என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடுதியிலிருந்து தப்பிய பள்ளி மாணவன் மீட்பு
    X

    விடுதியிலிருந்து தப்பிய பள்ளி மாணவன் மீட்பு

    • பெற்றோர் நினைவு வந்ததால் யாரிடமும் சொல்லாமல் வெளியேறினார்
    • 6-ம் வகுப்பு படித்து வந்தார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் பொன்னை சாலையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சுற்றிய சிறுவனை பார்த்த போலீசார் அந்த சிறுவனிடம் எங்கு செல்ல வேண்டும் என விசாரித்துள்ளனர்.

    போலீசார் விசாரித்ததில் சிறுவன் வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் ஹேமநாத் (வயது 11) என்பதும், ராணிப்பேட்டை காரை பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கி 6-ம் வகுப்பு படித்து வருவதும் தெரிய வந்தது.

    வீட்டில் சரியாக படிக்கவில்லை என்பதால் கடந்த 10-ந் தேதி சிறுவனின் பெற்றோர் சிறுவனை ராணிப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் விடுதியில் சேர்ந்துள்ளனர்.

    இந்நிலையில் பெற்றோர் நினைவு வந்ததால் யாரிடமும் சொல்லாமல் விடுதியை விட்டு வெளியேறி வந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சிறுவனை மீட்டு பள்ளியில் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×