என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்காலிக மார்க்கெட் அமைக்கப்படும் இடத்தை படத்தில் காணலாம்.
ஏரியின் அருகில் தற்காலிக மார்க்கெட்
- அரக்கோணம் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
- ஏற்கனவே கடை வைத்திருந்த வியாபாரிகள் அனுமதிக்கப்படுவார்கள்
அரக்கோணம்:
அரக்கோணம் பழைய காந்தி மார்க்கெட் மிகப் பழமையான கட்டிடமாக இருந்ததால் அதை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக அரக்கோணம் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டது.
இதன் அடிப்படையில் அந்த மார்க்கெட் அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதே வேளையில் மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் வியாபாரி களுக்கு தற்காலிக மார்க்கெட் அமைக்கும் பணி தீவிரம் அடைந்து ள்ளது.
அரக்கோணம் தனியார் தியேட்டர் அருகில் உள்ள ஏரியின் பக்கத்தில் தற்காலிக கூரை அமைத்து அதற்குள் மார்க்கெட் நடத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.
அதன் அடிப்படையில் தற்போது தற்காலிக மார்க்கெட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மார்க்கெட்டில் ஏற்கனவே கடை வைத்திருந்த வியாபாரிகள் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் பொதுமக்கள் வந்து பொருட்களை வாங்கி செல்வதற்கு ஏதுவாக வசதிகள் செய்ய ப்பட்டு ள்ள தாகவும் அரக்கோணம் நகராட்சி தலைவர் லட்சுமி தெரிவித்து ள்ளார்.






