அரக்கோணம் அருகே கோழிக்கறி சாப்பிட்ட மாணவன் மரணம்

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரோகித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் மாரடைப்பில் இறந்தாரா அல்லது கோழிக்கறி சாப்பிட்டதால் இறந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம் அருகே கோழிக்கறி சாப்பிட்ட மாணவன் மரணம்
Published on

அரக்கோணம்:

அரக்கோணம் விண்டர்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் ரோகித். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் கோழி கறி சமைத்தனர். இதனை ரோகித் சாப்பிட்டார். பின்னர் ஜூஸ் அருந்தி விட்டு இரவு தூங்கச் சென்றார். காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல ரோகித்தை எழுப்பினர். படுக்கையை விட்டு எழுந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரோகித் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரோகித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் மாரடைப்பில் இறந்தாரா அல்லது கோழிக்கறி சாப்பிட்டதால் இறந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com