என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் ராணுவ வீரர் மனு"

    • உயிருக்கு பாதுகாப்பு கேட்டு முன்னாள் ராணுவ வீரர் சேலம் மாவ்வட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • 50 செண்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துகொண்டு நிலம் எங்களுக்குத்தான் சொந்தம் எனக்கூறி கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

    சேலம்:

    உயிருக்கு பாதுகாப்பு கேட்டு முன்னாள் ராணுவ வீரர் சேலம் மாவ்வட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் குகை அம்பேத்கர் காலனியில் வசிப்பவர் விஸ்வநாதன் (58). முன்னாள் ராணுவ வீரரரான இவர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் 24 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றியுள்ளேன். இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்கா பொன்னியம்பட்டி வையாபுரி கோம்பை பகுதியில் அரை ஏக்கர் விவசாய நிலம் வாங்கினேன். தற்போது நிலத்தை விற்பனை செய்தவர்களே நிலத்தில் 50 செண்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துகொண்டு நிலம் எங்களுக்குத்தான் சொந்தம் எனக்கூறி கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

    இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. கடந்தாண்டு குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்ற பிறகும் தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை. ராணுவத்தில் 24 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற எனக்கே இந்த நிலைமையா என நினைத்து வேதனைப்படுகிறேன். ஆகவே எனது உயிருக்கும் குடும்பத்தார் உயிருக்கும் பாதுகாப்பு அளித்து நிலத்தை மீட்டுத்தர வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

    ×