என் மலர்tooltip icon

    சேலம்

    • கடந்த ஆண்டு ஜூலை 2–ந் தேதி காலை, பழனிமலை முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
    • பீரோக்களில் வைத்திருந்த 40 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

    வாழப்பாடி:

    சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே காரிப்பட்டி அடுத்த மின்னாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் சின்னசாமி (வயது 62). இவரும் இவரது மனைவி ராஜாமணியும், கடந்த ஆண்டு ஜூலை 2–ந் தேதி காலை, பழனிமலை முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

    மறுநாள் அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்ட நிலையில் வீடு திறந்து கிடந்ததோடு, பீரோக்களில் வைத்திருந்த 40 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து, சின்னசாமி காரிப்பட்டி போலீசில் புகார் செய்தார். இவரது புகாரின் பேரில் காரிப்பட்டி காவல் ஆய்வாளர் (பொ) உமாசங்கர் தலைமை யிலான போலீசார் வழக்கு

    பதிவு செய்தனர். அப்போ தைய எஸ்.பி. ஸ்ரீ அபிநவ் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்ராஜ், மோகன்,

    சதிஸ்குமார், உதயக்குமார்

    ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு, சுற்றுப்புற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பயன்படுத்தி, இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (33). பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த அமிர்ஜான் (34) மற்றும் செல்வராஜ் என்கிற சாகுல் ஹமித் (53). ஆகிய 3 பேரையும் கடந்த ஆண்டு ஜூலை 7ம் தேதி கைது செய்தனர். இந்த கும்பலிடம் இருந்து 40 சவரன் தங்க நகைகள், ரூ. 80,000 ரொக்கப்பணம் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்தி ஆட்டோ ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த வழக்கு விசா ரணை வாழப்பாடி நடுவர்

    நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கொள்ளையில் மணிகண்டன், அமிர்ஜான், செல்வராஜ் என்கிற சாகுல் ஹமித் ஆகிய 3 பேருக்கும், இரு குற்றப் பிரிவுக்கும் தலா 3 ஆண்டுகள் வீதம் மொத்தம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்ற நடுவர் சன்மதி நேற்று தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து, 3 பேரும்,

    கோயம்புத்துார் மத்திய

    சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கை விரை

    வாக நடத்தி, பாதிக்கப்பட்ட வருக்கு பொருட்களை மீட்டு கொடுத்ததோடு சம்பவம் நடந்த 7 மாதத்திற்குள் ,குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த போலீசார் மற்றும் நீதிமன்ற நடுவருக்கும் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

    • பாக்குத்தோலை, சாலையோரங்கள், மயானம், ஆறு, ஓடை, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள், பொது இடங்களில் கொட்டுவது வாடிக்கையாகி விட்டது.
    • இதுமட்டுமின்றி, இந்த பாக்குத்தோலை சிலர் தீ வைத்து எரிக்கவும் செய்கின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில்

    விளையும் பாக்குக்காய்க ளை பதப்படுத்தி உற்பத்தி செய்யப்படும் 'கொட்டைப்பாக்கு' தமிழ கத்தில் வாசனை பாக்கு தயாரிப்பு நிறு வனங்களுக்கு மட்டுமின்றி, மஹா ராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீஹார், குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களில் பான்ப ராக், பான் மாசாலா, குட்கா போன்ற பாக்கு பொருட்கள்

    தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது.

    வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம், கொட்ட வாடி, குறிச்சி, பொன்னா ரம்பட்டி பகுதியில், பாக்குக்காய்க ளின் இருந்து கொட்டைப்பாக்கு பிரித்தெடுத்த பிறகு, எஞ்சிய பாக்குத்தோலை, சாலையோரங்கள், மயானம், ஆறு, ஓடை, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள், பொது இடங்களில் கொட்டுவது வாடிக்கையாகி விட்டது. இதுமட்டுமின்றி, இந்த பாக்குத்தோலை சிலர் தீ வைத்து எரிக்கவும் செய்கின்றனர். இதனால், சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, மழை காலத்தில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    எனவே, பொது இடங்களில் பாக்குத்தோல் கொட்டு

    வதை தடுத்து, இவற்றை

    பதப்படுத்தி, ஊதுபத்தி, சாம்பிராணி, கொசு விரட்டிகள், கலப்பு உரம் தயாரிக்கவும், நாரை பிரித்தெடுத்து இன்னும் பிற மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதற்கும், தோட்டக்கலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து வழிவகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    பாக்குத் தோலை, பொது

    இடங்களில் கொட்டுவதை தவிர்க்கவும், முதற்கட்ட மாக இதனை பதப்படுத்தி எரிபொருளாக பயன்படுத்து வதற்கும், வட்டார வளர்ச்சி அலுவலர்களும், ஊராட்சி மன்றமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். ஆனால், இத்திட்டம் இதுவரை செயல்வடிவம் பெறவில்லை.

