என் மலர்tooltip icon

    சேலம்

    • அதிகாலை 2.30 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நடந்து சென்று கொண்டி ருந்தார்.
    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செல்வகுமார் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சிந்தாமணியூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 43). இவர் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

    இவர் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செல்வகுமார் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

    இது குறித்து செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில், பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலத்தில் சமீப காலமாக வழிப்பறிக் கொள்ளையர்கள், நடந்து செல்லும் பெண்கள் உட்பட பல்வேறு நபர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்து செல்போன் மற்றும் பணம், நகைகளை பறித்து செல்வது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • சீனிவாசன் (வயது 57). இவர் டீத்தூள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
    • தனது வீட்டில் வைத்திருந்த 132 பவுன் நகைகள் கடந்த 3 மாத காலத்திற்குள் மாயமாகி விட்டதாக தெரிவித்திருந்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை இ.வி.கே தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 57). இவர் டீத்தூள் மொத்த வியாபாரம் செய்து வருகி றார். இவர் தனது மனைவி, 2 மகன், 2 மருமகள் மற்றும் ஒரு மகளுடன் கூட்டு குடும்ப மாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் சீனிவாசன், அம்மாபேட்டை போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது வீட்டில் வைத்திருந்த 132 பவுன் நகைகள் கடந்த 3 மாத காலத்திற்குள் மாயமாகி விட்டதாக தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அம்மாபேட்டை போலீசார், வீட்டில் இருந்த தங்க நகைகள் எப்படி மாயமானது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் வீட்டுக்கு வந்து செல்லும் நபர்கள் மற்றும் வேலையாட்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வீட்டிலிருந்த 132 தங்க நகைகள் மாயமான சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கிராம நிர்வாக அலுவ லர்கள் சங்கத்தின் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி ஆர்.டி.ஓ அலுவ லகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவ லர்கள் சங்கத்தின் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சேலம் மாவட்ட துணைத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். சங்க கிரி கோட்ட செயலாளர் பிரதீப்குமார் முன்னிலை வகித்தார். சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

    சங்ககிரி வட்ட தலைவர் மணி, செயலாளர் மோகன், இடைப்பாடி வட்டத் தலைவர் அப்புசாமி, செயலாளர் ராஜா உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 

    • சன்னியாசி கடை பகுதியில் குமார் (வயது 40) என்ப வருக்கு சொந்தமான தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது.
    • அதிக சத்தத்துடன் வெடிக்கும் வெடிகள் மற்றும் சரவெடிகள், வாண வெடிகள் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டு வந்தது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, வெள்ளாளபுரம் ஊராட்சி, முனியம் பட்டியைஅடுத்த சன்னியாசி கடை பகுதியில் குமார் (வயது 40) என்ப வருக்கு சொந்தமான தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது.

    அரசு அனுமதியுடன் செயல்பட்டு வந்த இந்த ஆலையில், விழா காலங்களில் பயன்படுத்துவ தற்கான அதிக சத்தத்துடன் வெடிக்கும் வெடிகள் மற்றும் சரவெடிகள், வாண வெடிகள் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த

    22-ந் தேதி மாலை இந்த ஆலையில் இருந்த பட்டாசுகள் மற்றும் வெடி மருந்துகள் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த சன்னியாசிக் கடை பகுதியை சேர்ந்த அமுதா (45) என்பவர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பலத்த தீக்காயங்க ளுடன் மீட்கப்பட்ட, வெள்ளாள புரம் வாண கார தெருவை சேர்ந்த வேடப்பன் (75) என்பவர், சேலம் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த வேடப்பன், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்தது.

    போதிய பாதுகாப்பு சாதனங்கள் இன்றி, விபத்து ஏற்படும் வகையில் அஜாக்கி ரதையாக செயல்பட்டதாக, சம்பந்தப்பட்ட ஆலையின் உரிமையாளர் குமார் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தேர்வு வினாத் தாள்களை பிரிண்ட் எடுக்க சேலம் மாவட்டத்தில் 661 அரசுப் பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டுள்ளது
    • முழு ஆண்டுத் தேர்வு உள்ளிட்டவை நடத்தும்போது, தேர்வு வினாத்தாள்கள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    சேலம்:

    தேர்வு வினாத் தாள்களை பிரிண்ட் எடுக்க சேலம் மாவட்டத்தில் 661 அரசுப் பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டுள்ளது

    9-ம் வகுப்பு வரை...

    அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையில் மாண–வர்களுக்கு காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு உள்ளிட்டவை நடத்தும்போது, தேர்வு வினாத்தாள்கள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கும் நிலையில் தேர்வுக்கு முன்ன–தாக வினாத்தாள் கசிந்து, முறைகேடு நடைபெறும் வாய்ப்பும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.

    இதைத் தடுக்க அரசுப் பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தேர்வு நாளான்று மின்னஞ்சல் மூலமாக வினாத்தாளை அனுப்பி, அதை அந்தந்த பள்ளிகளிலேயே பிரிண்ட் எடுத்துப் பயன்–படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

    இதன்படி, சேலம் மாவட்டத்தில் 661 அரசுப் பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டுள்ளது.

    661 பள்ளிகளுக்கு பிரிண்டர்

    இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    சேலம் மாவட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளிகள் 366, உயர்நிலைப்பள்ளிகள் 136, மேல்நிலைப்பள்ளிகள் 159 என மொத்தம் 661 அரசு பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டுள்ளது.

    அதில், மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 500-க்கும் கூடுதலாக கொண்டிருக்கும் பள்ளிக–ளுக்கு பெரிய அளவிலான பிரிண்டரும், மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 500-க்கும் குறைவாக இருந்தால் சிறிய பிரிண்டரும் வழங்கப்பட்டுள்ளது.

    அவற்றை பயன்படுத்தும் வழிமுறைக் குறித்து, அந்தந்த பள்ளிகளைச் சேர்ந்தவர்களுக்கு சேலத்தில் பயிற்சி வழங்கப்–பட்டுள்ளது.பிரிண்டர்களில் பயன்ப

    டுத்துவதற்கான பேப்பர் களை வாங்குவதற்காக அனைத்து பள்ளி–களுக்கும் மொத்தம் ரூ.54.13 லட்சம் அனுப்பப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
    • பிளஸ்-2 மாணவி யுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் தகாத உறவாக மாறியது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    மாணவியுடன் பழக்கம்

    மனைவி, குழந்தை களுடன் பெரம்பலூரில் வசித்து வந்த இவருக்கு, சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி யுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் தகாத உறவாக மாறியது. இதை தொடர்ந்து அந்த மாணவியை பல இடங்க ளுக்கு அழைத்து சென்று பிரபாகரன் உல்லாசமாக இருந்தார்.

    8 மாத கர்ப்பம்

    இதனால் அந்த மாணவி கர்ப்பமடைந்தார். தற்போது 8 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதை அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து மாணவி யிடம் கேட்டபோது, போலீஸ்காரர் பிரபாகர னுடன் ஏற்பட்ட பழக்கத் தால் கர்ப்பமானதாக அவர் தெரிவித்தார்.

    போலீசில் புகார்

    இதுகுறித்து ஆத்தூர் மகளிர் போலீஸ் நிலையத் தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார், விடுமுறையில் சிறுவாச்சூர் வந்திருந்த போலீஸ்காரர் பிரபா கரனை நேற்று மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தனர்.

    தப்பி ஓட்டம்

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது பிரபாகரன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி வந்து, வெளியில் தயாராக இருந்த நண்பருடன் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பினார். அவரை மகளிர் போலீசார் துரத்தி சென்றனர். ஆனாலும் அவரை பிடிக்க முடியவில்லை.

    தனிப்படை

    இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தப்பி ஓடிய பிரபாகரனை தேடி வருகிறார்கள். மேலும் அவரது செல்போன் என்னை வைத்தும் அவர் பதுங்கி இருக்கும் இடத்தை ஆய்வு செய்து வரும் போலீசார், விரைவில் அவரை கைது செய்வோம் என்று தெரிவித்தனர். 

    • இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகளின் ‘உழன்றும் உழவே தலை’ எனும் தலைப்பில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது.
    • இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    வாழப்பாடி:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முள்ளுக்குறிச்சி மாரியம்மன் கோவில் வளாகத்தில் ஊரக வேளாண் பணி அனுபவம் பெரும் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகளின் 'உழன்றும் உழவே தலை' எனும் தலைப்பில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது.

    கூட்டுறவு கடன் சங்க செயலர் ஆண்டி, முதல்வர் துரைராஜ் மற்றும் உதவி பேராசிரியர்கள் வழிகாட்டுதலின்படி, இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவு கடன் சங்க தலைவர் வையாபுரி மற்றும் காசி, சிவகாமி, பரமேஸ்வரி, பாலசந்தர் மற்றும் சரவணகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    மாணவிகள், செல்வ ஈஸ்வரி, ஷாலினி, சாந்தப்பிரியா , சாந்தினி, சினேகா, சௌமியா, சுப்ரியா, சுஷ்மிதா, திருவாசுகி மற்றும் விவேகாஸ்ரீ ஆகியோர், பொம்மலாட்டம், இயற்கை உணவு கண்காட்சி மற்றும் வேளாண் தொழில்நுட்ப கண்காட்சி செயல் விளக்கம் அளித்தனர். முள்ளுக்குறிச்சி சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கண்காட்சி கண்டுகளித்து பயனடைந்தனர்.

    • நகராட்சி மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.
    • நகராட்சி நிதி நிலைமையை சரி செய்ய பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று நிதி திரட்டி வந்துள்ளேன்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் முஸ்தபா. துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முதலில் தீர்மானங்கள் வாசிக்க தொடங்கும் முன்பு வார்டு குறைகளை உறுப்பினர்கள் எடுத்து கூறினர்.

    அப்போது 23-வது வார்டு தி.மு.க உறுப்பினர் வேதாச்சலம் ஒரு மஞ்சள் பையுடன் ஆணையாளர் மற்றும் தலைவர் முன்பாக வந்தார். என்னுடைய வார்டுக்கு இதுவரை எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை, பதிலாக நிதி இல்லை என்று கூறுகின்றீர்கள். இதனால் நகராட்சி நிதி நிலைமையை சரி செய்ய பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று நிதி திரட்டி வந்துள்ளேன் பெற்று கொள்ளுங்கள் என்று கூறி கடும் வாக்குவாதம் செய்தார்.

    அதனை தொடர்ந்து இதே கருத்தை வலியுறுத்தி 24-வது வார்டு தி.மு.க உறுப்பினர் மைசூர் மற்றும் 22-வது வார்டு வி.சி.க உறுப்பினர் சின்னுசாமி ஆகியோர் அவை முன்னால் வந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அதனை தொடர்ந்து பேசிய கவுன்சிலர் வேதாச்சலம் 13-வது வார்டு பகுதியில் உள்ள குட்டையை பராமரிப்பு பணியை மேற்கொள்ள அரசு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. குட்டையை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதால் குட்டையை வருவாய் துறை மூலம் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டும். தவறும் பட்சத்தில் பொதுமக்களை திரட்டி மீட்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    அடுத்து பேசிய 12-வது வார்டு தி.மு.க உறுப்பினர் அனுராதா சீனிவாசன் கீழ் சின்னாகவுண்டம்பட்டியில் உள்ள மயான நிலத்தை நகராட்சி தேவைக்கு பயன்படுத்திகொள்ள முடிவு செய்து உள்ளதை நான் பொதுமக்கள் சார்பாக ஆட்சேபனை தெரிவிக்கிறேன் என்று கூறி ஆணையாளரிடம் மனு வழங்கினார். அதனை தொடர்ந்து கூட்டத்தில் 60 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

    • ஏத்தாப்பூர் போலீஸ் நிலையம் அருகிலேயே நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார், அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் ஏத்தாப்பூர் போலீஸ் நிலையம் அருகில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் 5 பேர் கொண்ட கும்பல், 10 இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மர்ம கும்பல், ஏத்தாப்பூர் போலீஸ் நிலையம் பகுதியை சேர்ந்த பாஸ்கர், சௌந்தர்ராஜன், பழனி, சத்தியா, முருகன், துரைசாமி உள்ளிட்டோரின் வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் துரைசாமி என்பவர் தனது மனைவி கலைச்செல்வி மற்றும் குழந்தைகளோடு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் சிலர் துரைசாமி வீட்டின் உள்ளே புகுந்தனர்.

    அங்கு தூங்கிக் கொண்டிருந்த கலைச்செல்வியை தாக்கியதுடன், அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி ஓடினர். இதேபோல் அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளிலும் புகுந்த கொள்ளையர்கள், நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஏத்தாப்பூர் போலீஸ் நிலையம் அருகிலேயே நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளிகள் 366, உயர்நிலைப்பள்ளிகள் 136, மேல்நிலைப்பள்ளிகள் 159 என மொத்தம் 661 அரசு பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டுள்ளது.
    • பிரிண்டர்களில் பயன்படுத்துவதற்கான பேப்பர்களை வாங்குவதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் மொத்தம் ரூ.54.13 லட்சம் அனுப்பப்பட்டு உள்ளது.

    சேலம்:

    அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு காலாண்டுத்தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு உள்ளிட்டவை நடத்தும்போது, தேர்வு வினாத்தாள்கள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கும் நிலையில் தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்து, முறைகேடு நடைபெறும் வாய்ப்பும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.

    இதைத் தடுக்க அரசுப் பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தேர்வு நாளான்று மின்னஞ்சல் மூலமாக வினாத்தாளை அனுப்பி, அதை அந்தந்த பள்ளிகளிலேயே பிரிண்ட் எடுத்துப் பயன்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி, சேலம் மாவட்டத்தில் 661 அரசுப் பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    சேலம் மாவட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளிகள் 366, உயர்நிலைப்பள்ளிகள் 136, மேல்நிலைப்பள்ளிகள் 159 என மொத்தம் 661 அரசு பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டுள்ளது.

    அதில், மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 500-க்கும் கூடுதலாக கொண்டிருக்கும் பள்ளிகளுக்கு பெரிய அளவிலான பிரிண்டரும், மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 500-க்கும் குறைவாக இருந்தால் சிறிய பிரிண்டரும் வழங்கப்பட்டுள்ளது.

    அவற்றை பயன்படுத்தும் வழிமுறைக் குறித்து, அந்தந்த பள்ளிகளைச் சேர்ந்தவர்களுக்கு சேலத்தில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பிரிண்டர்களில் பயன்படுத்துவதற்கான பேப்பர்களை வாங்குவதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் மொத்தம் ரூ.54.13 லட்சம் அனுப்பப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தாகமாக உள்ளதாகக் கூறி தண்ணீர் கேட்டுள்ளனர்
    • ஜயா அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம், வளையல் பறிப்பு

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புத்திரகவுண்டன் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே உதயகுமார் மனைவி விஜயா (வயது 67) என்பவர் வீட்டிற்கு அருகிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இவரது கடைக்கு, கணவன் -மனைவி போல வந்த இருவர், தாகமாக உள்ளதாகக் கூறி தண்ணீர் கேட்டுள்ளனர். தண்ணீர் கொண்டு வர விஜயா கடையிலிருந்து வீட்டிற்குள் சென்றார்.அப்போது, அவரை தாக்கிய இருவரும், விஜயா அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம், வளையல் உள்ளிட்ட 7 சவரன் நகைகளை பறித்துச் சென்று விட்டனர்.இதுகுறித்து விஜயா அளித்த புகாரின் பேரில், ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.

    • மாணவர் சேர்க்கை என்று அழைக்கப்படும் ‘சீட்டா’ நுழைவுத்தேர்வு
    • ஹால்டிக்கெட் கடந்த 11-ந்தேதி வெளியிடப்பட்டுவிட்டது

    சேலம்:

    அரசு, அரசு உதவி பெறும், தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கு 'டான்–செட்' நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

    கடந்த ஆண்டு வரை எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் போன்ற படிப்புகளுக்கும் டான்–செட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் இருந்து பொது என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை என்று அழைக்கப்படும் 'சீட்டா' நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

    இந்த 2 நுழைவுத்தேர்வுகளுக்கும் விண்ணப்பிப்பதற்கு ஏற்கனவே அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், எம்.பி.ஏ. படிப்புக்கு 24 ஆயிரத்து 468 பேரும், எம்.சி.ஏ. படிப்புக்கு 9 ஆயிரத்து 820 பேரும் என மொத்தம் 34 ஆயிரத்து 288 பேர் 'டான்–செட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதேபோல், சீட்டா நுழைவுத்தேர்வுக்கு 4 ஆயிரத்து 961 பேரும் விண்ணப்பித்திருக்கின்றனர். இவர்களுக்கான ஹால்டிக்–கெட் கடந்த 11-ந்தேதி வெளியிடப்பட்டுவிட்டது. இந்த நிலையில் இதில் 'டான்–செட்' நுழைவுத்தேர்வு நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் எம்.சி.ஏ. படிப்புக்கு காலையிலும், எம்.பி.ஏ. படிப்புக்கு பிற்பகலிலும் தேர்வு நடக்கிறது. சீட்டா நுழைவுத்தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற உள்ளது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் ஏராளமான பட்டதாரிகள் பங்கேற்று தேர்வு எழுத உள்ளனர். இதற்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ×