என் மலர்
சேலம்
- வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
- மறைமுக ஏலத்தில் 1.30 டன் தேங்காய் பருப்பு ரூ.78 ஆயிரத்துக்கு விற்பனையானது.
வாழப்பாடி:
சேலம் மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
முதல் தர பருப்பு மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்திலும், 2, 3-ம் தர பருப்பு, மறைமுக ஏலத்தி லும் விவசாயி களிடம் இருந்து கொள் முதல் செய்யப்பட்டது.
மறைமுக ஏலத்தில் 1.30 டன் தேங்காய் பருப்பு ரூ.78 ஆயிரத்துக்கு விற்பனையானது. 2-ம் தர தேங்காய் பருப்பு ஒரு கிலோ ரூ.65.65 வரையும், 3-ம் தரம் ரூ.58.05 வரையும் ஏலம் போனது. இந்த ஏலத்தில் சேலம், நாமக்கல், வெள்ளக் கோயில் மற்றும் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
வாழப்பாடி பகுதியில் தேங்காய் பருப்பு உற்பத்தி செய்யும் விவசாயிகள், வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து, மத்திய அரசின் ஆதரவு விலை பெறலாம்.
நேரடியாக வியாபாரி களிடம் ஏல முறையில் விற்பனை செய்து பயன் பெறலாம் என, விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரபாவதி தெரிவித்தார்.
- தீபிகா கணவர் வீட்டு முன்பு அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
- கணவருடன் சேர்த்து வைக்கும் வரை போராட்டத்தை தொடர்வேன் என்று கூறியதால் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரம் முத்துமாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 60). ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி ஜூலி (55),
இவர்களது மகன் விக்னேஷ் (23), கடந்த 2021-ம் ஆண்டு கோவையில் தங்கி எம்.பி.ஏ படித்து வந்தார். சென்னை தரமணியை சேர்ந்த சுப்ரமணியம் என்பவர் மகள் தீபிகா (23), சென்னையில் பி.காம். படித்து வந்தார்.
இவருக்கும் விக்னேசுக்கும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இதன் தொடர்ச்சியாக இருவரும் மேற்படிப்புக்காக திருச்சியில் ஒரே வீட்டில் தங்கி இருந்து படித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் விக்னேஷ் திருச்சிக்கு செல்லவில்லை. மேலும் மாணவி தீபிகாவுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசவில்லை.
இதனால் காதலரை தேடி தீபிகா சேலத்துக்கு கடந்த மாதம் வந்தார். அப்போது தீபிகா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து கொடுத்த மனுவில், விக்னேஷ் என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தேன். எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என புகார் மனு கொடுத்தார்.
இதுகுறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேசிய நிலையில் விக்னேஷ் தீபிகாவை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு ஒரு மாத காலம் விக்னேஷ் சென்னை தரமணியில் மாமனார் வீட்டில் தங்கி இருந்தார். பின்னர் ஆத்தூர் சென்று வருவதாக கூறியவர் மீண்டும் மனைவியை பார்க்க செல்லவில்லை.
இதனால் ஏமாற்றம் அடைந்த தீபிகா தனது உறவினுடன் ஆத்தூர் சக்தி நகரில் உள்ள தனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என கூறி கடந்த 3 நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினார்.
ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, தனது மனைவி ஜூலி, மகன் விக்னேஷ் ஆகியோருடன் நேற்று வீட்டை பூட்டி விட்டு சென்றார். பின்னர் ரவி தனது குடும்பத்தினருடன் நேற்று ஆத்தூர் மகளிர் போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை நடத்தினார். அப்போது விக்னேஷ் கூறுகையில், நான் கல்லூரியில் படிக்கும்போது இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை சேர்ந்த தீபிகாவுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்தேன். கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டேன்.
ஆத்தூர் மகளிர் போலீசில் தீபிகா என் மீது புகார் அளித்தபோது, கடந்த ஏப்ரல் 20-ந்தேதி இன்ஸ்பெக்டர் தமிழரசி என்னை கட்டாயப்படுத்தியதால் தீபிகாவின் கழுத்தில் தாலி கட்டினேன்.
