என் மலர்
ராணிப்பேட்டை
- வாலாஜா தன்வந்திரி பீடத்தில் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் பெரு முயற்சியுடன் நோய் தீர்க்கும் கடவுளான தன்வந்திரி பகவானுக்கும் இதர 89 பரிவார தெய்வங்களுக்கும் திருச்சன்னதிகள் அமைத்து உலக மக்கள் நலன் கருதி அவ்வப்போது சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கோகுலாஷ்டமியை முன்னிட்டும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவீன முறையில் கல் ஊஞ்சலில், ஒரு அடி உயர தவழ்ந்த கோலத்தில் உள்ள நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள், மஹா அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தம்பதியர் குழந்தை பாக்யம் பெற வேண்டியும், குடும்ப ஒற்றுமை, அகந்தை அகன்றிட, திருமணத்தடை அகல, செல்வம் பெருக, வயல்களில் விளைச்சல் அதிகரிக்க, அமைதி நிலவ, ஆற்றல் பெருக, வறுமை இல்லா வாழ்வு அமைய வேண்டி ஸ்ரீ கிருஷ்ணயாகம், கூட்டு பிரார்த்தனையுடன் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், சீடை, முறுக்கு, தட்டை, அப்பம், லட்டு போன்ற பல்வேறு பலகாரங்கள் பழங்கள் வைத்து நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜையும், அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது.
இந்த பூஜையில் வீடு, மனை வாஸ்து தோஷங்கள் நீங்கவும், கெட்ட சக்திகள் விலகவும், குடும்பத்தில் சச்சரவுகள் நீங்க, தாம்பத்ய உறவில் விரிசல் அகல, நல்ல வேலை கிடைக்க பிரார்த்தனை நடைபெற்றது.
பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஹோம பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் செட்டித்தாங்கல் ஊராட்சியில் குப்பை இல்லாத ஊராட்சியாக மாற்றி அதை நிரந்தரமாக செயல்படுத்தும் "நம்ம ஊரு சூப்பரு" என்னும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் லோகநாயகி முன்னிலை வகித்தார். இந்த திட்டமானது கிராம மக்கள் வீடுகள் தோறும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும்.
அவர்கள் குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பையை உரமாக மாற்ற வேண்டும் மக்காத குப்பையை சேகரித்து அரைத்து சாலை பணிகளுக்கு பயன்ப டுத்துதல் அல்லது சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்புதல் ஆகியவை ஆகும்.
இந்த தொடர் பணி மூலம் ஒட்டுமொத்த ஊராட்சியிலும் குப்பை இல்லாத ஊராட்சியாக மாறி நம்ம ஊரு சூப்பரு என்று பெருமைப்பட வைக்கும் அளவுக்கு வர வேண்டும். இந்த திட்டதை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் செட்டித்தாங்கல் ஊராட்சியில் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் (ஊராட்சி) குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பாஸ்கரன், ஊராட்சிமன்ற தலைவர் வளர்மதி அன்பழகன், தூய்மை பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- ரெயிலில் அபாய சங்கிலியை இழுத்த 5 பேர் சிக்கினர்
- 15 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது
அரக்கோணம்:
சாம் மாநிலம் சிலிசாரில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயிலில் பொதுப்பெட்டியில் சீட் பிடிப்பதில் 5 பேருக்கிடையே அடிதடி ஏற்பட்டது.
இந்நிலையில் ெரயில் அரக்கோணம் ரெயில் நிலையம் வந்த போது 2 முறை ெரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனால் ரெயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் அபாய சங்கிலியை இழுத்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ெரயில் 15 நிமிட காலதாமதமாக புறப்பட்டு சென்றது.
- நெமிலி சயனபுரத்தில் நடந்தத
- பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரத்தில்திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கிராம சேவை மையக்கட்டிடம் அருகில் மருத்துவ முகாம் ஊராட்சி மன்றத் தலைவர் பவானி வடிவேலுதலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழுதலைவர் பெ.வடிவேலு கலந்து கொண்டு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.
இதில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சுகன்யா ரவி, வட்டார மருத்துவ அலுவலர் ரதி, மருத்துவ அலுவலர்கள் பிரியதர்ஷன், பாலச்சந்தர், செவிலியர்கள் அம்பிகா, மீனா, காசநோய் மேற்பார்வையாளர் ஸ்டீபன் பொன்னையா, சுகாதார அலுவலர்கள் காயத்ரி, பாக்கியராஜ், சுரேஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- பங்க் கடையில் குட்கா பறிமுதல்
- கடைகளில் சோதனை
நெமிலி:
நெமிலி அடுத்த ஓச்சேரி பகுதியில் குட்கா போன்ற போதை பொருட்கள் விறக்க படுவதாக அவளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் மாமண்டுர் பகுதிக்கு சென்று போலீசார் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு கடைகளில் குட்கா போன்ற போதை பொருட்கள் இருந்தது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பைக்கில் வந்து பறித்து சென்றனர்
- போலீஸ் விசாரணை
சோளிங்கர்:
சோளிங்கரை அடுத்த பரவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி மனைவி கவுசல்யா ( வயது 23 ).
இவரது தங்கை பூங்கொடி. இருவரும் திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று பஸ்சில் திரும்பிய அவர்கள் கே.ஜி.கண்டிகையில் இறங்கினர்.
