என் மலர்
நீங்கள் தேடியது "Lock breaking of iron gate of school"
- மர்ம கும்பல் கைவரிசை
- அந்த பகுதியை சேர்ந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள கொண்டகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட குமணந்தாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆசிரியர்கள் வழக்கம்போல் நேற்று மாலை இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை பூட்டிவிட்டு சென்றனர். இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள், பள்ளியின் இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் பள்ளியின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் மற்றும் புத்தகங்களை மர்ம நபர்கள் எடுத்து தீவைத்து எரித்தது தெரியவந்தது.
மேலும் மர்ம நபர்கள் மின் அளவீ்டு பெட்டி உள்ளிட்ட பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து போலீசார் அதே பகுதியை சேர்ந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






