என் மலர்
நீங்கள் தேடியது "Assistant Director Field Survey"
- சேலம் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் நவநீதிகிருஷ்ணன் மகுடஞ்சாவடி வட்டாரத்தில் விதைச்சான்று பணிகள் தொடர்பான களஆய்வு மேற்கொண்டார்.
- அப்போது விதைச்சான்று பணிக்காக பதிவு செய்யப்பட்டி ருந்த நிலக்கடலை டி.எம்.வி-14 ரகத்தை ஆய்வு செய்தார்.
சேலம்:
சேலம் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் நவநீதிகிருஷ்ணன் மகுடஞ்சாவடி வட்டாரத்தில் விதைச்சான்று பணிகள் தொடர்பான களஆய்வு மேற்கொண்டார்.
அப்போது விதைச்சான்று பணிக்காக பதிவு செய்யப்பட்டி ருந்த நிலக்கடலை டி.எம்.வி-14 ரகத்தை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து உற்பத்தியாளர் மற்றும் சாகுபடியாளர்களுக்கு விதைப் பண்ணை வயல்களை கலவன்கள் இன்றி பராமரித்தலின் அவசியத்தையும் அதன் பொருட்டு புறத்தோற்றத்திலும், குணாதிசயங்களிலும் மாறுபட்டுள்ள பிற ரக மற்றும் இதர செடிகளை நன்கு அடையாளம் கண்டு கலவன்களை நீக்கவும் நோய் தாக்கிய செடிகளை அப்புறப்ப டுத்தவும் அறிவுறுத்தினார்.
பின்னர் தனியார் விதை சுத்தி நிலையம் உரிமம் வழங்க ஆய்வு மேற்கொண்டு விதைகளை சுத்தம் செய்ய, தரம் பிரிக்க, விதை நேர்த்தி செய்ய, எடையிட, விதைப்பைகளை தைக்க, விதையின் ஈரப்பதத்தை அளக்க உள்ள எந்திரங்கள் சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மகுடஞ்சாவடி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய வேளாண் கிடங்கில், விதை சுத்தி பணிகளை ஆய்வு செய்து விதை நேர்த்தி செய்யப்பட்டுள்ளதா? உரிய சான்று அட்டை பொருத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது சங்க கிரி விதைச்சான்று அலுவ லர் செந்தில்குமார், மகுடஞ்சாவடி உதவி விதை அலுவலர் மாணி க்கம் ஆகியோர் உடனிருந்தார்.