    வாழப்பாடி–தம்மம்பட்டி சாலையில் சிங்கிபுரம் மயா

    னத்தில் இருந்து சோமம்பட்டி ஏரிக்கரை வரை, சாலையின் இருபுற

    மும் பாக்குத் தோல் கொட்டப்படுவது வாடிக்கை யாக தொடர்ந்து வருகிறது. இதுமட்டுமின்றி, தீயிட்டு எரிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, புகை மூட்டம் ஏற்படுவதால், சாலையில் வாகனங்கள் செல்வது தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயமும் நீடித்து வருகிறது.

    இந்நிலையில், சாலை யோரத்தில் கொட்டப்பட்ட பாக்குத்தோல்களுக்கு வைக்கப்பட்ட தீயில், சாலையோரத்தில் பாது காப்பு வேலியுடன் நடப்ப ட்டிருந்த ஏராளமான மரக்கன்றுகள் கருகி உயிரிழந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த பசுமை ஆர்வலர்கள், பாக்குத்தோல் கொட்டி மாசு ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி தீயிட்டு கொளுத்தி மரக்கன்றுகள் உயிரிழந்ததற்கு காரண

    மானவர்களை கண்டறிந்து, சிங்கிபுரம் மற்றும்

    சோமம்பட்டி ஊராட்சி நிர்வாகமும், வாழப்பாடி உட்கோட்ட நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 300 ஆண்டுகள் பழமையான கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமர் கோவில்கள் அமைந்துள்ளன.
    • அருநூற்றுமலை வாழ் பழங்குடியின மக்கள், இக்கோவில்களில் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி தேர்த்திருவிழா நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அருகே பெலாப்பாடி மலை கிராமம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் 300 ஆண்டுகள் பழமையான கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமர் கோவில்கள் அமைந்துள்ளன.

    அருநூற்றுமலை வாழ் பழங்குடியின மக்கள், இக்கோவில்களில் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி தேர்த்திருவிழா நடத்தி வருகின்றனர். வாழப்பாடி பகுதியில் பிரசித்திப்பெற்ற இந்த விழாவில் மலைவாழ் பழங்குடியின மக்கள் மட்டுமின்றி, வாழப்பாடி, பேளூர் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்தாண்டு தேர்த்திருவிழா ஒரு வார விழாவாக வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. முதலாவதாக கரியராமர் கோவிலிலும், அடுத்தடுத்து வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமர் கோவிலும் சிறப்பு பூஜை வழிபாடுகளுடன், பாரம்பரிய முறைப்படி திருவிழா நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று பிரசித்திப் பெற்ற வெங்கட்டராமர் கோவில் பல்லக்குத் தேர்த்திருவிழா நடைபெற்றது.

    இந்தவிழாவில் வெங்கட்டராமர், அண்ணாமலையார், காளியம்மன் உற்சவ மூர்த்திகளை 2 பல்லக்குத் தேர்களில் ரதமேற்றி, பக்தர்கள் தோளில் சுமந்தபடி ஆடிப்பாடி ஊர்வலமாக சென்று வினோத முறையில் தேரோட்டம் நடத்தினர். மாவிளக்கு ஊர்வலம் நடத்திய பெண்கள் 'குலவை' குரலோசை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இத்திருவிழாவில் பங்கேற்ற, ஏறக்குறைய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வாழை இலை போட்டு சமபந்தி விருந்து வைத்து பழங்குடியின மக்கள் அன்பை பகிர்ந்து அசத்தினர்.

