என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
    • ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    முகாமிற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். 81 நபர்களுக்கு மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    47 பேருக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் பதிவு, 53 புதிய பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை பதிவு, 77 பேருக்கு மாற்றுத்திறனாளி நல வாரியத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டது.

    முகாமில் 2 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 57 ஆயிரத்து 700 மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது.

    முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், மாற்றுத்திறனாளி அலுவலக பணியாளர்கள், மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிகள் தீவிரம்
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை 100 சதவீதம் சரியானதாக ஆக்கவும், போலியான விவரங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கவும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இப்பணிகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியல் உடன் ஆதார் எண்ணை இணைக்கும் முதல் 1000 பேருக்கு ஆன்-லைனில் இணைய தள வாயிலாக இ-சர்டிபிகேட் வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    https://elections.tn.gov.in/getacertificate என்ற இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க முடியும்.எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ- மாணவிகளை ஊக்குவித்து இ-சர்டிபிகேட் பெற வைக்க கல்லூரி முதல்வர்கள் முன் வர வேண்டும்.

    அதேபோல் வாக்காளர்கள் அனைவரும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து இ-சர்டிபிகேட் பெற்றுக்கொள்ள வேண்டும்.இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    • பூமி பூஜை நடந்தது
    • அதிகாரிகள் பங்கேற்பு

    நெமிலி, ஆக.23-

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வெண்பாக்கம் ஊராட்சியில்15வது நிதிக்குழு மான்யம் மற்றும் ஆதிதிராவிடர் குக்கிராமங்களுக்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை மற்றும் சிறுபாலம் அமைப்பதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    கீழ்வெண்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் மாலதி முருகவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

    இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) வேதமுத்து, ஒன்றிய குழு உறுப்பினர் சுகுமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிலம்பரசன், ஊராட்சி எழுத்தர் ராஜி, குலோத்துங்கன், மதிவாணன், இளையராஜா, கண்ணன், அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் வலியுறுத்தல்
    • காத்திருப்பவர்கள் அவதியடைவதாக புகார்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் பல்வேறு நோயாளிகள், மகப்பேறு தாய்மார்கள் போன்ற நபர்களுக்கு உடன் வந்து இருப்பவர்கள் அறுவை சிகிச்சை பிரிவு முன்பு உள்ள காத்திருப்பு அறையில் இருக்க வேண்டும்.

    அங்கு மின்விசிறி இல்லாததால் மருத்துவமனைக்கு வருபவர்கள்மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் மின் விசிறி வசதி ஏற்படுத்தி தரக்கோரி சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • 13,200 மரக்கன்றுகள் நட திட்டம்
    • 20 வகையான மரங்கள் நடப்படுகிறது

    அரக்கோணம்:

    அரக்கோணம் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் 'நந்தவனம் என்ற சேவை மையத்தோடு' இணைந்து, அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி விமானதளத்தில் ராஜாளி மியாவாக்கி வனம் உருவாக்க திட்டமிட்டு அதற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதற்கட்டமாக 20 வகையான மரங்கள் நடும் விழா நடைபெற்றது.

    இதில் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தின் கமான்டர் ஆர் வினோத் குமார், கமாண்டிங் அதிகாரி மரங்களை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

    இந்த வனத்தில் 14,000 சதுர மீட்டர் பரப்பளவில் 13,200 மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளது. வேம்பு, வேங்கை, பூவரசு, சோறு, மந்தாரை, நொச்சி உள்ளிட்ட பல்வேறு நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

    ராஜாளியில் மரம் நடவுக்கான இடத்தை தயார் செய்ய 2 மாதங்கள் ஆனது. நவீன முறையில் அமைக்கப்பட்ட இந்த வனத்தில், தானாக வெட்டப்பட்ட சொட்டு நீர் பாசன முறையை உருவாக்குதல், தானாக செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல், தண்ணீர் வழங்குவதற்கான பாதைகள் மற்றும் கால்வாய்களை உருவாக்குதல் மற்றும் மரக்கன்றுகளை நடுதல் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்விழாவில் ஐஎன்எஸ் ராஜாளி தளத்தில் உயரதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    • கைரேகை நிபுணர்கள் ஆய்வு
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த வாணியம்பேட்டை ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் தினேஷ் (வயது 37). இவர் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் சிறப்பு அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    இவர் கடந்த 19- ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்துக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார்.

