என் மலர்
நீங்கள் தேடியது "சிறுவன் பிணம்"
- நீரில் மூழ்கி இறந்தானா? அல்லது கொலை செய்தார்களா?
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட் டம் நெமிலியை அடுத்த கீழ் வெண்பாக்கம் கிராமத்தில் புதிய காலனி குறுக்கு தெருவில் வசித்துவருபவர் காளிதாசன் கூலி தொழிலாளி. இவரது மனைவி பபிதா. இவர்களுக்கு அவினாஷ் (வயது 4) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
அவினாஷ் பனப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்துவந்தான். நேற்று மதியம் சிறுவன் வீட்டில் உள்ளவர்களிடம், நண்பர்களுடன் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றான். பின்னர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். சிறுவன் கிடைக்காததால் அரக்கோணம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் அப்பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் தேடினர்.
பின்னர் வயல்வெளியில் நெற்பயிர்க ளுக்கு நடுவில் நிர்வாண நிலையில் சிறுவன் பிணமாக கிடந்தது தெரிந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் நெமிலி போலீசார் விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் நெமிலி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சிறுவன் நீரில் மூழ்கி இறந்தானா? அல்லது யாராவது கொலை செய்தார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






