என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வாழப்பாடி வட்டார விளையாட்டுப் போட்டிஅரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்
    X

    வட்டார அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள்.

    வாழப்பாடி வட்டார விளையாட்டுப் போட்டிஅரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வட்டார அளவிலான 14 வயதோருக்கான வட்டெறிதல் போட்டியில் துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் மு. சந்தோஷ்குமார் முதலிடம் பெற்றார்.
    • இந்த மாணவர்கள் அனைவரும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றனர்.

    வாழப்பாடி:

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் வாழப்பாடியில் நடைபெற்ற வட்டார அளவிலான 14 வயதோருக்கான வட்டெறிதல் போட்டியில் துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் மு. சந்தோஷ்குமார் முதலிடம் பெற்றார்.

    எட்டாம் வகுப்பு மாணவர் இ. தோர்னேஷ் மூன்றாமிடம் பிடித்தார். நீளம் தாண்டுதலில் ஒன்பதாம் வகுப்பு செ. சூரியா மூன்றாமிடமும், 14-வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் ஒன்பதாம் வகுப்பு மு.தீபிகா முதலிடமும், வட்டெறிதல் போட்டியில் இரண்டாமிடமும் பிடித்தார். இந்த மாணவர்கள் அனைவரும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றனர்.

    வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்பயிற்சி ஆசிரியர் பெ.மணிகண்டனையும், பள்ளி தலைமையாசிரியர் கு. வெங்கடாசலம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

    Next Story
    ×