என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temporary market"

    • இங்கு கடைகள் திறந்த நிலையில் இருப்ப தாகவும், போதிய அடிப்ப டை வசதிகள் செய்து தரப்பட வில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து ள்ளது.
    • ஒவ்வொரு கடையும் குறுகலாக அமைக்கப்பட்டு ள்ளது. தகரத்தால் அமைக்க ப்பட்டுள்ள இந்த கடை களில் கதவுகள் இல்லை.

    பழனி:

    பழனி மார்க்கெட் சாலையில் உள்ள நகராட்சி க்கு சொந்தமான காந்தியடி கள் தினசரி மார்க்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பல்ேவறு கடைகள் செயல்ப ட்டு வருகின்றன. இங்கு போதிய அளவு இடவசதி இல்லாததால் எப்போதும் நெரிசலாகவே காணப்படும். அதேநேரம் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்திவிட்டு செல்வதால் அப்பகுதியில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    மேலும் இந்த மார்க்கெட் பல ஆண்டுகளாக பராமரிக்காமலேயே உள்ளது. இந்நிலையில் வியாபாரிகள் ,பொதுமக்க ளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று ரூ.11.32 கோடி மதிப்பில் கடைகள், வாகன நிறுத்து மிடம், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் நவீன மார்க்கெட் வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டு ள்ளது. இதற்காக தற்போது உள்ள கடைகள் பழனி நகராட்சி ஆண்கள் மேல்நி லைப்பள்ளி வளாகத்திற்கு மாற்றப்பட உள்ளது.

    எனவே பள்ளி வளாகத்தில் ரூ.60 லட்சத்தில் 76 கடை களுடன் தற்காலிக மார்க்கெட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இப்பணிகள் நிறைவடை ந்துள்ள நிலையில் கடைகள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் இங்கு கடைகள் திறந்த நிலையில் இருப்ப தாகவும், போதிய அடிப்ப டை வசதிகள் செய்து தரப்பட வில்லை என்ற குற்றச்சா ட்டும் எழுந்து ள்ளது.

    இதுகுறித்து வியா பாரிகள் கூறுகையில், தற்காலிக மார்க்கெட்டில் ஒவ்வொரு கடையும் குறுகலாக அமைக்கப்பட்டு ள்ளது. தகரத்தால் அமைக்க ப்பட்டு ள்ள இந்த கடை களில் கதவுகள் இல்லை. மேலும் குடிநீர், கழிப்பறை மற்றும் மின்சார வசதிகளும் ஏற்படுத்த வில்லை. அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். தற்காலிக மார்க்கெட்டுக்கு இடமாறுதல் செய்ய 2 வாரம் கால அவகாசம் வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

    • அரக்கோணம் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • ஏற்கனவே கடை வைத்திருந்த வியாபாரிகள் அனுமதிக்கப்படுவார்கள்

    அரக்கோணம்:

    அரக்கோணம் பழைய காந்தி மார்க்கெட் மிகப் பழமையான கட்டிடமாக இருந்ததால் அதை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக அரக்கோணம் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டது.

    இதன் அடிப்படையில் அந்த மார்க்கெட் அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதே வேளையில் மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் வியாபாரி களுக்கு தற்காலிக மார்க்கெட் அமைக்கும் பணி தீவிரம் அடைந்து ள்ளது.

    அரக்கோணம் தனியார் தியேட்டர் அருகில் உள்ள ஏரியின் பக்கத்தில் தற்காலிக கூரை அமைத்து அதற்குள் மார்க்கெட் நடத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.

    அதன் அடிப்படையில் தற்போது தற்காலிக மார்க்கெட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மார்க்கெட்டில் ஏற்கனவே கடை வைத்திருந்த வியாபாரிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் பொதுமக்கள் வந்து பொருட்களை வாங்கி செல்வதற்கு ஏதுவாக வசதிகள் செய்ய ப்பட்டு ள்ள தாகவும் அரக்கோணம் நகராட்சி தலைவர் லட்சுமி தெரிவித்து ள்ளார்.

    ×