என் மலர்
ராணிப்பேட்டை
- கலெக்டர் அடிக்கல் நாட்டினார்
- நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த இச்சிப்புத்தூர் ஊராட்சியில் தனியார் நிறுவனம் சார்பில் சமூக பங்களிப்பாக ரூ.2 கோடி மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறை கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு எம்.ஆர்.எப்.நிறுவன பொது மேலாளர் ஜான் டேனியல், துணைப் பொது மேலாளர் எல்வின் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஊராட்சி மன்ற தலைவர் பத்மநாபன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் எம்.ஆர்.எப். மக்கள் தொடர்பு அலுவலர் கஜேந்திரன், ஒன்றியக் குழு தலைவர் நிர்மலா சவுந்தர், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆஷா பாக்யராஜ், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கப்பள்ளி) பிரேமலதா, பள்ளி தலைமை ஆசிரியை கண்ணகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- 7 பவுன் நகைகளை மீட்டனர்
- தனிப்படை அமைத்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையை அடுத்த சீக்கராஜபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் மகேஸ்வ ரன் (வயது 38). பெல் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் இவர் சென்னையில் உள்ள தங்கையின் வீட்டிற்கு குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்றார்.
திரும்பி வந்த போது, வீட்டின் பின்பக்க கதவு மர்மநபர்க ளால் உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 8 பவுன் கொள்ளைய டிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்த னர். ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா (பொறுப்பு) தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளி களை போலீசார் தேடி வந்தனர்.
விசாரணையில் பெல் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சங்கீத்குமார் (28) என்பவர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்ததோடு, அவரிடமிருந்து ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 7 பவுன் நகைகளை மீட்டனர். மேலும் திருட்டில் தொடர்பு டைய தாமஸ் ஆல்வா எடிசன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டதால் கலைந்து சென்றனர்
காவேரிப்பாக்கம்:
பனப்பாக்கம் அருகே தென்மாம்பாக்கம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவன் (வயது 40), விவசாய கூலி தொழிலாளி.
இவர் நேற்று அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வைக்கோல் எடுக்கும்போது அவரை பாம்பு கடித்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை பனப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென் றனர். அப்போது சுகாதார நிலையத்தில் பாம்புக்கடிக்கு சிகிச்சை அளிக்க முடியாது. நீங்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவம
னைக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. பின்பு மாதவனை காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து பனப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புக்கடிக்கு சிகிச்சை அளிக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், தென்மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஆரம்ப சுகாதார நிலைய வாயிலில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து கோஷங் களை எழுப்பினர்.
இதையறிந்த சுகாதாரதுறையினரும், நெமிலி போலீசாரும் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன் பாடு ஏற்பட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததால் அசம் பாவிதம் தவிர்ப்பு
- போக்குவரத்து பாதிப்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் நேற்று மாலை மாருதி காரில் ராணிப்பேட்டையில் தனியார் மருத்துவமனை அருகே உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தார் .
.அப்போது திடீரென காரின் முன்பகுதியிலிருந்து புகை கிளம்பி தீ பிடித்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் காரை மேம்பாலத்திலேயே நிறுத்தி விட்டு காரிலிருந்து இறங்கி
ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் காரில் தண்ணீர் பாய்ச்சி அடித்து தீயைஅணைத்தனர்.இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- மர்ம கும்பல் கைவரிசை
- அந்த பகுதியை சேர்ந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள கொண்டகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட குமணந்தாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆசிரியர்கள் வழக்கம்போல் நேற்று மாலை இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை பூட்டிவிட்டு சென்றனர். இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள், பள்ளியின் இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் பள்ளியின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் மற்றும் புத்தகங்களை மர்ம நபர்கள் எடுத்து தீவைத்து எரித்தது தெரியவந்தது.
மேலும் மர்ம நபர்கள் மின் அளவீ்டு பெட்டி உள்ளிட்ட பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து போலீசார் அதே பகுதியை சேர்ந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தண்ணீர் வீணாவதால் ஆரணி பகுதியில் சப்ளை பாதிப்பு
- பொதுமக்கள் கடும் அவதி
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பாலாற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அதிக அளவு குடிநீர் உறிஞ்சம் கிணறுகள் கட்டப்பட்டுள்ளது.
செய்யாறு சாலையில் உள்ள பாலாற்றில் ஆரணி நகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், குடிநீர் உறை கிணறு 2016-2017-ம் ஆண்டு கட்டப்பட்டது.
இந்த கிணற்றில் இருந்து தினமும் ஆரணி நகராட்சி மற்றும் கிராம பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இந்த உறை கிணற்றிலிருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படும்
குழாயில் மீண்டும் 2-வது முறையாக உடைப்பு ஏற்பட்டுள்ளது. உடைந்த குழாய் வழியாக தினமும் அதிக அளவு தண்ணீர் வெளியேறி வீணாகுகிறது.
இதனால் ஆரணி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த 26 ஆம் தேதி குறிஞ்சிக் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக்கியது. இதனால் அதனை சரி செய்தனர். இதேபோல் மீண்டும் உறிஞ்சி குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.பொதுமக்களின் நலன் தகுதி உடைந்த குழாயை மீண்டும் இது போல் நடைபெறாமல் இருக்க முறையாக சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உடல் முழுவதும் பாய்ந்ததில், சிறுவன் அலறி துடித்தான்
- தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்
ராணிப்பேட்டை:
ராணிப்பே ட்டை அடுத்த தண்டலம் கிராமம், ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் துளசி. இவரது மகன் மணிகண்டன் (வயது 8). ராணிப்பே ட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று இரவு மணிகண்டனின் பெற்றோர், ஒருவருக்கொருவர் சண்டை போட்டதாக தெரிகிறது. இதை பார்த்த மணிகண்டன் தன்னை பெற்றோர் அடித்து விடுவார்களோ? என பயந்து வீட்டினுள் இருந்து வெளியே ஓடி வந்தான்.