2 தினங்களுக்கு முன்பு எனது வீட்டிற்கு வந்த தீபிகா மற்றும் அவரது உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே வந்து எனது சகோதரி சங்கீதாவை தாக்கினர். தீபிகாவுடன் வாழ்வதற்கு விருப்பம் இல்லாததால் அவரது வீட்டிற்கு செல்லும்படி கூறியும் என்னை டார்ச்சர் செய்து மிரட்டல் விடுத்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ரவி மீண்டும் வீட்டிற்கு திரும்பினார்.
இந்த நிலையில் 4-வது நாளாக தீபிகா இன்றும் கணவர் வீட்டு முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தீபிகா கூறுகையில், ஆத்தூர் புதுப்பேட்டையை சேர்ந்த நான் சில ஆண்டுகளாக பெற்றோருடன் சென்னையில் குடியிருந்து வருகிறேன்.
2020-ம் ஆண்டு முதல் விக்னேசை காதலித்தேன். இருவரும் சென்னை, திருச்சியில் படித்துக் கொண்டிருந்த போது லிவிங் டு கெதர் முறையில் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தோம். அதன்பின் சென்னை ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த போது வீட்டில் நெருக்கமாக வாழ்ந்து வந்தோம். 2022-ல் என்னை விட்டு சென்றதால், சென்னை தரமணி ஸ்டேஷனில் புகார் அளித்தேன்.
கடந்த ஏப்ரல் 20-ந்தேதி ஆத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து விக்னேஷ் எனக்கு தாலி கட்டினார். மீண்டும் அவர் பிரிந்து சென்றதால் ஆத்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தேன். அவரது பெற்றோர் வீட்டிற்குள் அனுமதிக்காதால் 2 நாட்களாக வீட்டின் வெளியே இருந்தேன்.
நேற்று வீட்டை பூட்டிவிட்டு சென்றதால் கதவை உடைத்து உள்ளே சென்றேன். என் மீது விக்னேஷ் பொய்யான புகார் கூறுகிறார். அவரது பெற்றோர், கணவருடன் சேர்ந்து வாழ விடாமல் வரதட்சனை கேட்டு மிரட்டி வருகின்றனர்.
நான் விக்னேஷ் உடன் சேர்ந்து வாழ்வேன், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதற்காக எத்தனை நாள் வேண்டுமானாலும் போராட்டத்தில் ஈடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து போலீசார் இன்று தீபிகாவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர். அதனால் சேலத்திற்கு வருவதாக தீபிகா கூறினார்.
ஆனாலும் இன்று காலையில் தீபிகா கணவர் வீட்டு முன்பு அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். கணவருடன் சேர்த்து வைக்கும் வரை போராட்டத்தை தொடர்வேன் என்றும் கூறியதால் தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
- கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் அதிக அளவில் காய்ச்சப்படுவதாக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு புகார்கள் வந்தன.
- இதையடுத்து ஆத்தூர் டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து மணிவிழுந்தான் பகுதியில் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் அதிக அளவில் காய்ச்சப்படுவதாக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு புகார்கள் வந்தன.
மேலும் அங்கு காயச்சப்படும் கள்லச்சாராயத்தை லாரி டியூப்புகள் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து தலைவாசல் நத்தக்கரை, மணிவிழுந்தான், ராமசேசபுரம், சார்வாய்புதூர், மணிவிழுந்தான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதாகவும் ரகசிய தகவல் வந்ததது.
இதையடுத்து ஆத்தூர் டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து மணிவிழுந்தான் பகுதியில் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மூன்று இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அங்கிருந்த போலீசாரை கண்டதும் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
அவர்களை போலீசார் துரத்தி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மணிவிழுந்தான் அருகே ராமசேசபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 35) சேகர்( 36) மோகன் (37) என்பதும்
அவர்கள் சாக்கு மூட்டை யில் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 300 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் 3 இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைதான 3 பேரையும் போலீசார் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.