    இதுகுறித்து பேளூர் மணியக்காரர் திருமூர்த்தி, வாழப்பாடி ஒன்றியக்குழு உறுப்பினர் முருகன் கூறுகையில், பெலாப்பாடி மலை உச்சியில் அமைந்துள்ள 3 மலைக்கோவில் திருவிழாவிற்கும் ஆண்டு தோறும் தவறாமல் சென்று வருகிறோம். மலை கிராம மக்கள் குல தெய்வமாக வழிபட்டு வரும் கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமர் சுவாமிகள் மிகுந்த சக்தி வாய்ந்த தெய்வமாக கருதுவதால் பயபக்தியோடு திருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றனர்.

    தேர்த்திருவிழாவில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களையும் கோவில் மைதானத்தில் அமரவைத்து வாழை இலை போட்டு பொங்கல் சோறுயும், தானியக்குழம்பும் பரிமாறி, மலை கிராம மக்கள் விருந்தோம்பலையும் அன்பையும் வெளிப்படுத்தி ஆண்டுதோறும் அசத்தி வருவது பாராட்டுக்குரியதாகும் என்றனர்.

    • தமிழகம் முழுவதும் அனைத்து துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
    • இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டப்பணிகள் செயல்படுபத்தப்படுவது குறித்து துறை வாரியாக ஆய்வு செய்கி்றார்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் அனைத்து துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான கள ஆய்வு கூட்டம் வருகிற 15, 16-ந் தேதிகளில் சேலத்தில் நடக்கிறது.

    இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டப்பணிகள் செயல்படுபத்தப்படுவது குறித்து துறை வாரியாக ஆய்வு செய்கி்றார். கூட்டத்தில் 4 மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் ஆலோசனை நடத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்தும் கடந்த 2021-22-ம் ஆண்டு மற்றும் நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள் அனுப்ப உத்தரவிட்டப்பட்டுள்ளது.

    எனவே இந்த விவரங்களை சேகரித்து அனுப்பும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார்.

    மேலும் அவர் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு பகுதிக்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொள்வார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்திற்காக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

    ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணியும் சில அலுவலக கட்டிடங்களில் மாற்றங்களுடன் கூடிய சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேலத்தில் உள்ள இதர துறைகளின் தலைமை அலுவலகங்களில் தூய்மை மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சேலம் இரண்டடுக்கு மேம்பாலங்கள் பொலிவுடன் காட்சியளிக்கின்றன. 2 நாள் சேலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாமிடுவதால் தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • சேலம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர் மீது, கொலை, கொலை முயற்சி உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
    • கடந்த 5-ந்தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் பள்ளிப்பட்டி யைச் சேர்ந்த இளைஞர் பிரபாகர னுடன், காட்டூர் இடுகாடு அருகே சென்று கொண்டிருந்த ஆனந்தனை, பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த கும்பல், கொடூரமாக வெட்டிச்சாய்த்து கொலை செய்தது.

    வாழப்பாடி:

    சேலம் அயோத்தி யாப்பட்டணம் அடுத்த காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 42). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர் மீது, கொலை, கொலை முயற்சி உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கடந்த 5-ந்தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் பள்ளிப்பட்டி யைச் சேர்ந்த இளைஞர் பிரபாகர னுடன், காட்டூர் இடுகாடு அருகே சென்று கொண்டிருந்த ஆனந்தனை, பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த கும்பல், கொடூரமாக வெட்டிச்சாய்த்து கொலை செய்தது.

    இந்த கும்பல் தாக்கி யதில், ஆனந்தனுடன் சென்ற பிரபாகரன் படுகாய மடைந்தார். இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி

    களை கைது செய்த தனிப்படை அமைக்கப்பட்ட போலீசார் நடத்திய விசா ரணையில், கொலையுண்ட ஆனந்திற்கும், இதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான அன்பழகன் என்ற மற்றொரு ரவுடி கும்பலுக்கும் ஏற்பட்ட முன்விரோதத்தால் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து, இந்த கும்பலைச் சேர்ந்த சிலரை தனிப்படை போலீசார் பிடித்து, வாழப்பாடிஅருகே ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த காட்டூர் பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மற்றும் இவரது கூட்டாளிகளான சக்திவேல், வெள்ளியம்பட்டியைச் சேர்ந்த அஜீத்குமார், மணிகண்டன் ஆகிய 4 பேரும் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணமடைந்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய அன்பழகனின் கூட்டாளி களான வலசையூரைச் சேர்ந்த சீனிவாசன், (31).

