என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • பணத்தையும் அள்ளி சென்றனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த குடிமல்லூர் கிராம சாலையில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

    மதுபான கடையில் பணிபுரியும் விற்பனை யாளர் அய்யப்பன் என்பவர் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    மேலும் கடையில் இருந்த கல்லாப்பெட்டி மற்றும் விலை உயர்ந்த மது பாட்டில்கள், வெளியே பொறுத்திருந்த சிசிடிவி கேமரா ஆகியவற்றை திருடி சென்றனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து மதுபான கடை மேலாளர் நரசிம்மனிடம் தகவல் தெரிவித்தனர். இது குறித்து வாலாஜா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெற்றோர் நினைவு வந்ததால் யாரிடமும் சொல்லாமல் வெளியேறினார்
    • 6-ம் வகுப்பு படித்து வந்தார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் பொன்னை சாலையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சுற்றிய சிறுவனை பார்த்த போலீசார் அந்த சிறுவனிடம் எங்கு செல்ல வேண்டும் என விசாரித்துள்ளனர்.

    போலீசார் விசாரித்ததில் சிறுவன் வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் ஹேமநாத் (வயது 11) என்பதும், ராணிப்பேட்டை காரை பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கி 6-ம் வகுப்பு படித்து வருவதும் தெரிய வந்தது.

    வீட்டில் சரியாக படிக்கவில்லை என்பதால் கடந்த 10-ந் தேதி சிறுவனின் பெற்றோர் சிறுவனை ராணிப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் விடுதியில் சேர்ந்துள்ளனர்.

    இந்நிலையில் பெற்றோர் நினைவு வந்ததால் யாரிடமும் சொல்லாமல் விடுதியை விட்டு வெளியேறி வந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சிறுவனை மீட்டு பள்ளியில் ஒப்படைத்தனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
    • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியம் வெளிதாங்கிபுரம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், நெமிலி தாசில்தார் பாலசந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இம்முகாமில் பல்வேறு துறை சார்பாக அமைக்க ப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார். தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் மொத்தமாக 158 பயனாளிகளுக்கு ரூ.2.66 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். இதில் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, துணைத் தலைவர் தீனதயாளன்,

    மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள், வெளிதாங்கி புரம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி, திமுக ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், ரவீந்திரன், நெமிலி வருவாய் ஆய்வாளர் சுரேஷ், அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்
    • 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், முதல் அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்றிட வேண்டும், காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும், ஓய்வு பெறும் வயதை 60 -ல் இருந்து 62-ஆக உயர்த்திட வேண்டும், என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மலர் முன்னிலை வகித்தார்.

    ஓய்வூதிய சங்க மாவட்ட செயலாளர் ஜெகதீசன் வாழ்த்துரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் ரவி கலந்து கொண்டு பேசினார்.

    ஆர்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் பிரவினா, ஒன்றிய செயலாளர் ராஜசேகர் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தமிழ்செல்வி நன்றி கூறினார்.

    • மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில் பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த நீலகண்டராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் தினேஷ்குமார்(22) கார்பெண்டர். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணமாகி இவரது மனைவி கர்ப்பமாக உள்ளனர்.

    இந்நிலையில் தினேஷ்குமார் நேற்று மாலை வேலை முடிந்து ராணிப்பேட்டையிலிருந்து, நீலகண்ட ராயன்பேட்டை நோக்கி பைக்கில் சென்றார். மேல்வேலம் அருகே சென்ற போது எதிரே நீலகண்டராயன்பே ட்டையை சேர்ந்த அன்புசெல்வம் (32) ஓட்டிவந்த பைக் தினேஷ்குமார் பைக் மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அன்புசெல்வம் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று தினேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீரில் மூழ்கி இறந்தானா? அல்லது கொலை செய்தார்களா?
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட் டம் நெமிலியை அடுத்த கீழ் வெண்பாக்கம் கிராமத்தில் புதிய காலனி குறுக்கு தெருவில் வசித்துவருபவர் காளிதாசன் கூலி தொழிலாளி. இவரது மனைவி பபிதா. இவர்களுக்கு அவினாஷ் (வயது 4) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    அவினாஷ் பனப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்துவந்தான். நேற்று மதியம் சிறுவன் வீட்டில் உள்ளவர்களிடம், நண்பர்களுடன் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றான். பின்னர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். சிறுவன் கிடைக்காததால் அரக்கோணம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் அப்பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் தேடினர்.

