search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் குளத்தில் கழிவுநீர் கலக்கும் அவலம்
    X

    கோவில் குளத்தில் கழிவு நீர் கலப்பதை பொதுமக்கள் பார்வையிட்ட காட்சி.

    கோவில் குளத்தில் கழிவுநீர் கலக்கும் அவலம்

    • துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்
    • மாவட்ட நிர்வாகம் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தல்

    சோளிங்கர்:

    சோளிங்கரை அடுத்த ரெண்டாடி கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த வீடுகளில் இருந்து தினந்தோறும் பயன்படுத்தப் பட்டு வெளியேற்றப்படும் கழிவுநீர் கால்வாய்கள் மூலம் பழமை வாய்ந்த சிவன் கோவில் குளத்தில் தேங்கும் வகையில் கழிவுநீர் கால்வாயை ஊராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது. தற்போது இந்த குளம் முழுவதும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதாக கூறப்படுகிறது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:- 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோவில் குளம் உள்ளது. இங்கு திருவிழா காலங்களில் சாமி தீர்த்தவாரி மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 25 ஆண்டுக்கு முன்பு வரை குடிநீர் குளமாக இருந்தது. தற்போது கழிவுநீர் கால்வாயை குளத்துடன் இணைத்துள்ளனர். இதனால் குளம் முழுவதும் கழிவுநீர் நிரம்பி துர்நாற்றம் வீசி வருகிறது. மழை காலங்களில் மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தெருக்களில் தேங்கி நடந்து செல்லமுடியாத அளவிற்கு சிரமமாக உள்ளதாக ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×