என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special worship in front of Krithikai"

    • சுப்பிரமணியசாமி வள்ளி தேவசேனா பல்லக்கில் ஊர்வலமாக வந்து காட்சியளித்தார்
    • பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் உள்ள சுப்பிரமணியசாமி வள்ளி, தேவசேனா திருக்கோவிலில் ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதனையொட்டி முருகப்பெருமானுக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து சுப்ரமணியசாமி வள்ளி தேவசேனா சாமி சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×