என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிளஸ்-1 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு
- சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள் 1100-க்கும் மேல் உள்ளன
- பிளஸ்-2 பயிலும் அரியர்மாணவர்களுக்கு இந்தநாட்களிலேயே ெசய்முறைத் தேர்வு நடத்தி முடிக்க வேண்டும்.
சேலம்:
தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் நடப்பு ஆண்டு பிளஸ்-1 பயிலும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு வருகிற மார்ச் 1 முதல் 9-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள் 1100-க்கும் மேல் உள்ளன. செய்முறை தேர்வு அறிவிப்பு வெளியானதை அடுத்து இப் பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில் செய்முறை தேர்வுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது.
அதுபோல் தமிழக பாடத்திட்டத்தில் பயன்று வரும் மாணவர்கள், கடந்த ஆண்டு பிளஸ்-1 பொதுத்தேர்வின்போது செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல் தற்போது பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு பயிலும் அரியர் மாணவர்களுக்கும் செய்முறைத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. பிளஸ்-2 பயிலும் அரியர் மாணவர்களுக்கு இந்த நாட்களிலேயே ெசய்முறைத் தேர்வு நடத்தி முடிக்க வேண்டும். மேலும் செய்முறை ேதர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் பட்டியல்களை ெதாகுத்து அந்தந்த மாவட்ட தேர்வுத்துறை அலுவலகங்களில் மார்ச் 11-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.






