என் மலர்
சேலம்
- 18-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 வரை கணபதி ஹோமம், அபிஷேகம் நடைப்பெற்று ராஜகணபதிக்கு தங்க கவசம் சாத்துப்படி நடைப்பெற உள்ளது.
- இரவு 8 மணியளவில் தினமும் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி திருவீதி புறப்பாடு நடைப்பெறும்.
சேலம்:
சேலம் ராஜகணபதி கோவிலில் வருகிற 18-ந் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெற உள்ளது. 18-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 வரை கணபதி ஹோமம், அபிஷேகம் நடைப்பெற்று ராஜகணபதிக்கு தங்க கவசம் சாத்துப்படி நடைப்பெற உள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு 18-ந் தேதி முதல் 12 நாட்களுக்கு காலை, மாலையில் மூலமந்திர ஹோமம், லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 12 மணி வரை மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற உள்ளது.
இரவு 8 மணியளவில் தினமும் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி திருவீதி புறப்பாடு நடைப்பெறும். மேலும் மாலை வேலையில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற உள்ளது.
12-ம் நாள் காலை 7 மணி முதல் 10 மணி வரை மஞ்சள் நீராட்டு, வசந்த உற்சவமும், காலை 10 மணி முதல் 12.30 மணி வரை உற்சவ ஆஸ்தான பூஜைகள், 1008 லிட்டர் பால் அபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து புஷ்பாஞ்சலி மற்றும் அன்னதானம் நடைப்பெற உள்ளது.
எனவே அனைத்து பக்கதர்கள், பொதுமக்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்று இறைவன் அருள் பெற வேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் சோனா வள்ளியப்பா, அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- பூபதி மதுகுடித்துவிட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். இதனால் லாவண்யா கோபித்துக் கொண்டு கடந்த 3 மாதம் முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
- மனமுடைந்த பூபதி விஷம் குடித்து மயங்கினார்.
சேலம்:
சேலம் வீராணம் அருகே அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பூபதி (29). துணி வியாபாரியான இவருக்கு லாவண்யா (23) என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் பூபதி மதுகுடித்துவிட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். இதனால் லாவண்யா கோபித்துக் கொண்டு கடந்த 3 மாதம் முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து கடந்த 1-ந் தேதி பூபதி மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.அதற்கு லாவண்யா மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பூபதி விஷம் குடித்து மயங்கினார். அவரை மீட்ட உறவினர்கள் அம்மாபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பூபதி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து லாவண்யா அளித்த புகாரின் பேரில் வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலந்துரையாடல் கூட்டம் அன்ன தானப்பட்டி லைன்மேட்டில் உள்ள மாநகர காவலர் சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது.
- திரளான போலீசார், விழாக் குழுவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
அன்னதானப்பட்டி:
வருகிற 18- ந் தேதி திங்கட்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி விநாயகர் சதுர்த்தி விழாக் குழுவினர் மற்றும் போலீசார் இடையிலான கலந்துரையாடல் கூட்டம் அன்ன தானப்பட்டி லைன்மேட்டில் உள்ள மாநகர காவலர் சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது.
இதில் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் விழா அமைப்பாளர்கள் மற்றும் குழுவினர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை கமிஷனர் வழங்கினார். இதில் திரளான போலீசார், விழாக் குழுவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- 3 ரோடு பகுதியில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
- எதிர்பாராத விதமாக வினித்குமார் சென்ற மோட்டார் சைக்கிள் தேசிங் மீது மோதியது.
சேலம்:
சேலம் சின்னதிருப்பதி கம்பர் தெருவை சேர்ந்த பாபு மகன் வினித்குமார். இவர் 3 ரோடு பகுதியில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு 8.30 மணியளவில் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்களில் வீட்டிற்கு புறப்பட்டார்.
3 ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இவருக்கு முன்னால் அதே கம்பெனியில் பணிபுரியும் தேசிங் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக வினித்குமார் சென்ற மோட்டார் சைக்கிள் தேசிங் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்ததில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 3 ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி வினித்குமார் இறந்தார். தேசிங் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீஸ்காரர் அன்புராஜ் தற்கொலை செய்த விஷயத்தை அறிந்த அவருடன் பணியாற்றிய சக போலீசார் மற்றும் நண்பர்கள் கவலை அடைந்துள்ளனர்.
