என் மலர்
ராணிப்பேட்டை
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான 10.50 சதவீத இட ஒதுக்கீடு சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருப்பது, அந்த இட ஒதுக்கீட்டை தங்களின் முன்னேற்றத்திற்காக நம்பியிருந்த பாட்டாளி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் இன்னொரு தரப்பினர் அதைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மை என்பது. ஒட்டு மொத்த தமிழகத்தின் சமூக நீதிக்கும் இது குறித்த உயர்நீதி மன்றத் தீர்ப்பு உலை வைத்திருக்கிறது என்பது தான்.
வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள 10.50 சதவீத இட ஒதுக்கீட்டை செல்லாது என்று அறிவிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள 7 வினாக்களையும், அவற்றின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பில் விவரித்துள்ள அம்சங்களையும், எந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக முன் வைத்தாலும், அந்த இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முடியாது என்பது தான் உண்மை.

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு விடக்கூடாது என்பது இன்று பலரின் விருப்பமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஏற்படுத்தியதே நாம் தான்.
அதற்காக நாம் இழந்தவை 21 உயிர்கள் உட்பட ஏராளம்; நாம் செய்த தியாகங்கள் ஏராளம், ஏராளம். தென்னிந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு கேரளத்தில் 8 பிரிவுகளாகவும், கர்நாடகத்தில் 6 பிரிவுகளாகவும், ஆந்திரத்தில் 5 பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் விடுதலைக்குப் பின்னர் 42 ஆண்டுகள் வரை பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஒரே பிரிவாகத்தான் இருந்தது. பிற்படுத்தப்பட்டோருக்கு தொகுப்பு முறையில் இட ஒதுக்கீடு வழங்க எந்த அமைப்பும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய இட ஒதுக்கீட்டுப் பிரிவைப் போராடிப் பெற்றுக் கொடுத்ததும் நாம் தான். இஸ்லாமியர்களுக்கும், அருந்ததியர்களுக்கும் உள் இட ஒதுக்கீட்டை கிடைக்கச் செய்ததும் நாம் தான். வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்ததும் நாம் தான். தமிழகத்தில் சமூகநீதியின் முன்னோடி நாம் தான். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
சமூகநீதியை பாதுகாப்பதற்காக அடுத்தக்கட்ட சட்டம் மற்றும் அரசியல் போருக்கு ஆயத்தமாக வேண்டிய தருணம் நமக்கு வந்திருக்கிறது. அதற்கு பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். சமூக நீதிக்கு எதிரான சக்திகள் தோண்டிய பள்ளத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மட்டும் வீழ்த்தப்படவில்லை.
எல்லா இட ஒதுக்கீடுகளும் வீழ்ச்சியின் விளிம்பில் தான் உள்ளன. கடந்த காலங்களைப் போலவே தமிழகத்தின் வன்னியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமான சமூக நீதியையும் நாம் தான் நிலைநிறுத்தப் போகிறோம். தமிழ்நாட்டில் நான்கு வகையான இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்த நம்மால் தான் இது சாத்தியமாகும். அதனால், வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து எவரும் கவலைப்பட வேண்டாம் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் எழுதி உள்ளார்.
இதையும் படியுங்கள்...அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலுக்கு விரைவில் அறிவிப்பு: எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தீவிரம்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அணைக்கட்டு ரோட்டில் கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி உள்ளது. இந்த சிறப்பு அங்காடி கட்டுப்பாட்டில் 10 ரேசன் கடைகள் இயங்கி வருகின்றன.இதில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட ரூ.54 ஆயிரத்து 690 பணம் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று அங்கன்வாடி பூட்டை உடைக்கப்பட்டு கொள்ளையர்கள் பணத்தை திருடி சென்றது கண்டு அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து கிளை மேலாளர் மோகனவேல் வாலாஜா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் திருட்டு நடந்த இடத்தில் கைரேகை நிபுணர் செல்வி தடயங்களை சேகரித்து சென்றனர்.
அரக்கோணம் அடுத்த நாகவேடு பகுதியை சேர்ந்தவர் குப்பன். இவரின் மனைவி புஷ்பா இவர்களின் மகன் ரமேஷ் இவருடைய மனைவி ரேவதி.
ரமேஷுக்கும், ரேவதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 14ந்தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து ரமேஷின் தாயார் புஷ்பா மருமகள் ரேவதியிடம் கேட்டுள்ளார். இதனால் மாமியார் மருமகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கிடையே திருவள்ளூர் மாவட்டம் கூவம் பகுதியில் வசித்து வரும் ரேவதியின் தந்தை நீலமேகம் அண்ணன் சதீஷ்குமார் இவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தற்காலத்தில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நாகவேட்டில் வீட்டிலுள்ள ரேவதி பார்ப்பதற்காக வந்தனர்.
அவர்கள் வந்த நேரத்தில் ரேவதிக்கும் புஷ்பாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை கண்ட சதீஷ்குமார் எதற்காக எனது தங்கையிடம் தகராறு செய்கிறாய்? என கேட்டு புஷ்பாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் அங்கு கிடந்த ஒரு மர சட்டத்தை எடுத்து புஷ்பாவை சரமாரியாக தாக்கினார்.
அதில் படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று புஷ்ப பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சதீஸ்குமார் நண்பர்கள் பாலாஜி தஷ்ணாமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அவினாசிகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் அருண் (32). கட்டிடத் தொழிலாளி.
இவர், கடந்த 22-ந்தேதி வீட்டுக்கு வராத நிலையில் அதே பகுதியில் உள்ள கோவிலுக்கு அருகில் பிணமாக கிடந்தார். அருணுக்கு மதுப்பழக்கம் இருப்பதால் மதுபோதையில் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்பட்டது.
இதற்கிடையில், அருண் சில நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார் என்ற குரல் பதிவு வாட்ஸ்அப்களில் வேகமாக பரவியது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கோரி அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் அருணின் தந்தை கோவிந்தராஜ் புகார் அளித்தார்.
அதன்பேரில், அருணின் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக மோசூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (23) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
அப்போது அவர் முன் விரோத பகை காரணமாக மோசூரைச் சேர்ந்த நண்பர் மாயாண்டி (35) மற்றும் அவினாசிகண்டிகை கிராமத்தை சேர்ந்த நண்பர் தரணி (35) ஆகியோருடன் சேர்ந்து அருணை கல்லால் தாக்கி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மாயாண்டி மற்றும் தரணியை போலீசார் கைது செய்தனர். தொடர் விசாரணையில் கடந்த 22-ந்தேதி இரவு ஏற்பட்ட தகராறில் 3 பேரும் சேர்ந்து மதுபோதையில் இருந்த அருணை கல்லால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






