என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிக்கு கட்டிடம் கட்டும் பணி"

    • கலெக்டர் அடிக்கல் நாட்டினார்
    • நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த இச்சிப்புத்தூர் ஊராட்சியில் தனியார் நிறுவனம் சார்பில் சமூக பங்களிப்பாக ரூ.2 கோடி மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறை கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    நிகழ்ச்சிக்கு எம்.ஆர்.எப்.நிறுவன பொது மேலாளர் ஜான் டேனியல், துணைப் பொது மேலாளர் எல்வின் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஊராட்சி மன்ற தலைவர் பத்மநாபன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் எம்.ஆர்.எப். மக்கள் தொடர்பு அலுவலர் கஜேந்திரன், ஒன்றியக் குழு தலைவர் நிர்மலா சவுந்தர், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆஷா பாக்யராஜ், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கப்பள்ளி) பிரேமலதா, பள்ளி தலைமை ஆசிரியை கண்ணகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×