என் மலர்
ராணிப்பேட்டை
- கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாத அவலம்
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த சூரை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 200 - க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி நடுநிலைப்பள்ளியாக இருந்த போது 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சத்துணவு (மதிய உணவு) வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் 9,10ம் வகுப்புகள் தொடங்கப் பட்டன. ஆனால் அந்த மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட வில்லை.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழ்பாண்டி, பெற்றோர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து சோளிங்கர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் ஆய்வு செய்து மாணவர்களுக்கு சத்துணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் 10 ஆண்டுகளாக மாணவ - மாணவிகளுக்கு மதிய உணவு வழங் காததற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பெற்றோர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- அரக்கோணத்தில் நடந்தது
- தூய்மை பணியாளர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் டவுன்ஹால் திருமண மண்டபத்தில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என் குப்பை என் பொறுப்பு தூய்மைப் பணியாளர்களை பெருமைப்படுத்துதல் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
அரக்கோணம் நகராட்சி ஆணையாளர் லதா தலைமையில் நகர மன்ற தலைவர் லட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
அரசு மருத்துவர் கோபிநாத், சுகாதார ஆய்வாளர் மோகன் மற்றும் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது
- பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட ஏராளமானார் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் டி.ஆர். எஸ்.குளோபல் பப்ளிக் சீனியர் செகன்டரி (சி.பி.எஸ்.இ) பள்ளியில் 9-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை கமாண்டன்ட் கபில் வர்மன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் கல்வியிலும் தம்மை சிறந்தவர்களாக வளர்த்துக் கொள்கின்றனர். விளையாட்டில் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை கற்றுக் கொள்கின்றனர். அதுவே அவர்கள் கல்வியிலும் சிறந்து விளங்குவதற்கு காரணமாக அமைகிறது எனவும் மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டி சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக அலுவலர் சுரேஷ் பாபு, என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர்கள் வீரமணி, விஜயன், பாலாஜி மற்றும் பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாணவர் தலைவர் ஜோஷ்வா நன்றி கூறினார்.
- உறவினர் வீட்டிற்கு சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த கருங்கால் மேடு கிராமத்தை சேர்ந்தவர். யுவராஜ் (வயது 36). இவர் நேற்று தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக தனது பைக்கில் காவேரிப் பாக்கத்தில் இருந்து பாணாவரம் வழியாக சென்று கொண்டிருந்தார்.
கட்டளை கிராமம் அருகே ஏரிக்கரை சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காயமடைந்த யுவராஜ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் ஆகியோர் யுவராஜ் உடலை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து யுவராஜ் தம்பி குமார் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கணவர் உள்பட 3 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
தர்மபுரியை சேர்ந்தவர் பாலாஜி ( வயது 42 ) . இவரது மனைவி கவிதா ( 41 ) . இவர்களது மகன் தருண்வர்ஷன் ( 18 ) .
இவர் சென் னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் -2 படித்துள் ளார் . அதற்கான சான்றிதழ் வாங்குவதற்காக நேற்று முன்தி னம் காலை காரில் தர்மபுரியில் இருந்து சென்னைக்கு புறப் பட்டனர். காரை நேதாஜி என்பவர் ஓட்டிச்சென்றார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி மேம்பாலத்தில் சென்றபோது, காருக்கு முன்னால் மணல் பாரம் ஏற்றிய டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது . இந்த லாரி மீது திடீ - ரென கார் மோதியது. இதில் காரில் இருந்த நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு - மேல்விஷாரம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவிதா பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து திருவண்ணாமலை மாவட்டம் போளூர் கஸ்தம்பாடியைச் சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் பிரபு ரத்தினகிரி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு . செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் கோரிக்கை
- புகார் அளித்தும் எந்த நடிவடிக்கையும் எடுக்கவில்லை
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட் பட்ட பஜார் பகுதியில் நகராட் சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட் உள்ளது . இங்குடில் சுமார் 50 - க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன.
இந்த கடைகள் கட்டி 40 ஆண்டுகளுக்கு மேலானதால் கட்டி டம் முழுவதும் சேதமடைந்து உள்ளது. எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்து ஏற் படலாம் என்பதால் வைத்திருப்பவர்கள் மார்க்கெட் தெருவில் கடை கள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்
கடை இதனால் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் நடந்து கூட செல்லமுடியாத அளவிற்கு கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
திருவிழா, அமாவாசை நாட்களில் சோளிங்கர் மற்றும் சுற் றுப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் காய்கறிகள் வாங்க வரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக் குள்ளாகி வருகின்றனர்.