- பணிச்சுமை, மனஉளைச்சல் ஏதாவது இருந்ததா? என பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள ஊஞ்சக்காடு பகுதியை சேர்ந்தவர் அன்புராஜ் (வயது 22). இவர் சென்னை ஆவடியில் உள்ள ஆயுதப்படை சிறப்பு காவல் பிரிவில் 2-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவர் மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு மேச்சேரி அருகே உள்ள சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று அன்புராஜ் திடீரென அரளி விதையை அரைத்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறியபடி அன்புராஜை மீட்டு உடனடியாக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இதனால் அன்புராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் சோகமாக காணப்பட்டது. அன்புராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்ததும் மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்புராஜியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அன்புராஜ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக வீட்டில் உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார். இந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அம்மா, போகிறேன் மா, நான் இத்தனை நாள் வாழ்ந்ததே உனக்காகதான். எனக்கு என்ன ஆச்சுனு தெரியல.
எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. இத எப்படியும் யாராவது உங்கிட்ட படிச்சு காட்டுவாங்க. நான் யார் கிட்டையும் சொல்லாம போய்டலாம் என்று தான் நினைச்சேன். அப்புறம் எல்லாம் தப்பா பேச ஆரம்பிச்சுடுவாங்க.
என் மணமறிந்து யாருக்கும் கெட்டது செஞ்சதுல்ல, என் தலைக்குள்ள ஏதோ ஓடிட்டு இருக்கு, என்னால கண்ட்ரோல் பண்ண முடியல.
வெளியே எங்கேயும் போகமாட்டேன் மா. கூடவே தான் இருப்பேன். அதுக்காகத்தான் வீட்டுக்கு வந்தேன்.
'ஒருவன் நல்லவன் என்பதற்கு அர்த்தம் அவன் இறந்த பின் அவனுக்காக சிந்தும் கண்ணீர் துளிகளால் மட்டுமே கண்டறியப்படுகிறது'.
இவ்வாறு அவர் உருக்கமாக எழுதியிருந்தார்.
இதனால் அவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் பணிச்சுமை, மனஉளைச்சல் ஏதாவது இருந்ததா? என பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இது பற்றி அவர் பணியாற்றி வந்த சென்னை ஆவடியில் உள்ள சிறப்பு காவல் படை பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ்காரர் அன்புராஜ் தற்கொலை செய்த விஷயத்தை அறிந்த அவருடன் பணியாற்றிய சக போலீசார் மற்றும் நண்பர்கள் கவலை அடைந்துள்ளனர்.
- பலத்த ரத்த காயங்களுடன் வடிவேல் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
- வீடு முழுவதும் ரத்த கரை படிந்து இருந்ததாக கூறப்படுகிறது.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி கிராமம் செவந்தானூர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (45).
கல் உடைக்கும் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வடிவேலுவின் மனைவி சாலை விபத்தில் இறந்து விட்டார்.
அதன் பிறகு மகளுக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு வடிவேல் தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார்
கல் உடைக்கும் வேலைக்காக கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வரும் வடிவேல் மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் பலத்த ரத்த காயங்களுடன் வடிவேல் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அவசர அவசரமாக வடிவேலுவின் உடலை தகனம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதற்காக மின்சார எந்திரத்தை வரவழைத்து அருகிலுள்ள மயானத்திற்கு கொண்டு சென்று வடிவேலுவின் உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்து உள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து நேற்று இரவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா மற்றும் தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் உள்ளிட்ட போலீசார் வடிவேலு வீட்டில் சோதனை நடத்தினர்.
இதில் வீடு முழுவதும் ரத்த கரை படிந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வடிவேல் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
மேலும் இது தொடர்பாக வடிவேலுவின் மகன்கள் சுந்தர்ராஜன், சேட்டு மற்றும் உடலை தகனம் செய்த உறவினர்கள், உடலை எரிக்க உதவிய மின்சார எந்திர உரிமையாளர் உள்ளிட்ட 8 பேரை பிடித்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த கூலி தொழிலாளியின் உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
- மேட்டூர் அணையில் நீர்மட்டம் மேலும் குறைந்து இன்று 42.49 அடியானது.
சேலம்:
தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். ஆனால் நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தீவிரம் அடையவில்லை.
இதனால் கர்நாடக அணைகளில் இருந்து வழக்கமாக தமிழகத்திற்கு சுப்ரீம் கோா்ட்டு தீர்ப்பின்படி காவிரி ஆற்றில் திறந்து விடப்பட வேண்டிய தண்ணீரை கூட கர்நாடக அரசு திறந்து விடவில்லை.