    வெள்ளியம்பட்டி பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா (35). ஆகிய 2 இளைஞர்களையும், காரிப்பட்டி போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பிருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள 4 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்திட முடிவு செய்துள்ளனர்.

    • மேட்டூர் அணைக்கு நேற்று 1,454 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1453 கன அடியாக சரிந்தது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு, விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. அதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று 1,454 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1453 கன அடியாக சரிந்தது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    நேற்று 103.79 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.80 அடியாக உள்ளது.

    • போலி அடையாள அட்டைகளை தயாரித்துக் கொண்டு அரசு அதிகாரி என மிரட்டி மதன்குமார் வசூலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
    • ஆயுதப்படை மைதானத்துக்குள்ளேயே புகுந்து வாகனத்தை திருடிசென்ற சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் நேற்று மைதானத்திற்கு வந்தனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆயுதப்படைக்கு சொந்தமான பொலிரோ வாகனத்தை காணவில்லை.

    இதனால் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அந்த வாகனத்தை திருடி சென்றது யார்? என்ற பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த வேளையில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் அலுவலகம் முன்பு நிறுத்தியிருந்த மற்றொரு போலீஸ் வாகனத்தை ஒருவர் திருட முயன்றார். இதனை பார்த்த இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் அந்த வாலிபரை மடக்கி அவரிடம் விசாரித்தனர்.

    அப்போது அந்த நபர், தாரமங்கலம் தொளசம்பட்டி பிரிவு ரோட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மதன்குமார்(வயது 38) என்பது தெரியவந்தது. இவர் அங்கு பொலிரோ வாகனத்தில் வந்துள்ளார்.

    அந்த வண்டிகள் அரசு முத்திரை பொருத்தப்பட்டிருந்தது. அவர் முதல்வர் நிவாரண பிரிவின் உதவி இயக்குனர் என்ற அடையாள அட்டையும் அவர் வைத்திருந்தார், அதனை அவர் போலியாக தயாரித்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

    மதன்குமார் கூட்டாளிகளுடன் வந்து போலீஸ் வாகனத்தை திருடினாரா என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டது. மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா நேரடியாக விசாரணை நடத்தினார். உதவி கமிஷனர் லட்சுமி பிரியா, இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் ஆயுதப்படை மைதானத்தில் வெளிப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். திருடப்பட்ட வாகனம் எந்த பகுதி வழியாக சென்றுள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மதன்குமாரிடமும் துருவி துருவி போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்தான் போலீஸ் வாகனத்தை திருடியது தெரியவந்தது. மேலும் அந்த வாகனத்தை சூரமங்கலம் ஜங்ஷன் பகுதியில் நிறுத்தி இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து ஜங்ஷன் பகுதியில் சாலையோரம் நிறுத்தி இருந்த போலீஸ் வாகனத்தை போலீசார் மீட்டனர். மதன்குமார் இரவு ஆயுதப்படை மைதானத்துக்கு தனது சொகுசு காரில் வந்து மது குடித்ததும், பின்னர் அங்கிருந்த போலீஸ் வாகனத்தில் சாவி போடாமலேயே இணைப்பு கொடுத்து ஸ்டார்ட் செய்து வண்டியை எடுத்துச் சென்று ஜங்ஷன் பகுதியில் நிறுத்தியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்திச் சென்று அவரது சொகுசு காரை எடுக்க காலையில் வந்திருக்கிறார். அப்போது போலீஸ் வண்டியில் உள்ள மைக்கை கழற்றி அவரது வண்டியில் வைக்கும் போது போலீசாரிடம் சிக்கியது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    அவரிடம் இருந்து ஏராளமான போலியான அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் பயன்படுத்தி வந்த சொகுசு காருக்கான எண்ணையும் போலியாக தயாரித்து ஒட்டி உள்ளார். மேலும் வேலை வாங்கி தருவதாக கூறி பலரை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

    தாரமங்கலம் அருகிலுள்ள சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 33). இவர் கடந்த 6 வருடங்களாக தாரமங்கலம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மதன்குமார் தான் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணி புரிந்து வருவதாக அறிமுகம் ஆனார்.