    பின்னர் வயல்வெளியில் நெற்பயிர்க ளுக்கு நடுவில் நிர்வாண நிலையில் சிறுவன் பிணமாக கிடந்தது தெரிந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் நெமிலி போலீசார் விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் நெமிலி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சிறுவன் நீரில் மூழ்கி இறந்தானா? அல்லது யாராவது கொலை செய்தார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போக்சோவில் வழக்கு பதிவு
    • பலமுறை வெளி இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்நாதன்(40) திருமணமானவர். இவர் வாலாஜாவில் உள்ள தனியார் டியூசன் சென்டரில் வேதியியல் பாட ஆசிரியராக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் செந்தில்நாதனுக்கு டியூசன் சென்டருக்கு படிக்க வந்த 17வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் செந்தில்நாதன் தனது பிறந்த நாள் அன்று மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி வலுக்கட்டாயமாக மாணவியை பலாத்காரம் செய்தார்.

    மேலும் இது குறித்து வெளியே கூறினால் உன்னை ஒழித்துவிடுவேன் என மிரட்டியதோடு பலமுறை வெளி இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

    மாணவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்துள்ளனர். விசாரித்த போது மாணவி பள்ளிக்கு சரிவர வருவதில்லை அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து பெற்றோர் மாணவியிடம் விசாரித்த போது தனக்கு நடந்த கொடுமையை கூறினார்.

    இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரின் இன்ஸ்பெக்டர் ஷாகின் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள டியூசன் மாஸ்டர் செந்தில்நாதனை தேடி வருகின்றனர்.

    • அரக்கோணம் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • ஏற்கனவே கடை வைத்திருந்த வியாபாரிகள் அனுமதிக்கப்படுவார்கள்

    அரக்கோணம்:

    அரக்கோணம் பழைய காந்தி மார்க்கெட் மிகப் பழமையான கட்டிடமாக இருந்ததால் அதை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக அரக்கோணம் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டது.

    இதன் அடிப்படையில் அந்த மார்க்கெட் அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதே வேளையில் மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் வியாபாரி களுக்கு தற்காலிக மார்க்கெட் அமைக்கும் பணி தீவிரம் அடைந்து ள்ளது.

    அரக்கோணம் தனியார் தியேட்டர் அருகில் உள்ள ஏரியின் பக்கத்தில் தற்காலிக கூரை அமைத்து அதற்குள் மார்க்கெட் நடத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.

    அதன் அடிப்படையில் தற்போது தற்காலிக மார்க்கெட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மார்க்கெட்டில் ஏற்கனவே கடை வைத்திருந்த வியாபாரிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் பொதுமக்கள் வந்து பொருட்களை வாங்கி செல்வதற்கு ஏதுவாக வசதிகள் செய்ய ப்பட்டு ள்ள தாகவும் அரக்கோணம் நகராட்சி தலைவர் லட்சுமி தெரிவித்து ள்ளார்.

    • குடும்பத்தினர் வழிபாடு
    • கோவில் குருக்களை வரவழைத்து சிறப்பு பூஜை செய்தனர்

    ராணிப்பேட்டை:

    இமயமலை போன்ற குளிர்ச்சியான மலை பகுதிகளில் மட்டும வருடத்திற்கு ஒரு முறை பூத்து குலுங்குவது பிரம்ம கமலம் பூ படைக்கும் கடவுள் பிரம்மானக்கு உகந்த பூவாக கருதப்படுவதால் பிரம்ம கமலம் என்று அழைக்கப்படுகிறது.

    பிரம்ம கமலம் பூ குளிர்காலத்தில் மட்டுமே நள்ளிரவில் பூத்து அதிகாலைக்குள் உதிர்ந்து போகும். அதிக நறுமணத்துடன் ஒரே செடியில் 10-க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கும்.

    அந்த பூ மலரும் போது வேண்டினால் அது நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த பிரம்ம கமலம் பூ தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே காணப்படும் அரிய வகை பூ என கூறப்படுகிறது.