- சேலம் டவுன், கிச்சிபாளையம், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, உள்பட பல இடங்களில் தாழ்வான இடங்களில் சாக்கடை நீருடன் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
- மழையைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சேலம் மாநகரில் 29.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சேலம்:
வங்கக்கடலில் உருவான மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு சேலத்தில் திடீரென மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி-மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சேலம் டவுன், கிச்சிபாளையம், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, அழகாபுரம், சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, தாதம்பட்டி உள்பட பல இடங்களில் தாழ்வான இடங்களில் சாக்கடை நீருடன் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல புறநகர் பகுதிகளான சங்ககிரி, தம்மம்பட்டி, பெத்தநாயக்கன் பாளையம் உட்பட பல பகுதிகளிலும் கன மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழை பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழையைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சேலம் மாநகரில் 29.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சங்ககிரி -19.2, தம்மம்பட்டி-8, கெங்கவல்லி-3, ஏற்காடு-1, காடையாம்பட்டி - 1 என மாவட்டம் முழுவதும் 70.30 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இன்று காலையில் மாவட்டம் முழு வதும் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.
- தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வைர விழா கூட்டம், சேலம் அஸ்தம்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட தலைவர் வள்ளி தேவி தலைமையில் நடந்தது.
- கூட்டத்தில் வருவாய் துறை அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம்:
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வைர விழா கூட்டம், சேலம் அஸ்தம்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட தலைவர் வள்ளி தேவி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் வருவாய் துறை அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகம், சேலம் வட்டாட்சியர் அலுவலக முதல் தளத்தில் சிறிய அறையில் இயங்கி வருகிறது. இதனால் வயது முதிர்ந்தவர்கள் மாற்றுத் திறனாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே சேலம் வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்திற்கு அருகில் உள்ள கட்டிடத்திற்கு அதனை மாற்ற வேண்டும்.
வருவாய்த்துறை அலுவலகங்களில் காலியாக உள்ள அலுவலக உதவி யாளர், இரவு காவலர் உட்பட காலி பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் குமரேசன், அர்த்தனாரி உள்பட பலர் பங்கேற்றனர்.
- கடந்த 5 மாதங்–களில் கார–ண–மில்–லா–ம–லும், தேவை–யில்–லா–மல் அபாய சங்–கி–லியை விதி–மு–றை–களை மீறி
- இழுத்த 23 பேர் மீது ரெயில்வே பாது–காப்பு படை–யி–னர் வழக்–குப்–ப–திவு செய்–து அவர்களை கைது செய்–து உள்–ள–னர்.
சேலம்:
ரெயில்–களில் பய–ணி–க–ளின் அவ–சர தேவைக்–காக பயன்–ப–டுத்த அபாய சங்–கிலி பொருத்–தப்–பட்–டு உள்–ளது. இந்த அபாய சங்–கி–லியை சிலர் தேவை–யில்–லா–மல் இழுத்து ரெயிலை நிறுத்தி விடு–கின்–ற–னர். இத–னால் ரெயில் நடு–வ–ழி–யில் நிறுத்–தப்–பட்டு பய–ணி–கள் குறிப்–பிட்ட நேரத்–திற்கு செல்ல முடி–யாத நிலை ஏற்–ப–டு–கிறது.
இது போன்ற சம்–ப–வங்–களை கட்–டுப்–ப–டுத்–தும் வகை–யில் ரெயில்வே பாது–காப்பு படை–யி–னர் ரெயில்–களில் கண்–கா–ணித்து வரு–கின்–ற–னர். மேலும் ரெயில்–களில் தேவை இல்–லா–மல் அபாய சங்–கி–லியை இழுப்–ப–வர்–கள் மீது வழக்–குப்–ப–திவு செய்து கைது செய்–யப்–பட்டு வரு–கின்–ற–னர்.
அதன்–படி சேலம் கோட்–டத்–திற்கு உட்–பட்ட பகு–தி–களில் கடந்த 5 மாதங்–களில் கார–ண–மில்–லா–ம–லும், தேவை–யில்–லா–மல் அபாய சங்–கி–லியை விதி–மு–றை–களை மீறி இழுத்த 23 பேர் மீது ரெயில்வே பாது–காப்பு படை–யி–னர் வழக்–குப்–ப–திவு செய்–து அவர்களை கைது செய்–து உள்–ள–னர்.
