என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெல் ஊழியர் வீட்டில் கொள்ளை"

    • 7 பவுன் நகைகளை மீட்டனர்
    • தனிப்படை அமைத்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையை அடுத்த சீக்கராஜபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் மகேஸ்வ ரன் (வயது 38). பெல் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் இவர் சென்னையில் உள்ள தங்கையின் வீட்டிற்கு குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

    திரும்பி வந்த போது, வீட்டின் பின்பக்க கதவு மர்மநபர்க ளால் உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 8 பவுன் கொள்ளைய டிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்த னர். ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா (பொறுப்பு) தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளி களை போலீசார் தேடி வந்தனர்.

    விசாரணையில் பெல் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சங்கீத்குமார் (28) என்பவர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்ததோடு, அவரிடமிருந்து ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 7 பவுன் நகைகளை மீட்டனர். மேலும் திருட்டில் தொடர்பு டைய தாமஸ் ஆல்வா எடிசன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×