என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாளமுத்து நடராஜன் கொலை வழக்கு விசாரணை 23- ந் தேதிக்கு தள்ளி வைப்பு
- வட மாநில கும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்டு, சரமாரியாக தாக்கப்பட்டு , கொடூரமான முறையில் கொலை
- சென்னையில் உள்ள மேற்கண்ட 4 பேரிடமும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை
அன்னதானப்பட்டி:
சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர் தாளமுத்து நடராஜன் (வயது 55). சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள இவரது வீட்டில் கடந்த 2002 - ஆம் ஆண்டு செப்டம்பர் 12 - ம் தேதி அதிகாலை வட மாநில கும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்டு, சரமாரியாக தாக்கப்பட்டு , கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் சுமார் 200 பவுன் நகைகள் மற்றும் பல லட்சம் பணம் கொள்ளையடிக்கப் பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக கொள்ளை கும்பலின் தலைவன் ஓம் பிரகாஷ், இவரது மனைவி பீனா தேவி, சாந்து, அசோக் என்கிற லட்சுமணன், ராகேஷ் என்கிற குண்ட்டு, ஜெயில் தார் சிங், பப்புலு, ஜெகதீஷ் சிங் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர்.
இவர்களில் சிறையில் இருந்த ஓம் பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டார். ஜாமீன் வெளிவந்த பீனா தேவி, சாந்து, பப்புலு ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். மீதமுள்ள அசோக் என்கிற லட்சுமணன், ராகேஷ் என்கிற குண்ட்டு, ஜெயில் தார் சிங், ஜெகதீஷ் ஆகியோர் சென்னை புழல் சிறையில் உள்ளனர். இதில் சிறையில் உள்ளவர்களை வைத்து வழக்கை போலீசார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு சேலம் கூடுதல் மாவட்ட நீதிபதி ராமஜெயம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் சென்னையில் உள்ள மேற்கண்ட 4 பேரிடமும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தப்ப ட்டது. இதைத் தொடர்ந்து விசாரணை வருகிற 23-ந் தேதிக்கு தள்ளி வைக்க ப்பட்டது.இதையடுத்து அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்க ப்பட்டனர்.