இது –கு–றித்து ரெயில்வே பாது–காப்பு படை போலீ–சார் கூறும்போது, ' கடந்த நிதி–யாண்–டில் மட்–டும் தேவை–யில்–லா–மல் ரெயி–லின் அபாய சங்–கி–லியை இழுத்து ரெயில்–களை நடு–வ–ழி–யில் 23 பேர் நிறுத்தி உள்–ள–னர். அவர்–கள் மீது வழக்–குப்–ப–திவு செய்து கைது செய்–துள்–ளோம். எனவே ரெயி–லில் தேவை–யில்–லா–மல் பய–ணி–கள் அபாய சங்–கி–லியை இழுக்–கா–மல் ரெயில்வே துறைக்கு ஒத்–து–ழைப்பு தர வேண்–டும்' என்–ற–னர்.
- தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து பல்வேறு பாட இணைச் செயல்பாடுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.
- அதன் ஒரு பகுதியாக தமிழ் மொழியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த தமிழ் கூடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
சேலம்:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து பல்வேறு பாட இணைச் செயல்பாடுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழ் மொழியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த தமிழ் கூடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதனிடையே தமிழ்நாடு முழுவதும் உள்ள 6,218 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றத்தை மேம்படுத்தி, ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு 3 தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதற்காக ஆண்டு ேதாறும் பள்ளி ஒன்றுக்கு ரூ.9 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை தெரிவித்தது.
தொடர்ந்து இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அதற்கான செலவின நிதியை மாவட்ட வாரியாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் 291 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்காக ரூ.26.19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறுகை யில், இந்த நிதியினை ெகாண்டு தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடத்த ஒவ்வொரு பள்ளியிலும் பணியாற்றும் முதுநிலை தமிழாசிரியர் ஒருவரை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் 3 தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடத்தப் பெறுவதை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
எக்காரணத்தை கொண்டும் அத்தொகை யினை பிற இனங்களுக்கு பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டமைக்கான செலவின விவரங்களையும், பயனீட்டு சான்றிதழையும், பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்ப வேண்டும், என்றனர்.
- வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் யோகா தின விழா நடைபெற்றது.
- விழாவிற்கு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கலைஞர்புகழ் தலைமை வகித்தார்.
வாழப்பாடி:
வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் யோகா தின விழா நடைபெற்றது. விழாவிற்கு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கலைஞர்புகழ் தலைமை வகித்தார்.
சித்த மருத்துவர் செந்தில்குமார், யோகா பயிற்றுநர் அருள்மணிகண்டன் ஆகியோர் மாணவர்களுக்கு எளிய முறை யோகா பயிற்சி அளித்து, யோகாவின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து வாழப்பாடி உதய விவேகா சமுதாய கல்லூரி மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளித்து, விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இதேபோல், வாழப்பாடி அருகே பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற யோகா தின விழாவில், சித்த மருத்துவர் லக்குமணன் தலைமையிலான குழுவினர் பொதுமக்களுக்கும், பணியாளர்களுக்கும் யோகா பயிற்சி அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட, மேல்நாடு, கீழ்நாடு ஊராட்சி சூலாங்குறிச்சி, கலக்காம்பாடி, தாழ்வள்ளம் கிராமங்களில், காசநோயாளிகளை கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
- முகாமை காசநோய் பிரிவு சேலம் மாவட்ட துணை இயக்குனர் கணபதி தொடங்கி வைத்தார்.
வாழப்பாடி
சேலம் மாவட்டம், கல்வராயன்மலை சூலாங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட, மேல்நாடு, கீழ்நாடு ஊராட்சி சூலாங்குறிச்சி, கலக்காம்பாடி, தாழ்வள்ளம் கிராமங்களில், காசநோயாளிகளை கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமை காசநோய் பிரிவு சேலம் மாவட்ட துணை இயக்குனர் கணபதி தொடங்கி வைத்தார்.
