என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகம் எதிரே இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்தவர் கைது
- கிச்சிப்–பாளையம் வேல்முருகன் நகர் பகுதி சேர்ந்த சக்திவேல் (வயது 50) என்பவர் மொபட்டில் வந்தார். அவரை, இன்ஸ்பெக்டர் ராஜராஜன் தடுத்து நிறுத்தி தணிக்கை செய்தார்.
- சக்திவேல் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததும் தெரியவந்தது.
சேலம்:
சேலம் மாநகரம் தெற்கு போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜராஜன், நேற்று இரவு சக போலீசாருடன் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் வாகன தணிக்கை–யில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது கிச்சிப்–பாளையம் வேல்முருகன் நகர் பகுதி சேர்ந்த சக்திவேல் (வயது 50) என்பவர் மொபட்டில் வந்தார். அவரை, இன்ஸ்பெக்டர் ராஜராஜன் தடுத்து நிறுத்தி தணிக்கை செய்தார்.
இதில், சக்திவேல் ஒட்டி வந்த மொபட், ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமானது என்பதும், சக்திவேல் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததும் தெரியவந்தது.
இது குறித்து ராஜராஜன் கேட்டபோது, சக்திவேல் இன்ஸ்பெக்டரிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால், ராஜராஜன் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் சக்திவேல் மீது புகார் செய்தார்.
அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