கவுசல்யா தனக்கு தெரிந்தவரின் மோட்டார்சைக்கிளில் சென்று அக்கச்சிகுப்பம் கூட்ரோடு அருகே இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் கவுசல்யா அணிந்திருந்த தாலி சங்கிலியை பிடித்து இழுத்து அறுத்தனர்.
நல்லவேளையாக தாலி மட்டும் அவர் கழுத்தில் நின்றுவிட்டது. எனினும் 3 பவுன் தாலி சரடு 3 பேரின் கைகளில் சிக்கிக்கொண்டது. அந்த நகையுடன் 3 பேரும் தப்பி விட்டனர்.
இதுகுறித்து சோளிங்கர் போலீஸ் சப் - இன்ஸ் பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகிறார்.
- 250 கிராம் பறிமுதல்
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
சோளிங்கர் கீழாநெண்டை மோட்டூர் திருத்தணி மெயின் ரோட்டில் வசித்து வரும் முனுசாமி மகன் வெங்கடே சன் (வயது 30).இவர் வீட்டின் பின்புறம் முட்புதரில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் - இன்ஸ் பெக்டர்கள் மோகன் , ரவி உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கஞ்சா விற்ற வெங்கடேசனை கைது செய்தனர் . அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்தார்
- வாலிபர் படுகாயம்
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் மோட்டூர் பகுதி யைச்சேர்ந்தவர் செந்தில்குமார் ( வயது 38 ) .
ராணிப்பேட்டை காரைப்பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் குமார் ( 58 ). இருவரும் நேற்று மதியம் வேலூர் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை செந்தில் குமார் ஓட்டி வந்துள்ளார். மேல்விஷாரம் தனியார் மருத்துவமனை அருகே வரும்போது இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த லாரி மோதியது . இதில் தேவராஜ்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
செந்தில் குமார் படுகாயமடைந்து மேல்வி ஷாரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தேவராஜ்குமார் உடலை ஆற்காடு டவுன் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கஞ்சா பறிமுதல்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்
அரக்கோணம் இரட்டை குளம் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை போலீசார் சந்தேகத் தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அதில் அவர்கள் அரக்கோணத்தை அடுத்த பாராஞ்சி பகுதியை சார்ந்த சுதன் (வயது 22) மற்றும் ஆந்திர மாநிலம் நாயுடு பேட்டை பகுதியை சார்ந்த சுரா நாகேஷ் (21) என்பது தெரியவந்தது. இருவரும் அரக்கோணத்தை அடுத்த உளியம் பாக்கம் பகுதியை சேர்ந்த லாசர் (25).
என்பவரது மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து சதன் மற்றும் ராகேஷை போலீசார் கைது செய்தனர்.
நேற்று காலையும் தாலுகா போலீசார் சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த இளைஞரை போலீசார் விசாரித்த போது பெருமாள் ராஜபேட்டை பகுதியை சார்ந்த குணசேகர் ( 24 ). என்பதும் அந்த பகுதியில் கஞ்சா விற்றதும் தெரியவந்தது இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- பாதுகாப்பு வழங்க ஏற்பாடு
- பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சிலைவைக்க அறிவுறுத்தல்
அரக்கோணம்:
அரக்கோணம் நகர போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் முனி சேகர் (பொறுப்பு ) தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்து முன்னணியை சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் பி.ஜே.பி. கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சிலையை வைப்பது குறித்தும் ஊர்வலத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அசம்பாவிதம் எதுவும் நடக்காத வண்ணம் பாதுகாப்புடன் நடத்துவதற்கான பல்வேறு யோசனைகள் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தின் போது உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரன் உடன் இருந்தார்.
- பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்
- பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் எடுத்து ஆட்டுப்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு கல்லூரி மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து போதைப் பொருள் தடுப்பு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
அரக்கோணம் எஸ். ஆர்.கே. தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் முடிவடைந்தது.
இந்த ஊர்வலத்தை அரக்கோணம் ரவிஎம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் சமூகத்தில் எந்த ஒரு நற்செயலும் மாணவர்கள் இருந்தே தொடங்க வேண்டும்.
மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். போதைப் பொருளை ஒழித்து நல்ல சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு ஒவ்வொரு மாணவரிடமும் உள்ளது.
அதற்கான முயற்சிகளை ஒவ்வொரு மாணவர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஊர்வலத்தில் சப் கலெக்டர் பாத்திமா ரோட்டரி சங்கத் தலைவர் சதீஷ் செயலாளர் ராஜா நிர்வாகிகள் மனோகர் முரளி மற்றும் கல்லூரி முதல்வர் கவிதா பேராசிரியர்கள் ஜெகதா குமார் தமிழரசி செல்வக்கனி ஜெய்சங்கர் சாமுவேல் முரளி காந்தி செழியன் உடற்கல்வி இயக்குனர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆய்விற்கும் மேற்பட்ட
100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பதாகைகளை கையில் ஏந்தி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு
- மாநில அளவில் சாதனை
அரக்கோணம்:
திண்டுக்கல் பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவில் யோகாசன போட்டி நடைபெற்றது.
இதில் அரக்கோணம் பாரதிதாசனார் கல்வி குழும மாணவர்கள் பவித்ரன், ஆகாஷ் ஆகியோர் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பாரதிதாசனார் கல்வி குழுமத்தின் இயக்குனர்சுந்தர், முதல்வர் பத்மா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள் அனைவரும் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டினர்.






