என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம், நாமக்கல் மாவட்டங்களில், நாளை 'டான்செட்' நுழைவுத்தேர்வு
- மாணவர் சேர்க்கை என்று அழைக்கப்படும் ‘சீட்டா’ நுழைவுத்தேர்வு
- ஹால்டிக்கெட் கடந்த 11-ந்தேதி வெளியிடப்பட்டுவிட்டது
சேலம்:
அரசு, அரசு உதவி பெறும், தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கு 'டான்–செட்' நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு வரை எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் போன்ற படிப்புகளுக்கும் டான்–செட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் இருந்து பொது என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை என்று அழைக்கப்படும் 'சீட்டா' நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்த 2 நுழைவுத்தேர்வுகளுக்கும் விண்ணப்பிப்பதற்கு ஏற்கனவே அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், எம்.பி.ஏ. படிப்புக்கு 24 ஆயிரத்து 468 பேரும், எம்.சி.ஏ. படிப்புக்கு 9 ஆயிரத்து 820 பேரும் என மொத்தம் 34 ஆயிரத்து 288 பேர் 'டான்–செட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதேபோல், சீட்டா நுழைவுத்தேர்வுக்கு 4 ஆயிரத்து 961 பேரும் விண்ணப்பித்திருக்கின்றனர். இவர்களுக்கான ஹால்டிக்–கெட் கடந்த 11-ந்தேதி வெளியிடப்பட்டுவிட்டது. இந்த நிலையில் இதில் 'டான்–செட்' நுழைவுத்தேர்வு நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் எம்.சி.ஏ. படிப்புக்கு காலையிலும், எம்.பி.ஏ. படிப்புக்கு பிற்பகலிலும் தேர்வு நடக்கிறது. சீட்டா நுழைவுத்தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற உள்ளது.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் ஏராளமான பட்டதாரிகள் பங்கேற்று தேர்வு எழுத உள்ளனர். இதற்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.