அப்போது வீட்டிற்கு வெளியே, வீட்டிற்கு மின் இணைப்புக்காக பொருத்தப்பட்டு இருந்த மின் ஒயர் அறுந்து கிடந்துள்ளது. தாறுமாறாக சிறுவன் ஓடியபோது, மின்ஒயர் மணிகண்டனின் வலது கையில் எதிர்பாராத விதமாக உரசியது.
இதில் மின்சாரம் உடல் முழுவதும் பாய்ந்ததில், சிறுவன் அலறி துடித்தான்.
சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த அவரது பெற்ேறார், மணிகண்டனை மீட்க முயற்சித்தனர். இருப்பினும் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவன் மணிகண்டன் உடலை, மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
- அதிகாரிகள் உடன் இருந்தனர்
ராணிப்பேட்டை
வாலாஜா ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் சின்ன தகரக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் புனரமைக்கப்பட்டுள்ள சமையற்கூடம், புதிய துணை சுகாதார நிலையம் கட்டுமான பணி, செங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமையற்கூடம், ஆசிரியர்களுக்கான கழிவறை கட்டிடம், நியாய விலைக் கடை கட்டிடம், நெற்களம், அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகியவை உள்பட மோட்டூர், படியம்பாக்கம், எடையந்தாங்கல், சுமைதாங்கி , கடப்பேரி ஆகிய ஊராட்சிகளில் மொத்தம் ரூ.1கோடியே 31லட்சம் மதிப்பில் 12 வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், ஊராட்சிஅலுவலகங்கள், நாற்றாங்கால் பண்ணை ஆகியவற்றையும் கலெக்டர் பார்வையிட்டார்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, சிவப்பிரகாசம், ஒன்றிய பொறியாளர் முனுசாமி மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
- துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்
- மாவட்ட நிர்வாகம் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தல்
சோளிங்கர்:
சோளிங்கரை அடுத்த ரெண்டாடி கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த வீடுகளில் இருந்து தினந்தோறும் பயன்படுத்தப் பட்டு வெளியேற்றப்படும் கழிவுநீர் கால்வாய்கள் மூலம் பழமை வாய்ந்த சிவன் கோவில் குளத்தில் தேங்கும் வகையில் கழிவுநீர் கால்வாயை ஊராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது. தற்போது இந்த குளம் முழுவதும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:- 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோவில் குளம் உள்ளது. இங்கு திருவிழா காலங்களில் சாமி தீர்த்தவாரி மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
கடந்த 25 ஆண்டுக்கு முன்பு வரை குடிநீர் குளமாக இருந்தது. தற்போது கழிவுநீர் கால்வாயை குளத்துடன் இணைத்துள்ளனர். இதனால் குளம் முழுவதும் கழிவுநீர் நிரம்பி துர்நாற்றம் வீசி வருகிறது. மழை காலங்களில் மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தெருக்களில் தேங்கி நடந்து செல்லமுடியாத அளவிற்கு சிரமமாக உள்ளதாக ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- சுப்பிரமணியசாமி வள்ளி தேவசேனா பல்லக்கில் ஊர்வலமாக வந்து காட்சியளித்தார்
- பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் உள்ள சுப்பிரமணியசாமி வள்ளி, தேவசேனா திருக்கோவிலில் ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
இதனையொட்டி முருகப்பெருமானுக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து சுப்ரமணியசாமி வள்ளி தேவசேனா சாமி சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்
- அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் நடைபெற்ற வரும் திட்டப்பணிகள் குறித்து பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண் குராலா நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்ட செய்லபாடுகளை பார்வையிட்டார். தொடர்ந்து 2022-2023-ம் ஆண்டு கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடை கட்டும் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார். இதில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் (பொறுப்பு) அம்சா, காவேரிப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் , உதவி செயற்பொறியாளர் , இளநிலை பொறியாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.
- 3 நாட்கள் நடக்கிறது
- 8 மாவட்டங்களில் தொடங்கியது
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் 14 வயதுக்கு உட்பட்டோரு க்கான மாநில அளவிலான கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது. இந்த கிரிக்கெட் லீக் போட்டிகள் ராணி ப்பேட்டை, பெரம்பலூர், ஈரோடு உள்பட 8 மாவட்டங்களில் நேற்று தொடங்கியது.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட கலை அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானம் மற்றும் ராணிப்பேட்டை பெல் டவுன்சிப் விளையாட்டு மைதானம் ஆகிய 2 இடங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்த கிரிக்கெட் போட்டி யை ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் சந்தோஷ் காந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
அதேபோல் பெல் டவுன்சிப் விளையாட்டு மைதானத்தில் நடந்த போட்டியை மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவரும், பெல் நிறுவன துணைப் பொது மேலாளருமான நாராயண சாமி தொடங்கி வைத்தார்.
இதில் ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் செல்வகுமார், துணைத் தலைவர்கள் பிரகாஷ், நாராயணசாமி, குமார், லட்சுமணன், நடராஜன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
போட்டி களுக்கான ஏற்பாடுகளை ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினர் செய்துள்ளனர்.






