என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
- உடல் முழுவதும் பாய்ந்ததில், சிறுவன் அலறி துடித்தான்
- தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்
ராணிப்பேட்டை:
ராணிப்பே ட்டை அடுத்த தண்டலம் கிராமம், ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் துளசி. இவரது மகன் மணிகண்டன் (வயது 8). ராணிப்பே ட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று இரவு மணிகண்டனின் பெற்றோர், ஒருவருக்கொருவர் சண்டை போட்டதாக தெரிகிறது. இதை பார்த்த மணிகண்டன் தன்னை பெற்றோர் அடித்து விடுவார்களோ? என பயந்து வீட்டினுள் இருந்து வெளியே ஓடி வந்தான்.
அப்போது வீட்டிற்கு வெளியே, வீட்டிற்கு மின் இணைப்புக்காக பொருத்தப்பட்டு இருந்த மின் ஒயர் அறுந்து கிடந்துள்ளது. தாறுமாறாக சிறுவன் ஓடியபோது, மின்ஒயர் மணிகண்டனின் வலது கையில் எதிர்பாராத விதமாக உரசியது.
இதில் மின்சாரம் உடல் முழுவதும் பாய்ந்ததில், சிறுவன் அலறி துடித்தான்.
சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த அவரது பெற்ேறார், மணிகண்டனை மீட்க முயற்சித்தனர். இருப்பினும் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவன் மணிகண்டன் உடலை, மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






