என் மலர்tooltip icon

    சேலம்

    • தெசவிளக்கு தெற்கு கிராமம் கசப்பேரி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலம்
    • காமராஜ் என்பவர் ஆக்கிரமிப்பு

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள தெசவிளக்கு தெற்கு கிராமம் கசப்பேரி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை கோத்தான்வளவு பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்வதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி சங்கர் தலைமையிலான அரசு அலுவலர்கள், அங்கு சென்று ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர்.

    • ரூ.700-ஐ பறிப்பு
    • தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது

    சேலம்:

    சேலம் குகை அருணாசலம் தெருவை சேர்ந்தவர் குமார். இவர், கடந்த மாதம் 19-ந் தேதி மளிகை கடை அருகே நடந்து சென்றார்.அவரை அதே பகுதியை சேர்ந்த ராஜா (வயது 30) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.700-ஐ பறித்து சென்றார்.

    இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகும் ராஜா தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதற்கிடையே ஜாமீனில் வெளியே வந்த ராஜா, தொடர்ந்து வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின் பேரில் அவர் 2-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • ஆலை–யில் இருந்த பட்டாசுகள் எதிர்பாராமல் வெடித்தது
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    எடப்பாடி:

    கொங்கணாபுரம் ஒன்றியம் வெள்ளாளபுரம் அருகே உள்ள, முனியம்பட்டி கிராமம், சன்னியாசி கடை பகுதியில் குமார் (வயது 40) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆலையில் அதே பகுதியை சேர்ந்த அமுதா (45) மற்றும் வெள்ளாளபுரம் வாணக்கார தெருவை சேர்ந்த வேடப்பன் (75) ஆகியோர் தொழிலாளர்களாக பணி செய்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த ஆலையில் இருந்த பட்டாசுகள் எதிர்பாராமல் வெடித்து சிதறிய நிலையில், அங்கு பணியில் இருந்த அமுதா தீயில் கருகி உயிரிழந்தார். பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட வேடப்பன், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலையின் உரிமையாளர் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமல், விபத்து ஏற்படும் வகையில் பட்டாசு ஆலையை நடத்தி வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட விபத்தில் பணியில் இருந்த தொழிலாளர் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்தது தெரியவந்ததை அடுத்து ஆலையின் உரிமையாளர் குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

    • சரணடைந்த முரளி மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளது.
    • சிறையில் அடைக்கப்பட்ட இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க கிருஷ்ணகிரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    சேலம்:

    கிருஷ்ணகிரியை அடுத்த கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 25). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவர், அவதானப்பட்டியை அடுத்த முழுக்கான்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சங்கர் (43) என்பவரது மகள் சரண்யாவை (21) பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்தார்.

    இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் ஜெகன் வசதி குறைவானவர் என்பதால் இவர்களது காதலுக்கு சரண்யா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய சரண்யா, அன்றே ஜெகனை திருமணம் செய்து கொண்டார். பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி மகள் திருமணம் செய்து கொண்டதால் சங்கர் ஆத்திரத்தில் இருந்தார். மகளை எப்படியாவது ஜெகனிடம் இருந்து பிரித்துவிட முயற்சி செய்தார். இது தோல்வியில் முடிந்ததால் ஜெகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

    இந்நிலையில், புது மாப்பிள்ளை ஜெகனை கடந்த 21-ந் தேதி மதியம் சங்கர் உள்பட சிலர், கிருஷ்ணகிரி டேம் கூட் ரோடு அருகே உள்ள சர்வீஸ் சாலையில் வழிமறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். பின்னர் சங்கர், அன்று மாலையே கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். கோர்ட்டு உத்தரவின்பேரில் அவரை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இக்கொலையில் முக்கிய குற்றவாளிகளை தேடி வரும் நிலையில் கிருஷ்ணகிரி நல்லூர் தொட்டதிம்மனஹள்ளி முத்தம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் நாகராஜ் (21), ஜிஞ்சுப்பள்ளி மில்லனப்பள்ளி பில்லக்குப்பத்தைச் சேர்ந்த முனியப்பன் மகன் முரளி (20) ஆகியோர் நேற்று சேலம் ஜே.எம்.4 கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் யுவராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரையும் போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    சரணடைந்த முரளி மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளது. நாகராஜூம், முரளியும் நண்பர்கள் ஆவார்கள். சங்கருடன் முரளிக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில், கொலை வழக்கு உள்ள நபர்தான் ஜெகனை தீர்த்துக்கட்ட வேண்டும் எனக்கூறி சங்கர் அவரை அழைத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    முரளியும், நாகராஜூம் கூலிப்படையாக செயல்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க கிருஷ்ணகிரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • ரூ.128.16 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள்
    • மேட்டூரில் கலந்துரையாடல் கூட்டம்

    மேட்டூர்:

    தமிழ்நாடு நீர்வளம் மறறும் நிலவளத் திட்டத்தின் மூலம் சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங் களைச் சேர்ந்த நீர்வ ளத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறி யியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, மீன்வ ளத்துறை மூலம் ரூ.128.16 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் திட்ட இயக்குனர் தென்காசி ஜவகர் நேற்று மேட்டூரில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார்.

