சேலம் அம்மாபேட்டையில் வியாபாரி வீட்டில் 132 பவுன் நகைகள் மாயம்

சீனிவாசன் (வயது 57). இவர் டீத்தூள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். தனது வீட்டில் வைத்திருந்த 132 பவுன் நகைகள் கடந்த 3 மாத காலத்திற்குள் மாயமாகி விட்டதாக தெரிவித்திருந்தார்.
சேலம் அம்மாபேட்டையில் வியாபாரி வீட்டில் 132 பவுன் நகைகள் மாயம்
Published on

சேலம்:

சேலம் அம்மாபேட்டை இ.வி.கே தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 57). இவர் டீத்தூள் மொத்த வியாபாரம் செய்து வருகி றார். இவர் தனது மனைவி, 2 மகன், 2 மருமகள் மற்றும் ஒரு மகளுடன் கூட்டு குடும்ப மாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சீனிவாசன், அம்மாபேட்டை போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது வீட்டில் வைத்திருந்த 132 பவுன் நகைகள் கடந்த 3 மாத காலத்திற்குள் மாயமாகி விட்டதாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அம்மாபேட்டை போலீசார், வீட்டில் இருந்த தங்க நகைகள் எப்படி மாயமானது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வீட்டுக்கு வந்து செல்லும் நபர்கள் மற்றும் வேலையாட்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வீட்டிலிருந்த 132 தங்க நகைகள் மாயமான சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com