என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்ககிரி ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வி.ஏ.ஓ.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
சங்ககிரியில் வி.ஏ.ஓ.க்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
- கிராம நிர்வாக அலுவ லர்கள் சங்கத்தின் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி ஆர்.டி.ஓ அலுவ லகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவ லர்கள் சங்கத்தின் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்ட துணைத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். சங்க கிரி கோட்ட செயலாளர் பிரதீப்குமார் முன்னிலை வகித்தார். சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
சங்ககிரி வட்ட தலைவர் மணி, செயலாளர் மோகன், இடைப்பாடி வட்டத் தலைவர் அப்புசாமி, செயலாளர் ராஜா உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.