    இதில் நீர்வள மேலாண்மை நிபுணர் டாக்டர் கிருஷ்ணன், வேளாண்மை பொறியியல் துறை நிபுணர் சந்திரசேகரன், கால்நடை பராமரிப்பு துறை நிபுணர் டாக்டர் மனோ கரன், தோட்டக்கலைத்துறை நிபுணர் டாக்டர் வித்யாசா கர், நீர்வளத்துறை கண்கா ணிப்பு பொறியாளர்கள் கவுதமன், அன்பழகன், நீர்வளத்துறை செயற்பொ றியாளர்கள் அருள், அழ கன், சிவக்குமார், ஆனந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த கலந்தாய்வில், இத்திட்டத்தி னால் பெறப்பட்ட பயன்கள் குறித்து அரசு அலுவலர்களி டம் கருத்து கேட்கப்பட்டது.

    கூட்டத்திற்கு பின்னர், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் திட்ட இயக்குனர் தென்காசி ஜவ கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-

    இந்த திட்டமானது உலக வங்கி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக உலக வங்கி மற்றும் தமிழ்நாடு அரசு நிதி ஆகியவை சேர்த்து ரூ.3,650 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது 33 மாவட்டங்களில் 47 ஆற்று படுகைகளில் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    ஒரு துளி தண்ணீரை கூட விவசாயிகளுக்கு பய னுள்ளதாக ஆக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். 7 துறைகள் மற்றும் 3 பல்கலைக்கழ கங்கள் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயி களை நேரில் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களை கேட்டு வருகின்றோம். அடுத்த மாதம் உலக வங்கி சார்பில் 3 குழுக்கள் தமிழகத்திற்கு வருகிறது. இந்த குழுவினர் இந்த திட்டத்தின் பயன்கள் குறித்து நேரடியாக ஆய்வு செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    • குழந்தைகளுக்கு வேறு என்ன வசதிகள் செய்து தர வேண்டும்
    • குழந்தைகளுடன் அமர்ந்து பாடபுத்தகத்தை வாசித்தார்

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் சுற்று வட்டார மலை கிராமங்க ளில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், அதிகாரிகளுடன் சென்று குறைகள் கேட்டு அறிந்தார்.

    பின்னர் அவர் ஏற்காடு அருகே நாகலூர் பகுதியில் இருக்கும் மாதிரி பள்ளிக்குச் சென்று, பள்ளி முழுவதும் சுற்றி பார்த்து ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு வேறு என்ன வசதிகள் செய்து தர வேண்டும்? என கேட்டறிந்தார். பின்பு முளுவி கிராமத்தில் உள்ள பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, குழந்தைகளுடன் அமர்ந்து பாடபுத்தகத்தை வாசித்தார்.

    அங்குள்ள சத்துணவு மையத்திற்கும் கலெக்டர் கார்மேகம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, கல்வித் துறை அதி காரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.தொடர்ந்து முளுவி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு, பயனாளிகளுக்கு ரூ.93 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி னார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை அதிகாரி கள், பொதுமக்கள், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சின்ன வெள்ளை, கோகிலா, ஏற்காடு ஆணையாளர் அன்புராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    • மாணவி சரியாக படிக்காததால் பெற்றோர் திட்டியதாக மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் மாணவி சரியாக படிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவியை பெற்றோர் பலமுறை கண்டித்தனர். ஆனாலும் அந்த மாணவி அதனை கண்டு கொள்ளாததால் நேற்று இரவு பெற்றோர் மீண்டும் திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவி வீட்டின் 3-வது மாடியில் இருந்து நேற்று இரவு கீழே குதித்தார். இதில் அவரது இடுப்பு எலும்பு உடைந்ததால் கதறினார். இதனை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினார்.

    பின்னர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில், காதல் பிரச்சனை மற்றும் மாணவி சரியாக படிக்காததால் பெற்றோர் திட்டியதாகவும், இதனால் அவர் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    • நேற்று 103.15 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று 103.11 அடியாக சரிந்தது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1,260 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,248 கனஅடியாக சரிந்தது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று 103.15 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று 103.11 அடியாக சரிந்தது.

    • பெயிண்டரான மகா விஷ்ணு, பொங்கல் பண்டிகை முடிந்து மும்பை சென்ற மகேஸ்வரியிடம் தொடர்ந்து செல்போனில் பேசி தனது காதலை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
    • மகா விஷ்ணு மற்றும் அவரது குடும்பத்தினர், மகேஸ்வரியை ஒரு வீட்டினுள் அடைத்து வைத்து கருவை அழிக்க வேண்டி கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் வேலு. இவருடைய மகள் மகேஸ்வரி (வயது 22). இவர் சிறு வயது முதலே மும்பையில் சித்தி வீட்டில் தங்கி இருந்தார்.

    இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை கொண்டாட தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் மகாவிஷ்ணு (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    பெயிண்டரான மகா விஷ்ணு, பொங்கல் பண்டிகை முடிந்து மும்பை சென்ற மகேஸ்வரியிடம் தொடர்ந்து செல்போனில் பேசி தனது காதலை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாட முத்தம்பட்டிக்கு மகேஸ்வரி வந்துள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை மகா விஷ்ணு, மகேஸ்வரியுடன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் மகேஸ்வரி கர்ப்பம் தரித்தார்.

    இதை அறிந்த மகா விஷ்ணு மற்றும் அவரது குடும்பத்தினர், மகேஸ்வரியை ஒரு வீட்டினுள் அடைத்து வைத்து கருவை அழிக்க வேண்டி கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. அங்கிருந்து தப்பி வந்த மகேஸ்வரி வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், மகாவிஷ்ணு அவருடைய தந்தை ரவிச்சந்திரன், தாயார் சிவகாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • இளம்பெண் சேலம் புதிய பஸ் நிலையம் இறங்கியதும் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
    • சசிக்குமார் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருவது தெரியவந்தது.

    சேலம்:

    புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயது பெண் நர்சிங் படித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து சேலத்திற்கு அரசு பஸ்சில் வந்தார். அப்போது அந்த பெண்ணின் இருக்கைக்கு பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த 2 பேர் ஆபாசமாக பேசியபடி வந்துள்ளனர்.

    இதுகுறித்து பஸ் டிரைவரிடம் தெரிவித்த போது, அவர் கண்டுக்கொள்ளவில்லை என தெரிகிறது. பின்னர் அந்த இளம்பெண், சேலம் புதிய பஸ் நிலையம் இறங்கியதும் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

    அதில், திருச்சி மாவட்டம் முசிறி பாப்பம்பட்டியைச் சேர்ந்த சசிக்குமார் (37) மற்றும் அவரது நண்பர், நர்சிடம் ஆபாசமாக பேசி வந்ததும், சசிக்குமார் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து 2 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

    • சம்பத்குமார் அமிர்தவள்ளியுடன் இருந்து கொண்டு மனைவி குழந்தைகளை கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
    • ஏட்டு சம்பத்குமாரின் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகே உள்ள மானத்தாள் கிராமம், தாண்டவனூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் சென்னை ஆயுதப் படையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சரஸ்வதி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.

    இந்நிலையில் தாரமங்கலம் ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் அமிர்தவள்ளி என்பவருக்கும், சம்பத்குமாருக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளாக தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

    கணவனை இழந்த அமிர்தவள்ளி ஒரு மகனுடன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பத்குமார் அமிர்தவள்ளியுடன் இருந்து கொண்டு மனைவி குழந்தைகளை கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த சரஸ்வதி, சம்பவத்தன்று அமிர்தவள்ளி வீட்டில் கணவர் இருப்பது தெரியவந்ததால் கணவனை தேடி அங்கு சென்றுள்ளார்.

    மனைவியை பார்த்தவுடன் அங்கிருந்து போலீஸ் ஏட்டு சம்பத்குமார் வெளியே ஓடியுள்ளார். பின்னர் வீட்டில் புகுந்த சரஸ்வதியை அமிர்தவள்ளி தாக்கியுள்ளார். பதிலுக்கு அவரும் தாக்கியதால் இருவரும் காயம் அடைந்து ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனிடையே ஏட்டு சம்பத்குமாரின் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட ஏட்டு சம்பத்குமார் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. இந்த சம்பவம் தாரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சுபாஷ் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார்.
    • தனிப்படை போலீசார் சுபாசை கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    சேலம்:

    கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 38). இவரும் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தனர். இந்நிலையில் அந்த மாணவி கடந்த 2008-ம் ஆண்டு மேல் படிப்பிற்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார்.

    சுபாசும் காதலை தொடர்வதற்காக அங்கு வந்து தங்கி உள்ளார். அப்போது காதலர்கள் இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். இந்த நிலையில் சுபாஷ் ஆசைவார்த்தை கூறி அந்த மாணவியை கற்பழித்தார். இதனால் மாணவி கடந்த 2008-ம் ஆண்டு கர்ப்பம் அடைந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் அளித்தனர்.

    இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆட்டையாம்பட்டி போலீ சார் சுபாசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சுபாஷ் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து கடந்து 2013-ம் ஆண்டு சேலம் கோர்ட்டு சுபாஷிற்கு பிடிவாரண்டு பிறப்பித்தது.

    பின்னர் தனிப்படை போலீசார் சுபாசை கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் கேரளாவில் பதுங்கி இருந்த சுபாசை நேற்று போலீசார் கைது செய்தனர்.

    ×