search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டப்படிப்புகளில் சேருவதற்கானநுழைவுத்தேர்வு அறிவிப்பு வெளியீடு
    X

    பட்டப்படிப்புகளில் சேருவதற்கானநுழைவுத்தேர்வு அறிவிப்பு வெளியீடு

    • மாநில பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வு-2023 (சி.யு.இ.டி) அறிவிப்பு தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
    • இணையவழி விண்ணப்பப்பதிவு நேற்று இரவு முதல் தொடங்கியுள்ளது.

    சேலம்:

    மத்திய பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு மாநில பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வு-2023 (சி.யு.இ.டி) அறிவிப்பு தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதற்கான இணையவழி விண்ணப்பப்பதிவு நேற்று இரவு முதல் தொடங்கியுள்ளது. வருகிற மார்ச் மாதம் 12-ந்தேதி வரை இணையதள வழியில் விண்ணப்பிக்கலாம்.

    தேர்வு வருகிற மே மாதம் 21-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது. விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு செய்யப்படும் பாடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் 3 ஷிப்டுகளாக தேர்வு நடத்தப்படும்.

    சேலம், நாமக்கல்

    தேர்வு நடைபெறும் நகரங்கள் மற்றும் மையங்கள் குறித்த விபரம் ஏப்ரல் மாதம் 30-ந்தேதி அறிவிக்கப்படும். தேர்வறை நுழைவுச்சீட்டை (ஹால்டிக்கெட்) மே மாதம் 2-வது வாரத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    யு.ஜி.சி. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தன் அடிப்படையில் கடந்த ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிகளில் சேர சி.யு.இ.டி. நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது . கடந்த ஆண்டு இந்த தேர்வை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த பிளஸ்-2 மாணவ- மாணவிகள் ஏராளமானோர் எழுதினர் . இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.

    Next Story
    ×