    இதை தொடர்ந்து அவர் அடிக்கடி தனது காருக்கு டீசல் நிரப்பிவிட்டு பில்லில் கையொப்பம் இட்டு சென்று வந்துள்ளார். இவ்வாறு அவர் டீசல் அடித்த வகையில் பாக்கி ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் சேர்ந்ததால் அவரிடம் பணத்தை மஞ்சுநாதன் கேட்டார். அதற்கு அந்த நபர் தான் அரசு அதிகாரி என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுபற்றி மஞ்சுநாதன் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி டீசல் போட்டு மோசடியில் ஈடுபட்ட மதன்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில் போலி அடையாள அட்டைகளை தயாரித்துக் கொண்டு அரசு அதிகாரி என மிரட்டி மதன்குமார் வசூலில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது போலீஸ் வண்டியை திருடி சென்று இதுபோன்ற மோசடியில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்துள்ளது என்றனர்.

    போலீசாரின் ஆயுதப்படை மைதானத்துக்குள்ளேயே புகுந்து வாகனத்தை திருடிசென்ற சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கைதான மதன்குமார் வேறு பல இடங்களில் இதுபோன்று கைவரிசை காட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    • வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது
    • பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகை திருட்டு

    சேலம்

    சேலம் மெய்யனூர் வன்னியர் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்புசாமி. இவரது மகன் ஸ்ரீதர் (வயது 34). இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு, தனது குடும்பத்தினருடன் தாரமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் நேற்று இரவு 8 மணி அளவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து ஸ்ரீதர் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராணி வழக்கு பதிவு செய்து, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • பழைய பஸ் நிலையத்தை யொட்டி விசாலமாக மேலும் ஒரு பூ மார்க்கெட்
    • பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனை

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.உ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இதைத்தவிர பழைய பஸ் நிலையத்தை யொட்டி விசாலமாக மேலும் ஒரு பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுகளுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்த பூ மார்க்கெட்டில் சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் தினமும் பூக்கள் வாங்கி செல்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சுபமுகூர்த்த தினம், பண்டிகை, தைப்பூசம் ஆகிய விழாக்களை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரித்தது. அப்போது ஒரு கிலோ மல்லிகை பூ கிலோ ரூ.1400-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு சேலம் பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் சற்று விலை உயர்ந்துள்ளது. மல்லிகை- ரூ. 1600, ஜாதிமல்லிகை - ரூ.1000, காக்கட்டான்- ரூ.450, கலர் காக்கட்டான்-ரூ.450 மலைக்காக்கட்டான்- ரூ.360, அரளி -ரூ.80 வெள்ளை அரளி -ரூ.80, மஞ்சள் அரளி -ரூ.80 ,செவ்வரளி-ரூ.150, ஐ.செவ்வரளி- ரூ.100, நந்தியாவட்டம் -ரூ.150, சி.நந்தியாவட்டம் -ரூ.200, சம்பங்கி-ரூ.80 சாதா சம்பங்கி-100 என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • வட மாநில கும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்டு, சரமாரியாக தாக்கப்பட்டு , கொடூரமான முறையில் கொலை
    • சென்னையில் உள்ள மேற்கண்ட 4 பேரிடமும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர் தாளமுத்து நடராஜன் (வயது 55). சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள இவரது வீட்டில் கடந்த 2002 - ஆம் ஆண்டு செப்டம்பர் 12 - ம் தேதி அதிகாலை வட மாநில கும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்டு, சரமாரியாக தாக்கப்பட்டு , கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவத்தில் சுமார் 200 பவுன் நகைகள் மற்றும் பல லட்சம் பணம் கொள்ளையடிக்கப் பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக கொள்ளை கும்பலின் தலைவன் ஓம் பிரகாஷ், இவரது மனைவி பீனா தேவி, சாந்து, அசோக் என்கிற லட்சுமணன், ராகேஷ் என்கிற குண்ட்டு, ஜெயில் தார் சிங், பப்புலு, ஜெகதீஷ் சிங் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர்.

    இவர்களில் சிறையில் இருந்த ஓம் பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டார். ஜாமீன் வெளிவந்த பீனா தேவி, சாந்து, பப்புலு ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். மீதமுள்ள அசோக் என்கிற லட்சுமணன், ராகேஷ் என்கிற குண்ட்டு, ஜெயில் தார் சிங், ஜெகதீஷ் ஆகியோர் சென்னை புழல் சிறையில் உள்ளனர். இதில் சிறையில் உள்ளவர்களை வைத்து வழக்கை போலீசார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு சேலம் கூடுதல் மாவட்ட நீதிபதி ராமஜெயம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் சென்னையில் உள்ள மேற்கண்ட 4 பேரிடமும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தப்ப ட்டது. இதைத் தொடர்ந்து விசாரணை வருகிற 23-ந் தேதிக்கு தள்ளி வைக்க ப்பட்டது.இதையடுத்து அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்க ப்பட்டனர்.