பெயரளவில் அவ்வப்போது மழையளவை பொறுத்து அம்மாநில அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு வருகிறது.
இதனிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
நேற்று காலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 507 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையில் 2,707 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இருந்தாலும் அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 44.06 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலையில் 43.11 அடியாக சரிந்தது.
இன்று நீர்மட்டம் மேலும் குறைந்து 42.49 அடியானது. தற்போது அணையில் 13.40 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- கர்நாடக அணைகளில் இருந்து போதிய அளவு தண்ணீர் தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்து விடவில்லை.
- அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
சேலம்:
மேட்டூர் அணை தமிழகத்தின் பல மாவட்டங்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்து வருகிறது. மேட்டூர் அணையின் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 12 டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்களில் சம்பா, குறுவை, தாளடி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
அதுமட்டுமின்றி மேட்டூர் அணையில் இருந்து பல்வேறு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இங்கிருந்து வேலூர் மாவட்டம் வரை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இதைத்தவிர மேட்டூர் அணையின் உபரிநீர் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ராட்சத குழாய் பயன்படுத்தி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் பல லட்சம் மக்களுக்கு மேட்டூர் அணை கைகொடுத்து வருகிறது. இந்த அணையை நம்பியே அவர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். நடப்பாண்டு மேட்டூர் அணையில் நீர்மட்டம் 103 அடி தண்ணீர் இருந்ததால் காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் டெல்டாவில் உள்ள 12 மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது குறுவை சாகுபடி அறுவடை செய்யும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து போதிய அளவு தண்ணீர் தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்து விடவில்லை. இதனால் கடந்த மாதம் 29-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு (12-ந்தேதி வரை) தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட பிறகும் உரிய தண்ணீரை தரவில்லை.
இதனால் மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்த பிறகும் அதை கர்நாடக அரசு ஏற்க மறுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கூறி விட்டது.
இதனிடையே பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை கைகொடுக்கவில்லை. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடியோடு சரிந்து விட்டது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து 800 கன அடிக்கும் குறைவாக அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று முன்தினம் நீர்வரத்து 670 கன அடியாக இருந்த நிலையில் நேற்று 392 கன அடியாக சரிந்தது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 507 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து பாசனத்திற்காக 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 45.01 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 44.06 அடியாக சரிந்தது. இன்று நீர்மட்டம் மேலும் குறைந்து 43.11 அடியானது.
தற்போது அணையில் 13.74 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் 5 டி.எம்.சி.தண்ணீர் குடிநீர் மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும். நீர் திறப்பு தொடர்ந்து 6,500 கன அடி அளவில் நீடித்தால் இன்னும் 8 நாட்களுக்கு மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும் சூழல் உருவாகி உள்ளது.
மழை பெய்தால் மட்டுமே மேட்டூர் அணை நிரம்பும். மேட்டூர் அணை சரிவடைந்து வரும் நிலையில் விரைவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்படும் என தெரிகிறது. குறுவை பயிர்கள் அறுவடை செய்யும் தருணத்தில் போதிய அளவில் தண்ணீர் கிடைக்காததால் குறுவை பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையை நம்பி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
- என் மன் என் மக்கள் பாதயாத்திரை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.
- 20 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 99 பேருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சேலம்:
இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். சாமி தரிசனம் செய்து கோவிலில் நடந்து வரும் திருப்பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்வராக மு.க.ஸ்டா லின் பொறுப்பேற்றவுடன் திருப்பணிகள் நிலுவையில் உள்ள கோவில் பணிகளை விரைந்து முடித்து குடமுழுக்கு நடத்த உத்தரவிட்டார். அதன்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க.வினர் ஆட்சி மீது வேண்டும் என்றே குறை கூறுகிறார்கள். சனாதனத்தை எதிர்க்கவில்லை, சனாதன கோட்பாடுகளான உடன்கட்டை ஏறுதல், குலக்கல்வி திட்டம் உட்பட கோட்பாடுகளை எதிர்க்கிறோம்.
என் மன் என் மக்கள் பாதயாத்திரை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. தற்போது தமிழகத்தில் சமத்துவ ஆட்சி நடைபெற்று வருகிறது. கடமை உறுதியுடன் தற்போதைய ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது. பொழுதுபோக்குக்காக சிலர் எதையோ சொல்கிறார்கள். கோவில் இறைபணி தொடரும்.
