என் மலர்
நீங்கள் தேடியது "கண்காட்சி அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார்"
- அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியம் வெளிதாங்கிபுரம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், நெமிலி தாசில்தார் பாலசந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்முகாமில் பல்வேறு துறை சார்பாக அமைக்க ப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார். தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் மொத்தமாக 158 பயனாளிகளுக்கு ரூ.2.66 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். இதில் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, துணைத் தலைவர் தீனதயாளன்,
மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள், வெளிதாங்கி புரம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி, திமுக ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், ரவீந்திரன், நெமிலி வருவாய் ஆய்வாளர் சுரேஷ், அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






