என் மலர்
ராணிப்பேட்டை
- சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ராமசாமி தெருவை சேர்ந்தவர் லட்சுமி ( வயது 70 ) .
இவர் நேற்று முன்தினம் ஆற் காடு அண்ணா சிலை அருகே சாலையை கடக்க முயன்றார. அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக் கத்தினர் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட் டார். அங்கு சிகிச்சை பல னின்றி லட் சுமி பரிதாப மாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற் காடு டவுன் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
- மக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி கூட்டம் நகர தலைவர் லட்சுமி தலைமையில் நடைபெற்றது.இதில் துணைத் தலைவர் கலாவதி அரக்கோணம் நகராட்சி ஆணையாளர் லதா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கட்சி பாகுபாடு இன்றி தங்கள் வார்டுகளில் குடிநீர் வசதி, குப்பைகளை அகற்றப்பட வேண்டும்.மின்விளக்குகள் எரியவில்லை. எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை என்று நகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் சரமாரி குற்றம் சாட்டினர்.
25 வார்டு உறுப்பினர் துரை சீனிவாசன் தன்னுடைய வார்டில் ரேஷன் கடை கேட்டு பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து நகர மன்ற துணைத் தலைவர் கலாவதி உட்பட அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்டித்தனர்.
33வது வார்டு கவுன்சிலர்
பர்கத் பாட்டிலில் நகராட்சி விநியோகம் செய்கின்ற குடிநீரில் கழிவுநீர் கலந்ததாகவும் இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் புகார் கூறினார்.
- சு.ரவி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
- நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பஸ் நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெமிலியில் கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி மோசடி செய்த நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். இதில் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- ஒரு வாரத்திற்கு முன்பு சென்னசமுத்திரம் மோட்டூரில் உள்ள தந்தை வீட்டுக்கு மாணவி வந்தார். நேற்று மாலை 4.30 மணிக்கு நிலத்துக்கு சென்று மாடுகளை ஓட்டிவர மாணவி சென்றார்.
- அப்போது மறைந்திருந்த விஜயகுமார், அவரிடம் சென்று தன்னை காதலிக்கும்படி கேட்டு, ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி உள்ளார்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த சென்ன சமுத்திரம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் 6 மாதங்களுக்கு முன்பு பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவியிடம், தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். இது பற்றி தகவல் அறிந்த மாணவியின் தந்தை, பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் மகளை தங்க வைத்துள்ளார்.
இந்தநிலையில் விஜயகுமார், மாணவியை பார்ப்பதற்காக பனப்பாக்கம் கிராமத்திற்கு 2 முறை சென்றுள்ளார்.
இதற்கிடையே ஒரு வாரத்திற்கு முன்பு சென்னசமுத்திரம் மோட்டூரில் உள்ள தந்தை வீட்டுக்கு மாணவி வந்தார். நேற்று மாலை 4.30 மணிக்கு நிலத்துக்கு சென்று மாடுகளை ஓட்டிவர மாணவி சென்றார்.
அப்போது மறைந்திருந்த விஜயகுமார், அவரிடம் சென்று தன்னை காதலிக்கும்படி கேட்டு, ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி உள்ளார். இதற்கு மறுத்த அவரை விஜயகுமார் கத்தியால் கழுத்தில் அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த மாணவி வீட்டுக்கு சென்று தந்தையிடம் கூறியுள்ளார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கலவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் நேரில் சென்று விசாரணை செய்தார்.
இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், மூர்த்தி, சங்கர், பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தெருக்களில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.
- விவசாயிகள் மகிழ்ச்சி
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள கீழாண்ட மோட்டூர், கொண் டபாளையம், எசையனூர், உள்ளிட்ட கிராமங்களில் காலை முதல் வானம் மேக் மூட்டத்துடன் காணப்பட் டது.
தொடர்ந்து மாலையில் சுமார் ஒரு மணிநேரம் காற்று டன் மிதமான மழை பெய்தது . இதனால் சாலைகளிலும், தெருக்களிலும் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்தது.
இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- கலெக்டர் தகவல்
- 15 பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்படுகிறது
ராணிப்பேட்டை:
சுற்றுலாத்துறை தமிழ்நாடு சார்பில் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர் களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுலா தினத்தன்று சுற்றுலா விருதுகள் வழங்க உள்ளது.
இந்த ஆண்டு விருது வழங்குவதற்கான அறிவிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படிசுற்றுலா ஆபரேட்டர்கள் , விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் உள் ளிட்ட 15 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் www.tntourismawards.com என்ற இணையதளத்தில் நாளைக்குள் ( வெள்ளிக்கிழமை ) விண்ணப் பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உலக சுற்றுலா தின மான 27.9.22 அன்று விருது வழங்கப்படும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- 15 நாள் ஜெயலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
- மரக்காணத்தில் நடந்த கொலையில் திருப்பம்
ராணிப்பேட்டை:
விழுப்புரம் மாவட்டம், மரக் காணம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 22 - ந்தேதி திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த அபி என்கிற அபினேஷ் (வயது 22) என்ற கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர் இந்தநிலையில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த விஜய் (25), திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பிர காஷ் (21), காஞ்சீபுரம் பகு தியை சேர்ந்த சஞ்சய் (19), திருநெல்வேலியை சேர்ந்த வைரமணி (22) ஆகிய 4 பேர் நேற்று ராணிப்பேட்டை மாவட்ட உரிமையியல் மற் றும் குற்றவியல் நடுவர் நீதி மன்ற நீதிபதி நவீன் துரைபாபு முன்பு சரண் அடைந்தனர்.