எனவே மார்க்கெட்டில் உள்ள பழைய கடைகளை அகற்றி புதிய கடை கள் கட்டித்தர வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறாக மார்க்கெட் தெருவில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- டிரைவர் கைது
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த கணியனூர் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையிலிருந்து ஒரே நபர் அதிகப்படியான மது பாட்டில்கள் வாங்கிச் செல்வதாக ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்திற்கு தகவல் கிடைத்தது .
அதன் பெயரில் ராணிப்பேட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் திமிரியில் உள்ள கலவை ரோட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் . அப்போது கீழ்ப்பாடி கூட்ரோடு அருகே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் அட்டை பெட்டிகளில் 600 மது பாட்டில்கள் ஏற்றி வந்தது தெரிய வந்தது . மேலும் இந்த மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்றதும் தெரியவந்தது . இதனைத் தொடர்ந்து ஆட்டோ மற்றும் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் திமிரியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவக்குமாரை ( வயது 46 ) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
- அரக்கோணம் எம்.ஆர்.எப். நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த கும்பினிபேட்டையில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த இவ்விழாவில் அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலர் முனிசுப்ரவராயன் முன்னிலை வகித்தார்.
தலைமை ஆசிரியர் கரி முல்லா அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக அரக்கோணம் எம் ஆர் எப் நிறுவனத்தின் மேலாளர் ஜான் டேனியல் கலந்து கொண்டு கழிவறை கட்டிடத்தை திறந்து வைத்து பள்ளிக்கு நல்ல திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது எம்.ஆர்.எப். நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் கஜேந்திரன் பாதுகாப்பு அலுவலர் பிரசாந்த் மற்றும் எம்ஆர்எப் நிறுவன அதிகாரிகள் உடனிருந்தனர். விழாவில் பஞ்சாயத்து தலைவர் சுந்தரம் அரக்கோணம் ஒன்றிய கவுன்சிலர் நரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- நெமிலியில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்தி றனாளிகளுக்கான இக்கூட்டத்தில் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்விற்கு, தமிழக அரசு மேற்கொள்ளும் சிறப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்சரவணன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் அரசு நலத்திட்டங்கள் மற்றும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கவுரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதமுத்து, சிவராமன், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள், அங்க ன்வாடி பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
- வருமான வரி சோதனை முடிந்து சென்னை திரும்பியபோது விபத்து
- எஸ்.பி.தீபா சத்யன் நலம் விசாரித்தார்
வாலாஜா:
ஆம்பூரில் ஃபரிதா குழுமத்திற்கு சொந்தமான தோல்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் கடந்த சில நாட்களாக சென்னையை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பதாக எழுந்த புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வந்த சோதனையில் சென்னை ஆயுதப்படையை சேர்ந்த பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று சோதனை நிறைவு பெற்றதை தொடர்ந்து, சென்னை ஆயுதப்படை பெண் போலீசார் வேன் மூலம் சென்னைக்கு திரும்பி வந்தனர்.
சுமைதாங்கி அருகே வந்த போது முன்னாள் சென்ற லாரியின் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் பயணித்த 13 பெண் காவலர்களில், 7 பேருக்கு காயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீதமுள்ள பெண் காவலர்கள் பாதுகாப்பாக காவேரிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த பெண் போலீசாரை ஆஸ்பத்திரிக்கு சென்று சந்தித்து எஸ்.பி.தீபா சத்யன் நலம் விசாரித்தார்.
- தாக்கிய அண்ணன்- தம்பி கைது
- ஒருவழி பாதையில் வந்ததால் தகராறு
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கிளைவ் பஜார் பகு தியை சேர்ந்தவர் தாகூர் சுந்தர் (வயது 49). ஊர்க் காவல் படை வீரரான இவர் நேற்று முன்தினம் ஆற்காடு பஸ் நிலையம் அருகே போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட் டிருந்தார்.
அப்போது ஆற்காடு அடுத்த முப்பது வெட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (28) என்பவர் ஒருவழிப் பாதையில் ஆட்டோவை ஓட்டி வந்தார். இதனை தாகூர் சுந்தர் தட்டிக் கேட்டுள்ளார்.
இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . வாக் குவாதம் முற்றி ஆட்டோ டிரைவர் ஜெயக்குமார், அவரது அண்ணன் ஜெயமுருகன் ( 30 ) ஆகிய இருவரும் சேர்ந்து தாகூர் சுந்தரை ஆபாசமாக திட்டி, தாக்கியுள்ளனர்.
இது குறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயக் குமார், அவரது அண்ணன் ஜெயமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
- காயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
- 2 பேர் படுகாயம்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே உள்ள தனி யார் தொழிற்சாலையில் கடந்த மாதம் 14 - ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளிகள் தீக்காயம் அடைந்தனர். இவர் கள் 2 பேரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கத்தாரிகுப்பத்தை சேர்ந்த நேதாஜி ( வயது 50 ) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .






