாழப்பாடி முக்கிய ரெயில் நிறுத்தமாக விளங்கியது. 15 ஆண்டுகளுக்கு முன், வாழப்பாடியின் தென் கிழக்கு பகுதியில், புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே, பயணிகள் தங்குமிடம், பயணச்சீட்ட முன்பதிவு மையம், பணியாளர்கள் குடியிருப்பு, நடைமேடை, கூடுதல் ரெயில் பாதைகள், சரக்கு வைப்பகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் ரெயில் நிலையம் இயங்கி வந்தது.

    மீட்டர் கேஜ் பாதை அகல ரெயில்பாதையாக மாற்றப்படுவதற்கு முன், ரெயில் நிலையம் மூடப்பட்டதோடு பாழடைந்த கிடந்த கட்டிடங்களும் 10 ஆண்டுக்கு முன்பே இடிக்கப்பட்டது. இதனையடுத்து, அகல ரெயில்பாதை அமைக்கப்பட்ட பிறகு வாழப்பாடியின் மையப்ப குதியான தம்மம்பட்டி சாலை ரெயில்வே கேட் பகுதியிலேயே 'எப்' வகுப்பு ரெயில் நிறுத்தம் அமைக்கப்பட்டது.

    பயணச்சீட்டு வழங்கும் அறையை தவிர, பொருள் பாதுகாப்பு மற்றும்

    பயணிகள் காத்திருப்பு

    அறைகள் அமைக்கப்பட வில்லை. ஏறக்குறைய ஒரு கி.மீ., தூரமுள்ள நடை

    மேடையில், 3 இடங்களில்

    மட்டும் சிறிய அளவில்

    நிழற்குடை அமைக்கப்பட்டு ள்ளது. பயணிகளுக்கான கட்டப்பட்டுள்ள கழிப்பி டங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கிறது.

    குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராமல் பழுத டைந்து கிடக்கின்றன. இரவு நேரத்தில் மின்விளக்குகளும் முறை யாக எரிவதில்லை. தனியார் முகவரால் பயணச்

    சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. முன்பதிவு வசதிகள் ஏற்படுத்தவில்லை. இதனால், வாழப்பாடி ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இருப்பினும், சேலம் –விருத்தாலம் வழித்தடத்தில் கணிசமான வருவாய் ஈட்டிக்கொடுக்கும் ரெயில் நிறுத்தங்களில் ஒன்றாக வாழப்பாடி விளங்கி வருகிறது.

    எனவே, பயணிகள் நலன் கருதி, பயணிகள் பொருள் பாதுகாப்பு அறை, நடைமேடை முழுவதும் பயணிகள் நிழற்குடை, நவீன கழிப்பிடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பயணச்சீட்டு முன்ப திவு மையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, வாழப்பாடி ரெயில் நிறுத்தத்தை தரம் உயர்த்திட சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×