    இந்நிலையில் வாலாஜாவில், ஆற்காடு தெத்து தெரு பகுதியில் வசித்து வரும் முனிரத்தினம், கிருஷ்ணவேணி தம்பதிகள் வேலூரில் தோட்டக்கலையிலிருந்து நான்கு வருடங்களுக்கு முன் இந்த பிரம்ம கமல பூ செடியை வாங்கி வந்து வீட்டில் பூத்தொட்டியில் வளர்த்து வந்தனர். நேற்று இரவு இரண்டு பூ தொட்டியகளில் திடீரென 6-க்கும் மேற்பட்ட பிரம்ம கமலம் பூக்கள் பூத்துள்ளன.

    பூ பூத்ததை கண்ட அவரது குடும்பத்தினர் ஆச்சரியத்துடன் பார்த்து கோவில் குருக்களை வரவழைத்து பிரம்ம கமல பூக்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

    தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் கூட்டமாக வந்து பூவை வணங்கி சென்றனர்.

    சிவனடியார்களும் தேவாரம், சிவபுராணம், திருவாசகம் என சிவனின் பாடல்களை பாடியவாறு பூவிற்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாரதனை காண்பித்து வழிபட்டனர்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரோகித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் மாரடைப்பில் இறந்தாரா அல்லது கோழிக்கறி சாப்பிட்டதால் இறந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் விண்டர்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் ரோகித். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் கோழி கறி சமைத்தனர். இதனை ரோகித் சாப்பிட்டார். பின்னர் ஜூஸ் அருந்தி விட்டு இரவு தூங்கச் சென்றார். காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல ரோகித்தை எழுப்பினர். படுக்கையை விட்டு எழுந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    இதனைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரோகித் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரோகித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் மாரடைப்பில் இறந்தாரா அல்லது கோழிக்கறி சாப்பிட்டதால் இறந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயணிகள் சங்கம் குற்றச்சாட்டு
    • மெத்தனப் போக்கு தொடர்ந்தால் போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கை

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தலைவர் நைனா மாசிலாமணி, செயலார் குணசீலன், பொருளாளர் தியாகராஜன், வெங்கட்ரா மன், எஸ்வந்த் ராவ், ஏகாம்பரம், சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் ரெயில் பணிகளுக்கு தேவைப்படும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து கலந்து ஆலோசனை செய்யப்பட்டது.

    இது குறித்து சங்கத் தலைவர் நைனா மாசிலாமணி கூறியதாவது:-

    அரக்கோணம் ரெயில் நிலையம் அதிக வருவாய் ஈட்டி தருகிறது. தினமும் அரக்கோணத்தில் இருந்து 7ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணிகள் பயணிக்கி ன்றனர்.

    இங்கு கடந்த 30 ஆண்டுகளாக எந்த ஒரு பணியும் மேற்கொள்ளா ததால் பயணிகள் தொடர்ந்து அவதிக்குள்ளா கின்றனர். நகரும் படிக்கட்டுகள் செயலற்று கிடைக்கிறது. ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியும் ஆமை வேகத்தில் நடக்கிறது.

    குழப்பமான முறையில் உள்ள வழித்தடத்தால், எந்த நடைமேடையில் எந்த ரெயில்கள் வருகிறது என தெரியாமல் பயணிகள் குழம்பி புலம்புகின்றனர்.

    அரக்கோணம் ரெயில் நிலையத்தை நவீன வசதிகளுடன் புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டதாக தென்னக ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் கூறினார்.

    ஆனால் இதுவரை அதற்கான எந்த ஒரு பணியும் தொடங்க ப்படவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகும் பணிகள் தொடங்காமல் ரெயில்வே நிர்வாகம் ஏமாற்றுகிறது.

    இது போன்ற மெத்தனப் போக்கு தொடர்ந்தால் ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராணிப்பேட்டை அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏக்கள் சம்பத், சீனிவாசன், மாவட்ட பொருளாளர் சாபுதீன் உள்பட நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், சட்டமன்ற துணை கொறடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி பேசினார்.

    கூட்டத்தில் வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் முன்னிட்டு 19 பேர் கொண்ட பூத் கமிட்டியும் வாக்குச்சா வடிகள் தோறும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் குழுக்களை வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதிக்குள் அமைப்பது.

    வருகிற ஆகஸ்ட் 20-ந் தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வது, வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் குறிப்பாக அரக்கோணம் நாடாளு மன்ற தொகுதியிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது என்பது உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அ.தி.மு.கவின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×