அவர்கள் 4 பேரையும் 15 நாள் வேலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
- 100 நாள் திட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்
- இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
நெமிலி:
ராணிப்பேட்டையில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாணாவரம் பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது இந்த பகுதியில் ஏராளமான பனை மரங்கள் நடவு செய்ய வேண்டும் எனவும் தமிழகத்தின் மாநில மரமான பனை மரத்தை பெருக்கினால் நீர் வளமும் பெருகும் எனவே பனைமரத்தை அதிகமாக பெருக்கிட அந்தந்த ஊராட்சிகளில் உள்ள 100 நாள் திட்ட பணியாளர்களை கொண்டு பனை விதைகளை சேகரித்து அந்தந்த பகுதியில் உள்ள ஏரிக்கரை கால்வாய் ஓரம் பகுதிகளில் பனை விதைகளை நடவு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இதனையடுத்து காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு வேண்டுகோளின்படி பாணாவரம் அடுத்த குத்தம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாராம் அந்த பகுதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி 10 ஆயிரம் பனை விதைகளை சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் குத்தம்பாக்கம் ஊராட்சிக்கு பனை விதைகளை நடவு செய்து மீதமுள்ள விதைகளை மற்ற ஊராட்சிக்கு வழங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகள் சேகரிக்கும் பணியில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்
- ஏராளமானோர் பங்கேற்பு
நெமிலி:
தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பாணாவரம் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியை ருமனா தலைமையில் படிக்கும் 164 மாணவிகளுக்கும், அதேபோல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சிவசங்கா் தலைமையில் 137 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினாா்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் அா்ஜீனன், ஒன்றிய குழு உறுப்பினா் முனியம்மாள் கனேஷன் ஊராட்சிமன்ற துணை தலைவர் சரண்யாவிஜயன் பெற்றோா் ஆசிரியா் சங்க தலைவர் துரைமஸ்தான், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மைகுழு தலைவர் கல்பனா விஜயகுமாா் ஆண்கள் மேல்நி லைப்பள்ளி மேலண்மை குழு தலைவர் சந்திராமுனிசாமி, துணை தலைவர் ரேகா மற்றும் வாா்டு உறுப்பினா்கள் பொதுமக்கள் என பலர் கலந்து ெகாண்டனர்.
- வருகிற 26-ந் தேதி நடக்கிறது
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, பட்டு வளர்ச்சி, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு, நீர்வள ஆதார அமைப்பு, வனம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின்சாரம், போக்குவரத்து, பால்வளம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கள பிரச்சினைகளை களைத்திட கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுப் பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம். இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
- ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் உள்ளது
- சிதலமடைந்த இடத்தினை புனரமைக்க வலியுறுத்தல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் நகராட்சி திருமண மண்டபம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 1994-ம் ஆண்டு கட்டப்பட்டு 1996-ம் ஆண்டு மக்கள் குறைந்த வாடகையில் திருமணங்கள் பொது நிகழ்ச்சிகள் நடத்திட பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த மண்டபம் தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டு நகராட்சிக்கு ஆண்டு வருமானம் செலுத்தப்பட்டு வந்தது. சுமார் 15,817 சதுர அடி பரப்பளவில் இந்த மண்டபம் அமைந்துள்ளது. தரைதளம் மற்றும் முதல் தளம் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது.
மேலும் மண்டபத்தின் வெளியே 11 கடைகள் வாடகைக்கு விடப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக ஒப்பந்த அடிப்படையில் பராமரித்து வந்த ஒப்பந்ததாரர் இறந்து விட்டதால் வாடகை பாக்கி செலுத்தாமல் மண்டபம் பயன்பாடு இல்லாமல் இருந்து வந்தது.
இந்த திருமண மண்டபத்தை புனரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மண்டபத்தினை முழுமையாக அகற்றிவிட்டு புதிய கட்டிடம் நவீன வசதிகளுடன் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்ட அறிக்கை தயார் செய்யவும் கலெக்டரிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் அமைந்துள்ள தேசிங்குராஜா மற்றும் ராணி பாய் சமாதி அமைந்துள்ள இடத்தை பார்வையிட்டு சிதலமடைந்த இடத்தினை புனரமைத்து போதிய வழிகாட்டி பலகைகள் மற்றும் தேசிங்கு ராஜா மற்றும் ராணி பாதை வரலாறுகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பதாகைகள் அமைத்து உரிய மரியாதை வழங்கிடும் வகையில் இந்த இடத்தினை மேம்படுத்திட வேண்டும் என கலெக்டரிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இந்த சமாதி அமைந்துள்ள இடம் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே இதனை முழுவதையும் சீரமைக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு தகவல் தெரிவித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் உத்தரவிட்டார்.
ஆய்வின் போது நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா மற்றும் நகர செயலாளர் பூங்காவனம், நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், வினோத் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அதிகாரி பேச்சு
- தொழில் நிறுவன உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் புதிய தொழில் தொடங்குவது மற்றும் மேம்படுத்துவது குறித்த சிறப்பு தொழில் முகாம் நடைபெற்றது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா முகாமை தொடங்கி வைத்து, தொழில் நிறுவனத்தினர் புதிய தொழில் தொடங்கிட கடன் உதவி கூறி வழங்கிய விண்ணப்பங்களை பெற்றார்.
அப்போது அவர் பேசியதாவது :-தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கடந்த நிதி ஆண்டில் ரூ.2050 கோடி வருவாய் கிடைக்க பெற்றது. நடப்பாண்டில் ரூ.3 ஆயிரம் கோடி எனக்கு நிர்ணயிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொழில் முதலீட்டாளர்களுக்கு கடன் உதவி வழங்குவதில் இந்திய அளவில் சிறந்த நிறுவனமாக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் விளங்கி வருகிறது.இந்நிறுவனம் இரண்டு இலக்குகளை நோக்கி தற்போது செயலாற்றி வருகிறது. முதலாவது இந்திய பொருளாதாரத்தில் தொழில்துறையில் தமிழ்நாடு முன்னிலை அடைய புதிய தொழில் நிறுவனங்களை தொழில் தொடங்கிட ஊக்குவிப்பது ஆகும்.
இரண்டாவது தமிழக முதலமைச்சரின் சிறிய முயற்சியில் தமிழகம் தொழில்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கிட 2030-ம் ஆண்டிற்குள் 1 ட்ரில்லியன் அளவுக்கு தொழில் முதலீடுகள் தமிழகத்தில் உருவாக்கும் வகையில் தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பது ஆகும்.கடன் உதவிகள் வழங்குவது மட்டுமல்லாமல் தொழில் நிறுவனங்கள் நீடித்த நிலையான தொழில் வளர்ச்சியை அடைந்து நிலையாக தொழில்களை தொடர்ந்து செய்திட உறுதுணையாக இருக்க தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அனைத்து உதவிகளையும் இணைந்து வழங்கி வருகிறது.
தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முன்னேற்றம் அதிக அளவில் இருந்து வருகிறது. இதனை அவர்கள் உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி பொருட்களை வழங்கவும் பல்வேறு நடவடிக்கைகளை கழகம் மேற்கொண்டு வருகிறது.
மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த தேவையான உதவிகளை வழங்க புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனம் இயங்கி வருகிறது.
இதன் கீழ் பல ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதன் மூலம் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2 மாநிலங்களில் ராணுவ தளவாட உபகரணங்கள் தயாரிக்க இந்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதில் உத்தரபிரதேசம் மற்றும் தமிழகம் தேர்வாகியுள்ளது.
தமிழகத்தில் சென்னை, சேலம், ஓசூர், திருச்சி மற்றும் கோவை மண்டலங்களில் இந்த உற்பத்தி பொருட்கள் உற்பத்தி செய்கின்ற மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.அதேபோன்று தமிழகம் கனரக வாகன உற்பத்தியில் இந்தியாவிலேயே முன்னிலையில் இருந்து வருகிறது.இதற்கு முக்கிய காரணம் உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் இத்தொழிலில் உற்பத்தியை செய்து வருகின்றன.
தமிழகம் மிகப் பெரிய அளவில் தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக உள்ளது. பல்வேறு வாய்ப்புகளை தமிழக அரசு திறந்து வைத்துள்ளது.ஆகவே இந்த வாய்ப்புகளை தொழில் தொடங்குவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் முக்கிய நோக்கம் தொழில் தொடங்குபவர்கள் தொழிலில் வெற்றி பெற வேண்டும். அதன் மூலம் மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு தந்து, தொழில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தொழில் நிறுவனங்கள் பங்காற்ற செய்வதே முக்கிய நோக்கம் ஆகும்.
ஆகவே நிறுவனங்கள் தொழில் தொடங்கிட கடன் உதவிகள் குறித்தும், உங்களுக்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளையும், உதவிகளையும் முகாமில் வருகை தந்துள்ள அலுவலரிடம் கேட்டு கடன் உதவிகளை பெற்று தொழில் தொடங்கிட முன் வாருங்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம் மேலும் சிறந்த தொழில் நகரமாக மாற்றிட தொழில் முனைவோர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முன்வந்து தொழில் தொடங்கிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த முகாமில் மண்டல மேலாளர் ரமேஷ், மாவட்டத் தொழில் மையம் மேலாளர் ஆனந்தன், பாரத மிகுமின் நிறுவன பொது மேலாளர் (பொறுப்பு) ராஜீவ் சிங், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக வேலூர் கிளை மேலாளர் கௌரி மற்றும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.






