என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The police were on patrol."

    • கத்தி, அரிவாள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலோமன் ராஜா தலைமையிலான போலீசார் நேற்று அரக்கோணம் திருவள்ளூர் ரோடு, சில்வர் பேட்டை, எக்கு நகர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சதி திட்டம்

    அப்போது எக்கு நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 4 பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் போலீசார் வருவதை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இதை பார்த்த போலீசார் அவர்களை விரட்டிச்சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    4 பேர் கைது

    விசாரணையில் அவர்கள் 4 பேரும் அரக்கோணம் பகுதியை சேர்ந்த ரியாஸ் அஹமது, மணிகண்டன், பூவரசன் மற்றும் ஆகாஷ் என்பதும், கொள்ளைடிப்பதற்காக திட்டம் தீட் டியதும் தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவுசெய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொள்ளை சம்பவத்திற்காக வைத்திருந்த கத்தி, அரிவாளை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • பெற்றோர் நினைவு வந்ததால் யாரிடமும் சொல்லாமல் வெளியேறினார்
    • 6-ம் வகுப்பு படித்து வந்தார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் பொன்னை சாலையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சுற்றிய சிறுவனை பார்த்த போலீசார் அந்த சிறுவனிடம் எங்கு செல்ல வேண்டும் என விசாரித்துள்ளனர்.

    போலீசார் விசாரித்ததில் சிறுவன் வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் ஹேமநாத் (வயது 11) என்பதும், ராணிப்பேட்டை காரை பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கி 6-ம் வகுப்பு படித்து வருவதும் தெரிய வந்தது.

    வீட்டில் சரியாக படிக்கவில்லை என்பதால் கடந்த 10-ந் தேதி சிறுவனின் பெற்றோர் சிறுவனை ராணிப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் விடுதியில் சேர்ந்துள்ளனர்.

    இந்நிலையில் பெற்றோர் நினைவு வந்ததால் யாரிடமும் சொல்லாமல் விடுதியை விட்டு வெளியேறி வந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சிறுவனை மீட்டு பள்ளியில் ஒப்படைத்தனர்.

    ×