என் மலர்
நீங்கள் தேடியது "மர்ம நபர்கள் இருவரையும் தேடி வருகின்றனர் Mysterious persons are looking for both"
- தாகமாக உள்ளதாகக் கூறி தண்ணீர் கேட்டுள்ளனர்
- ஜயா அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம், வளையல் பறிப்பு
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புத்திரகவுண்டன் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே உதயகுமார் மனைவி விஜயா (வயது 67) என்பவர் வீட்டிற்கு அருகிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார்.
நேற்று இவரது கடைக்கு, கணவன் -மனைவி போல வந்த இருவர், தாகமாக உள்ளதாகக் கூறி தண்ணீர் கேட்டுள்ளனர். தண்ணீர் கொண்டு வர விஜயா கடையிலிருந்து வீட்டிற்குள் சென்றார்.அப்போது, அவரை தாக்கிய இருவரும், விஜயா அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம், வளையல் உள்ளிட்ட 7 சவரன் நகைகளை பறித்துச் சென்று விட்டனர்.இதுகுறித்து விஜயா அளித்த புகாரின் பேரில், ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.






