என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நம்ம ஊரு சூப்பரு திட்டம்"

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் செட்டித்தாங்கல் ஊராட்சியில் குப்பை இல்லாத ஊராட்சியாக மாற்றி அதை நிரந்தரமாக செயல்படுத்தும் "நம்ம ஊரு சூப்பரு" என்னும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் லோகநாயகி முன்னிலை வகித்தார். இந்த திட்டமானது கிராம மக்கள் வீடுகள் தோறும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும்.

    அவர்கள் குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பையை உரமாக மாற்ற வேண்டும் மக்காத குப்பையை சேகரித்து அரைத்து சாலை பணிகளுக்கு பயன்ப டுத்துதல் அல்லது சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்புதல் ஆகியவை ஆகும்.

    இந்த தொடர் பணி மூலம் ஒட்டுமொத்த ஊராட்சியிலும் குப்பை இல்லாத ஊராட்சியாக மாறி நம்ம ஊரு சூப்பரு என்று பெருமைப்பட வைக்கும் அளவுக்கு வர வேண்டும். இந்த திட்டதை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் செட்டித்தாங்கல் ஊராட்சியில் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் (ஊராட்சி) குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பாஸ்கரன், ஊராட்சிமன்ற தலைவர் வளர்மதி அன்பழகன், தூய்மை பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    ×