    • வீராணம் ஏரியில் ஆண் பிணம்
    • முதற்கட்ட விசாரணையில் குருமூர்த்தி சமீபத்தில் புதிதாக வீடு கட்டி இருப்பதும் அதற்காக சில நபர்களிடம் கந்து வட்டிக்கு பணம் கடன்

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி திருஞானம் நகர் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 37). மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்க்கும் இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கவுரி (30) என்ற பெண்ணுடன் திருமணமாகி பிரணவ், ரித்திகா ஆகிய 2 குழந்தைகள் உள்ளன.

    இந்த நிலையில் நேற்று காலையில் கவுரி, சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் தனது கணவர் குருமூர்த்தி தனது குழந்தை பிரணவ்வை பள்ளியில் விட்டு விட்டு வருவதாக கூறிச் சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. மாயாயமான தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு புகார் செய்தார்.இதையடுத்து இன்ஸ்பெக்டர் சந்திரகலா வழக்கு பதிவு செய்து குருமூர்த்தியை தேடி வந்த நிலையில் இன்று காலை வீராணம் ஏரியில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக வீராணம் ேபாலீசாருக்கு தகவல் வந்தது.இதனை தொடர்ந்து வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏரியில் இருந்து உடலை மீட்டு பார்த்தபோது சட்டைப் பையில் இருந்து ஆதார் அட்டையில் பெயர் குருமூர்த்தி மற்றும் முகவரி இடம்பெற்றிருந்தது.இது குறித்து வீராணம் போலீசார், உடனடியாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.குருமூர்த்தியின் உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உறவினர்கள் அங்கு வந்து பார்த்து இறந்தது மாயமான குருமூர்த்தி என உறுதி செய்தனர். அதை தொடர்ந்து போலீசார் குருமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குருமூர்த்தி சமீபத்தில் புதிதாக வீடு கட்டி இருப்பதும் அதற்காக சில நபர்களிடம் கந்து வட்டிக்கு பணம் கடன் வாங்கியதும் அதை கட்ட முடியாமல் கடும் மன உளைச்சலில் தனது மனைவியிடம் கடந்த ஒரு வாரமாக புலம்பி வந்ததும், அதனால் குருமூர்த்தி ஏரியில் குதித்து தற்கொலை செய்து இருப்பதும் தெரிய வந்தது.குருமூர்த்தி வீட்டிலிருந்து ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் சம்பவ இடத்தின் அருகில் எங்கும் இல்லாததால் இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே குருமூர்த்தி எப்படி இறந்தார்? என முழு விபரங்களும் தெரிய வரும்.

    • சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள் 1100-க்கும் மேல் உள்ளன
    • பிளஸ்-2 பயிலும் அரியர்மாணவர்களுக்கு இந்தநாட்களிலேயே ெசய்முறைத் தேர்வு நடத்தி முடிக்க வேண்டும்.

    சேலம்:

    தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் நடப்பு ஆண்டு பிளஸ்-1 பயிலும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு வருகிற மார்ச் 1 முதல் 9-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள் 1100-க்கும் மேல் உள்ளன. செய்முறை தேர்வு அறிவிப்பு வெளியானதை அடுத்து இப் பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில் செய்முறை தேர்வுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது.

    அதுபோல் தமிழக பாடத்திட்டத்தில் பயன்று வரும் மாணவர்கள், கடந்த ஆண்டு பிளஸ்-1 பொதுத்தேர்வின்போது செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல் தற்போது பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு பயிலும் அரியர் மாணவர்களுக்கும் செய்முறைத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. பிளஸ்-2 பயிலும் அரியர் மாணவர்களுக்கு இந்த நாட்களிலேயே ெசய்முறைத் தேர்வு நடத்தி முடிக்க வேண்டும். மேலும் செய்முறை ேதர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் பட்டியல்களை ெதாகுத்து அந்தந்த மாவட்ட தேர்வுத்துறை அலுவலகங்களில் மார்ச் 11-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

    ×