காசநோய் பிரிவு மருத்துவ குழுவினர், காசநோயின் அறிகுறிகள், பரவும் விதம், தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள், காசநோயாளிகளுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கமளித்து மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முகாமில், மருத்து அலுவலர்கள் ராஜா, காசநோய் சுகாதார மேற்பார்வையாளர் சின்னதுரை, சுகாதார செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர், நடமாடும் எக்ஸ்-ரே பரிசோதனை எந்திரத்தில் 298 நபர்களுக்கு எக்ஸ்-ரே எடுத்தும் 50 நபர்களுக்கு சளி மாதிரிகள் எடுத்தும் பரிசோதனை செய்தனர்.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கே எக்ஸ்-ரே எந்திரத்தை கொண்டு வந்து, பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தது மிகவும் உபயோகமாக அமைந்ததாக பயனாளிகள் தெரிவித்தனர்.
- விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த மாதம் (மே) 25-ந் தேதி வெளியிடப்பட்டது.
- இம்மாதம் 30-ந்தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சேலம்:
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் இருக்கும் 1 லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களுக்கு நடப்பாண்டு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 பேர் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த மாதம் (மே) 25-ந் தேதி வெளியிடப்பட்டது. 2 கட்ட கலந்தாய்வு முடிவில், 31 ஆயிரத்து 621 மாணவர்கள், 44 ஆயிரத்து 190 மாணவிகள் என மொத்தம் 75 ஆயிரத்து 811 பேர் இடங்களை தேர்வு செய்து இருக்கின்றனர். மொத்தம் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில், 75 ஆயிரத்து 811 இடங்கள் நிரம்பியுள்ளது. இந்த நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, மீதமுள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கை தொடர்கிறது. இம்மாதம் 30-ந்தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 3-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என உயர்கல்வி த்துறை அறிவித்துள்ளது.
சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தின் மேற்பார்வையில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 22 அரசு கல்லூரிகள், 4 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 91 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 117 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில் 22 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 77 சதவீத இடங்கள் நிரம்பியது. மீதமுள்ள 23 சதவீதம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
- பள்ளத்தாதனூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மனைவி செல்லம்மாள் நேற்று தனது வீட்டை பூட்டி விட்டு கூலி வேலைக்கு சென்று விட்டார்.
- 45 வயதுடைய பெண் ஒருவர் இவரது வீட்டுக்கு வந்தார். திடீரென வீட்டை திறந்து உள்ளே புகுந்த அவர் பீரோவில் செல்லம்மாள் வைத்திருந்த ரூ. 6 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிக் கொலுசை திருடினார். பின்னர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பள்ளத்தாதனூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மனைவி செல்லம்மாள் (வயது 40). நேற்று தனது வீட்டை பூட்டி விட்டு கூலி வேலைக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் சுமார் 45 வயதுடைய பெண் ஒருவர் இவரது வீட்டுக்கு வந்தார். திடீரென வீட்டை திறந்து உள்ளே புகுந்த அவர் பீரோவில் செல்லம்மாள் வைத்திருந்த ரூ. 6 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிக் கொலுசை திருடினார். பின்னர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், பட்டப்பகலில் வீடுபுகுந்து திருடிய பெண்ணை கையும் களமாக பிடித்தனர். பின்னர் இதுகுறித்து வாழப்பாடி போலீசாருக்கு தகவல் அளித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் சேலம் அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிங்காரவேல் மனைவி காந்திமதி (45) என்பதும், இவர் மீது ஏற்கனவே ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தில், 4 திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார், காந்திமதியை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் வீடு புகுந்து திருடியப் பெண்ணை, கையும் களமாக பிடித்து ஒப்படைத்த பொது மக்களுக்கு, போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
- சேலம் கருப்பூர் அருகே உள்ள பறவை காடு பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் மோட்டார் சைக்கிள், சாலையோரம் மோதியது.
- இதில் தூக்கி வீசப்பட்ட அவர், படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
சேலம்:
சேலம் கருப்பூர் அருகே உள்ள பறவை காடு பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகன் விஜய் (வயது 30).
இவர் நேற்றிரவு கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் இருந்து கருப்பூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது.
கந்தம்பட்டி மேம்பால பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள், சாலையோரம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் சூரமங்கலம் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






