என் மலர்
உள்ளூர் செய்திகள்

முளுவியில் உள்ள பள்ளியில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்த காட்சி. அருகில் வருவாய் அலுவலர் மேனகா உள்ளார்.
ஏற்காடு மலை கிராமங்களில் கலெக்டர் ஆய்வு
- குழந்தைகளுக்கு வேறு என்ன வசதிகள் செய்து தர வேண்டும்
- குழந்தைகளுடன் அமர்ந்து பாடபுத்தகத்தை வாசித்தார்
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் சுற்று வட்டார மலை கிராமங்க ளில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், அதிகாரிகளுடன் சென்று குறைகள் கேட்டு அறிந்தார்.
பின்னர் அவர் ஏற்காடு அருகே நாகலூர் பகுதியில் இருக்கும் மாதிரி பள்ளிக்குச் சென்று, பள்ளி முழுவதும் சுற்றி பார்த்து ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு வேறு என்ன வசதிகள் செய்து தர வேண்டும்? என கேட்டறிந்தார். பின்பு முளுவி கிராமத்தில் உள்ள பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, குழந்தைகளுடன் அமர்ந்து பாடபுத்தகத்தை வாசித்தார்.
அங்குள்ள சத்துணவு மையத்திற்கும் கலெக்டர் கார்மேகம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, கல்வித் துறை அதி காரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.தொடர்ந்து முளுவி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு, பயனாளிகளுக்கு ரூ.93 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி னார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை அதிகாரி கள், பொதுமக்கள், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சின்ன வெள்ளை, கோகிலா, ஏற்காடு ஆணையாளர் அன்புராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






