என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்ககிரி டி.எஸ்.பி அலுவலகத்தில் சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மனமகிழ் மன்ற மாணவர்களுக்கு பள்ளி புத்தகப்பை வழங்கினார். அருகில் டி.எஸ்.பி. ராஜா உள்ளார்.
சங்ககிரி டி.எஸ்.பி அலுவலகத்தில் சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி ஆய்வு
- சங்ககிரி கோட்டத்தில் நடந்த கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான பதிவேடுகளை பார்வையிட்டு தணிக்கை செய்தார்.
- மேலும், நீண்ட கால வழக்குகளை விரைந்து முடிக்கவும், பழைய குற்றவாளிகளை உடனடியாக பிடித்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்றார்.
சங்ககிரி:
சங்ககிரி டி.எஸ்.பி. அலுவலகத்தில் சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது சங்ககிரி கோட்டத்தில் நடந்த கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான பதிவேடுகளை பார்வையிட்டு தணிக்கை செய்தார். மேலும், நீண்ட கால வழக்குகளை விரைந்து முடிக்கவும், பழைய குற்றவாளிகளை உடனடியாக பிடித்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்றார்.
மேலும் திருட்டு வழக்கு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பண்ணை வீடுகளில் தனியாக வசிப்பவர்கள் மற்றும் வயது முதிர்ந்து தனியாக வசிப்பவர்களின் முகவரிகளை சேகரித்து இரவு நேரங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, சிறுவர் சிறுமியர் மனமகிழ் மன்றத்தில் நடைபெற்ற மாணவ, மாணவியர்கள் தனித்திறமையை பார்வையிட்டு, புத்தகப்பை, பேனா, பென்சில், டிபன்பாக்ஸ் வழங்கினார். பின்பு அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார். ஆய்வின்போது டி.எஸ்.பி ராஜா, இன்ஸ்பெக்டர்கள் தேவி(சங்ககிரி), சந்திரலேகா (எடப்பாடி), வளர்மதி(மகளிர் போலீஸ்), ஹேமலதா (போக்குவரத்து போலீஸ்), குமரவேல்பாண்டியன் (கொங்கணாபுரம்), வெங்கடேஸ்பிரபு (மகுடஞ்சாவடி) மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.






