என் மலர்
நீங்கள் தேடியது "காமராஜ் என்பவர் ஆக்கிரமிப்பு"
- தெசவிளக்கு தெற்கு கிராமம் கசப்பேரி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலம்
- காமராஜ் என்பவர் ஆக்கிரமிப்பு
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள தெசவிளக்கு தெற்கு கிராமம் கசப்பேரி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை கோத்தான்வளவு பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்வதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி சங்கர் தலைமையிலான அரசு அலுவலர்கள், அங்கு சென்று ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர்.