    இன்று காலை வீடு திரும்பிய தினேஷ் வீட்டின் முன்பக்க கதவை உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணிமணிகள் கலைந்து கீழே விழுந்து கிடந்தன. பீரோவில் வைத்திருந்த மூன்றரை பவுனை நகை மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அரக்கோணம் கிராமிய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விரைந்து வந்த போலீசார் வீட்டில் கைரேகை நிபுணர்களை வைத்து ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மழை வந்தால் வைக்கோல் நனைந்து விடும் என்று எண்ணிய வெங்கடேசன் வைக்கோல் மீது தார்ப்பாய் போட்டு மூடுவதற்காக தனது பேத்தி லாவண்யாவுடன் விவசாய நிலத்திற்கு சென்றார்.
    • தென்னை மரம் உடைந்து விழுந்ததில் தாத்தா, பேத்தி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த ஆயிரம் மங்கலம், பாடசாலை தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 70). விவசாயி. இவரது மகள் இந்திராணி. பேத்தி லாவண்யா (17). இந்திராணியின் கணவர் இறந்து விட்டதால் தனது மகளுடன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

    வெங்கடேசனுக்கு ஊருக்கு வெளியே விவசாய நிலம் உள்ளது. விவசாய நிலத்தில் வைக்கோல் போர் போட்டு வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை ஆயிரம் மங்கலம் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழை வந்தால் வைக்கோல் நனைந்து விடும் என்று எண்ணிய வெங்கடேசன் வைக்கோல் மீது தார்ப்பாய் போட்டு மூடுவதற்காக தனது பேத்தி லாவண்யாவுடன் விவசாய நிலத்திற்கு சென்றார்.

    வைக்கோல் போரை தார்ப்பாய் போட்டு மூடிக்கொண்டு இருந்தனர். அப்போது பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் அங்கிருந்த தென்னை மரம் உடைந்து வெங்கடேசன் மற்றும் அவரது பேத்தி லாவண்யா மீது விழுந்தது. இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடேசன், லாவண்யா ஆகியோரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்னை மரம் உடைந்து விழுந்ததில் தாத்தா, பேத்தி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் நடவடிக்கை
    • கலெக்டர் வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்ட பசு மையான கிராமங்களை உருவாக்கவிழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் பாஸ் கர பாண்டியன் வலியு றுத்தினார்.

    ஆலோசனை கூட்டம் ராணிப்பேட்டைமாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சி மற் றும் ஊராட்சிதுறையின் சார் பில் கிராம ஊராட்சிகளை தூய்மைப்படுத்தும் விதமாக நம்ம ஊரு சூப்பரு என்ற திட் டத்தின் ஆலோசனை கூட் டம் நடந்தது. கெலெக்டர் பாஸ் கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:

    ராணிப்பேட்டைமாவட்ட ஊரகப் பகுதிகளில் பாதுகாப் பான சுகாதாரம் மற்றும் தூய் மையான சுகாதாரத்தை ஏற்ப டுத்தும்பொருட்டு அனைத்து ஊரகப்பகுதிகளிலும் வருகிற 2-ந் தேதி வரை நம்ம ஊரு சூப்பரு என்ற தலைப்பில் சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து பிரசா ரம் நடத்திட வேண்டும்.

    பொது நிறுவனங்கள் மற் றும் பொது இடங்களில் ஒட் டுமொத்த தூய்மை பணி களை மேற்கொள்ளுதல், பள் ளிகள் மற்றும் கல்லூரிகளில் நீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து விழிப் புணர்வு வழங்குதல், சுய உத விக் குழு உறுப்பினர்கள் மூலம் வீடுகள் தோறும் விழிப் புணர்வு ஏற்படுத்துதல், ஒரு முறை பயன்படுத்தப்படும். பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்தல், மீண்டும் மஞ் சப்பை பயன்படுத்துவதை ஊக்குவித்தல், தூய்மையான மற்றும் பசுமையான கிராமங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட வைகளை பிரசாரத்தில் தெரி விக்க வேண்டும்.

    இந்த பிரசாரத்தை சிறப் பான முறையில் செயல்படுத் தி மாவட்ட அளவில் ணை இயக்குனராக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்நியமனம் செய்யப்பட்டுள் ளார். ஊரக வளர்ச்சித்துறை யுடன் ஒருங்கிணைந்து சிறப்பு பிரசாரத்தினை திறம்பட செயல்படுத்திட திட்ட இயக் குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வருவாய் அலுவ லர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர், துணை இயக்குனர், மாவட்ட சமூக பாதுகாப்பு நல அலுவ லர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர், 5 மாவட்ட வன அலுவலர், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர், சுற்றுலாத்துறை உதவி இயக்குனர், பேரூராட் சிகள் உதவி இயக்குனர் மற் றும் பிற அலுவலர்கள் பொறுப்பாக்கப்பட்டுள்ள னர்.

    இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார் மற் றும் துறை சார்ந்த அலுவலர் கள் கலந்து கொண்டனர்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படுகிறது
    • செயற்பொறியாளர் தகவல்

    ஆற்காடு:

    ஆற்காடு கோட்டத்தைச் சார்ந்த மாம்பாக்கம் துணைமின் நிலையத்தில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆருர், வடக்குமேடு, தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    • பாணாவரத்தில் நடந்தது
    • ஏராளமானோர் பங்கேற்றனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் யாதவா் ெதருவில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா் கோவிலில் கிருஷ்ணா் ஜெயந்தியை முன்னிட்டு 27-ம் ஆண்டு உறியடி திருவிழா நடந்தது.

    முன்னதாக அதிகாலை கோவில் திறக்கப்பட்டு கிருஷ்ணா், ராதா, ருக்மணி சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடைப்பெற்றது.

    தொடா்ந்து மகாபார சொற்பொழிவும் அன்னதானம் நடைப்பெற்றது. மாலை உறியடி திருவிழா, வழுக்குமரம் ஏறுதல், குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவை நடைப்பெற்றது. இதில் இளைஞா்கள் சிறுவா்கள் என ஏராளமானவா்கள் கலந்து கொண்டனா்.

    தொடா்ந்து மாலை ஸ்ரீ கிருஷ்ணா் ராதா, ருக்மணி சாமிகள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மங்கள வாத்தியங்கள் முழங்க திரு வீதி உலாவந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனர்.

    அப்போது இளைஞா்கள் கோலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நாட்புற கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். அதனை தொடா்ந்து இரவு ஆரணி நாடக மன்றத்தினரால் தெருகூத்து நாடகம் நடைப்பெற்றது.

    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
    • கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டார்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.இதில் வாலாஜா டோல்கேட் அருகே நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முகாமை பார்வையிட்டார்.

    இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ராணிப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் போன்ற மருத்துவமனைகளில் கட்டமைப்பு மேம்படுத்துவதற்கு ரூ.13 கோடியே 87 லட்சத்திற்கான திட்டங்கள் செயல்படுத்த தொடங்கி இருக்கிறோம்.ரூ.5 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பீட்டில் ராணிப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் விபத்து மற்றும் சிகிச்சை மையங்களில் விபத்து பதிவுக்கான தரவுகளை பதிவேற்றல் செய்ய புதிய மென்பொருள் ட்ரோமா ரிஜிஸ்டர் சாப்ட்வேர் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    பாணாவரம், கொடைக்கல், புதுப்பாடி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார அளவிலான பொது சுகாதாரம் சேவைகளை வலுப்படுத்தும் விதமாக புதிதாக பிளாக் லெவல் பப்ளிக் ஹெல்த் யூனிட்ஸ் கட்டடங்கள் கட்ட வலிமைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.ஊரகப் பகுதிகளில் வாடகை கட்டடங்களில் செயல்படும் இரண்டு துணை சுகாதார நிலையங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்கள் ரூ.64 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. ரூ.82 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் பாராஞ்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்படவுள்ளது. ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அருகிலபாடி ஆரம்ப சுகாதார நிலையம் செவிலியருக்கான குடியிருப்பு ஒன்று கட்டப்படவுள்ளது.

    ரூ.69 ஆயிரம் மதிப்பீட்டில் ராணிப்பேட்டை சுகாதார துறையில் திட்ட பணிகளில் பணியாற்றும் மூன்று மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நல அலுவலராக பணி தரம் உயர்த்தப்படவுள்ளது. ரூ.1கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் ஆற்காடு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதியகட்டிடம் கட்டப்பட உள்ளது.

    ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அரக்கோணம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், உள்பட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.

    மேலும் இந்த மாவட்டத்திற்கு கூடுதலாக ரூ.7கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் ராணிப்பேட்டை மாவட்ட உள்ள அரசு மருத்துவமனைகளில் மக்களை தேடி மருத்துவம் தேடும் திட்டத்தில் அனைவருக்கும் நல் வாழ்வு இலக்கை அடைவதற்கு ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக சேவைகள் வழங்கப்படும்.

    ரூ.67 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் மக்களை தேடி மருத்துவம் சேவைளை மேம்படுத்த அனைவருக்கும் நல வாழ்வு என்கிற இலக்கினை மேம்பட ஊரகப் பகுதிகளில் 48 சுகாதார நிலையங்கள் நல வாழ்வு மையங்களாக தரம் உயர்த்தப்படும். ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் ராணிப்பேட்டை அரசு மருத்துவமனையில் புகையிலை கட்டுப்பாட்டு மையம் ஒன்று ஏற்படுத்தப்பட உள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மருத்துவமனையில் புகார் மற்றும் ஆலோசனைகளை நேரடியாக பெற்று நடவடிக்கைகள் எடுக்க மருத்துவமனையில் வரவேற்பு பிரிவில் ஒருங்கிணைப்பு அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட இருக்கிறார். இந்தப் பணிகள் அனைத்தும் ராணிப்பேட்டை தொகுதி அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் வலியுறுத்தியதின் பேரில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் திட்ட மதிப்பீடுகளாக தயாரிக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடந்து கொண்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, பொது சுகாதார இயக்குனர் வேதநாயகம், கோட்டாட்சியர் பூங்கொடி, நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, மாவட்ட இணை இயக்குனர் மருத்துவர் லட்சுமணன், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மருத்துவர் மணிமாறன், தாசில்தார் ஆனந்தன், மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, நகர செயலாளர் தில்லை, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், நகரமன்ற துணை தலைவர் கமலராகவன் மற்றும் திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
    • அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டுரங்கில் அனைத்து துறைகளின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை தனிச்செயலாளர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சம்பத் தலைமை வாங்கினர்.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து துறை வாரியாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்தார்.

    மேலும் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கவும் அரசிடமிருந்து ஏதேனும் காலதாமதங்கள் இருந்தால் அதனை உடனடியாக தன்னுடைய பார்வைக்கு கொண்டு வரவும் உத்தரவிட்டார்.பொதுமக்களுக்கு அரசு திட்டங்கள் உடனுக்குடன் கிடைக்க அனைத்து துறை அலுவலர்களும் திறம்பட செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், திட்ட இயக்குனர் லோகநாயகி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் குபேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×