என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திடீரென காரில் தீ"

    • தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததால் அசம் பாவிதம் தவிர்ப்பு
    • போக்குவரத்து பாதிப்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் நேற்று மாலை மாருதி காரில் ராணிப்பேட்டையில் தனியார் மருத்துவமனை அருகே உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தார் .

    .அப்போது திடீரென காரின் முன்பகுதியிலிருந்து புகை கிளம்பி தீ பிடித்துள்ளது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் காரை மேம்பாலத்திலேயே நிறுத்தி விட்டு காரிலிருந்து இறங்கி

    ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் காரில் தண்ணீர் பாய்ச்சி அடித்து தீயைஅணைத்தனர்.இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×