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற காசி விசுவநாதர் கோயில் ஆயிரமாவது குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் உட்பட அனைவரும் பாராட்டியுள்ளனர். 20 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 99 பேருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டப்படி 38 பேர் அர்ச்சகராகி உள்ளனர். 1959-ம் ஆண்டுக்கு பிறகு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் தான் அதிக அளவில் தமிழகத்தில் திருப்பணி நடைபெற்று வருகிறது.
அனைத்து கோவில்களிலும் முறைகேடுகள் தடுக்கப்படும். மக்களாட்சி வந்தபின் இந்து கோவில்கள் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற மத கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர சட்டம் இல்லை. இறை நம்பிக்கை அவரவர் விருப்பம். சமத்துவம் அங்கம் வகிக்கும் ஆட்சி தி.மு.க. இதனால் இறை நம்பிக்கை உள்ளவர்களையும் வரவேற்கிறோம், இறை நம்பிக்கை இல்லாதவர்களையும் வரவேற்கிறோம்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணி கடந்து 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டுவரை 10 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க நேர்ச்சை செலுத்தும் வகையில் ரூ.4.5 லட்சம் செலவில் தங்க தேர் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனை கும்பாபிஷேக நாளிலேயே பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வியாபாரிகள் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.
- பிளாஸ்டிக் பைகளை மொத்தமாக விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காய்கறி, பழக்கடை, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் இன்று காலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் என மொத்தம் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மதியம் வரை சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் என்று கூறி அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இதற்கு வியாபாரிகள் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். அனுமதிக்கப்பட்ட அளவிலேயே பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக கூறினர். இத னால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து சோதனைநடத்தி பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை மொத்தமாக விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அதனை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்று குற்றம்சாட்டினர்.
- சேலம் பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், நாமக்கல் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.
- இந்த நிலையில் சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை இன்று உயர்ந்துள்ளது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி சென்றனர்.
சேலம்:
சேலம் பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், நாமக்கல் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.
இதனை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை இன்று உயர்ந்துள்ளது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி சென்றனர்.நேற்று 400 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ இன்று 600 ரூபாய்க்கு விற்பனையானது. முல்லைப்பூ நேற்று 300 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று 400 ரூபாயாக உயர்ந்தது.
ஜாதிமல்லிகை கிலோ-260, கலர் காட்டன்-240, அரளி-50, சம்பங்கி100 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்த பூக்கள் விலை குறித்து வியாபாரிகள் கூறுகையில் இனிவரும் நாட்களில் முகூர்த்த நாட்கள் இருப்பதால் தற்போது விலை உயர்ந்துள்ளதாகவும் இந்த விலை உயர்வு மேலும் சில நாட்கள் இருக்கும் என்று தெரிவித்தனர்.
- இன்று வியாழக்கிழமை ஆவணி மாத அமாவாசை ஆகும். இதனையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது.
- முன்னோர்கள் மற்றும் சாமிக்கு பூஜைகள் செய்து படையலிட்டு சமைப்ப தற்காகவும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி சென்றனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும்
மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டை யாம்பட்டி ஆகிய 11 இடங்க ளில் உழவர் சந்தைகள் உள்ளன.
அமாவாசை
இன்று வியாழக்கிழமை ஆவணி மாத அமாவாசை ஆகும். இதனையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், வீடுகளில் முன்னோர்கள் மற்றும் சாமிக்கு பூஜைகள் செய்து படையலிட்டு சமைப்ப தற்காகவும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி சென்றனர்.
பழங்கள், தேங்காய், வாழை இலை, கீரை வகை கள், பூசணிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் விற்பனை ஆனது. இதேபோல் பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.
221.916 மெட்ரிக் டன் காய்கறிகள்
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் இன்று 920 விவசாயிகள் 619 வகையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். காய்கறிகள், பழங்கள், பூக்களின் மொத்த வரத்து 221.916 மெட்ரிக் டன் ஆகும். அவற்றை 53,565
நுகர்வோர் வாங்கிச் சென்ற னர். இதன் மூலம் இன்று ஒரே நாளில் 68 லட்சத்து 46 ஆயிரத்து 96 ரூபாய்க்கு காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






