மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி

சேலம் கருப்பூர் அருகே உள்ள பறவை காடு பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் மோட்டார் சைக்கிள், சாலையோரம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி
Published on

சேலம்:

சேலம் கருப்பூர் அருகே உள்ள பறவை காடு பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகன் விஜய் (வயது 30).

இவர் நேற்றிரவு கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் இருந்து கருப்பூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது.

கந்தம்பட்டி மேம்பால பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள், சாலையோரம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் சூரமங்கலம் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com