search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Increase in sales in meat and fish shops"

    • நாளை (17-ந் தேதி) புரட்டாசி மாதம் பிறப்பதால் பொதுமக்கள் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.
    • இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) புரட்டாசி மாதம் பிறப்பதால் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று வழக்கத்தை விட ெபாதுமக்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்தனர்.

    சேலம்:

    நாளை (17-ந் தேதி) புரட்டாசி மாதம் பிறப்பதால் பொதுமக்கள் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். இதனால் கோவில்களில் பொதுமக்கள் கூட்டம் களைகட்டும். மேலும் பலர் விரதம் மேற்கொள்ள தொடங்குவார்கள்.

    இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) புரட்டாசி மாதம் பிறப்பதால் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று வழக்கத்தை விட ெபாதுமக்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்தனர்.

    குறிப்பாக சேலம் மாநகரில் சூரமங்கலம், செவ்வாய்ப்பேட்டை, வ.உ.சி.மார்க்கெட் பின்புறம் ஆகிய இடங்களில் மீன் மார்க்ெகட் இயங்கி வருகிறது. இதுதவிர மாநகரின் பல்வேறு இடங்களிலும் ஆங்காங்கே மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல் குகை, சூரமங்கலம், 4 ரோடு, பள்ளப்பட்டி ரோடு, அம்மாப்பேட்டை, தாத காப்பட்டி, திருமணிமுத்தாறு உள்ளிட்ட இடங்களில் இறைச்சிக் கடைகள் அதிகமாக செயல்படுகின்றன.

    இந்த இடங்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன், இறைச்சி விற்பனை சூடுபிடிக்கும்.

    நாளை புரட்டாசி மாதம் பிறப்பதால் இன்று வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் இறைச்சி, மீன்களை வாங்க குவிந்தனர். அவர்கள் தங்கள் தேவைக்கேற்ப மீன்கள், இறைச்சி ஆகியவற்றை வாங்கிச் சென்றனர்.

    குறிப்பாக சேலத்துக்கு ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னையில் இருந்தும் கேரளா மாநிலத்தில் இருந்தும் கடல் மீன்களும், மேட்டூர் அணை மீன்களும், குளம், குட்டை, ஏரிகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு மீன்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இன்று மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இன்று வழக்கத்தை விட பொதுமக்கள் அதிகமாக குவிந்ததால் மீன்கள் விலை சற்று அதிகமாக காணப்பட்டது.

    அதேபோல் மேச்சேரி, ஓமலூர், போச்சம்பள்ளி, எடப்பாடி, வாழப்பாடி, மேட்டூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல் பகுதிகளில் இருந்து ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இவற்றின் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு மீன், இறைச்சி உள்ளிட்டவைகளை வாங்கிச் சென்றனர். இதனால் இன்று வியாபாரம் களை கட்டியது. வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×